Monday, July 3, 2017

உலக செய்திகள்:

உலக செய்திகள்:
• அதிநவீன வசதிகளை கொண்ட புதிய தலைமுறை நாசகார கப்பல் ஒன்றை கண்டுபிடித்து தன் நாட்டுக்கு அர்ப்பணம் செய்தது சீனா. கடற்படை ஆயுத அமைப்பை மேம்படுத்துவதில்  இக்கப்பல் சிறந்ததாக  விளங்கும் என எதிர்பாhக்கப்படுகிறது.இதற்கான நிகழ்ச்சி ஷாங்காயில் நடந்தது.

• வருங்கால  மனித உணவு தேவையைக் குறித்து கணக்கிட்டால் 2050 ஆம் ஆண்டுக்குள்   உணவு உற்பத்தி 70 சதவீதம் உயர வேண்டும். ஆனால் விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது இச்சூழல் இப்படியே நீடித்தால் வருங்காலத்தில் பூச்சிகளை உண்ணக்கூடிய நிலை ஏற்படும் என அறிவியல்  ஆராய்ச்சியாளர்கள் ஒரு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவிக்கின்றனர்

• மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் நகரை தேர்ந்தெடுத்து அந்நகருக்கு ‘புத்தகத் தலைநகர்’ என்ற அந்தஸ்தை கொடுக்கும் திட்டத்தை ஐ.நா வின் யுனெஸ்கோ அமைப்பு அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் வரும் 2019-ஆம் ஆண்டுக்கான உலக புத்தகத் தலைநகராக ‘ஷார்ஜா’ நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

• ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்கான விருது அமெரிக்க அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இவ்விருதிற்காக இந்தியக் காவல் துறை அதிகாரியான தெலுங்கானா மாநிலம் ரச்சகொண்டா நகர காவல் துறை ஆணையர் மகேஷ் முரளிதர் பகவத் தேர்வுசெய்யப்பட்டார். ஆமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி இவ்விருதை வழங்கினார்.

• ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியிலன் 9-வது பதிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் புதியதாக 900 ஆங்கில வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றில் இந்தியஆங்கிலத்தில் இருந்து 240 வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும். இந்திய உணவுப்பொருளாகும். கறி லீப் (கறிவேப்பிலை) கென்னா தால் (சுண்டல்) கீமா (வெட்டப்பட்ட இறைச்சி துண்டுகள்) பப்பட் (அப்பளம்) போன்றவையாகும்.

• 6 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்  அமெரிக்காவில் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவில் தளர்வு ஏற்ப்பட்டுள்ளது. தங்கள் நெருங்கிய உறவினரை பார்க்க மற்றும் தொழில் ரீதியாக ( சீரியா சூடான் ஈரான் லிபியா சோமாலியா ஏமன்) போன்ற 6 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார்.

• தென் கொரியா முன்னாள் அதிபர் கியூன்ஹை வடகொரியா கிம் ஜாங்யை விமானத்தில் குண்டு வைத்து கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த விவகாரத்தில் கியுன்ஹைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வட கொரியா  பத்திரிக்கையான கேசின்ஏ தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த அறிவிப்புக்கு ஜப்பான் கடூம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

• சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க வான்வழி தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 42 பொதுமக்களும் 15 ஐ.எஸ் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

• உலகிலேயே மதம் தொடர்புடைய முதல் பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பேனோஸ் ஐரீஸின் மையத்தில் “டியர்ரா சான்டா” என்ற பெயரில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்த  ஜெருசலேமின் தெருக்களை அப்படியே பிரதிபலித்து காட்டுவதற்காக டியர்ரா சான்டா என்ற அமைப்பு இப்பூங்காவை உருவாக்கியுள்ளது.  

தேசிய செய்திகள் :

• புதுடெல்லியில் மத்திய ரெயில்வே துறையால் வழங்கப்படும்  ரெயில் டிக்கெட்டுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலே உள்ளன. இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் வசதி குறைவாக உள்ளது.எனவே டிக்கெட்டுகளை அந்தந்த மாநில மொழிகளில் அச்சிட்டு வழங்க வேண்டும் என்று பயணிகளும் பல்லேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிணங்க  ரெயில் டிக்கெட்டுகள் தமிழில் வழங்கபட உள்ளாதாகவும் வரும் பொங்கல் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

• வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதால் ஆண்டுதோறும்  71 சதவீதம்   பயிர்கள் சேதம் அடைவதாகவும்  17 சதவீதம் மதிப்புள்ள கால்நடைகள்  உயிர் இழப்பதாகவும்  3 சதவீதம் மனித உயிர் பறிபோவதும் தெரிய வருகிறது. எனவே உயிர் மற்றும் பொருட்சேதத்தை தவிர்க்க வன விலங்கு எதிர் கொள்ளல் மேலாண்மையை இந்திய அரசு வலுப்படுத்துவது அவசியம் என சர்வதேச விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றன.

• நாட்டில் முதல் முறையாக ஒடிசா தலைநகர் புவனேஸ் வரத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.3.35 கோடியில் கால்நடைகளுக்கான இரத்த வங்கி தொடங்கப்பட உள்ளது. இதற்கு தேசிய வேளாண் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். மத்திய அரசு 60 சதவீதம் மாநில அரசு 40 சதவீத பங்களிப்புடன்  இந்த இரத்த வங்கி தொடங்கப்படும்.

• புதுடெல்லியில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி கிலோவிற்கு ரூ.3 கோதுமை ரூ.2 பிற தானியங்கள் ரூ.1 என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றன. உணவு தானியங்களின் விலையை மேலும் ஓராண்டு உயர்த்துவதில்லை என மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்  கூறியுள்ளார்.

• தோலைத்தொடர்பு டிடிஹெச் (னுவுர்) சேவை மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 செயற்கைகோளை பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது. இன்று அதிகாலை 2.29 மணிக்கு இந்த செயற்கை கோள விண்ணில் பாய்ந்தது. புpன்னர் ஜிசாட்-17 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.இதன் எடை 3.477 கிலோவாகும் . இதன் ஆயுட்காலம் 15 அண்டுகள் ஆகும்.

• 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து புதிதாக 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது புதுடெல்லியில் ஆர்பிஐ அச்சகங்களில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும்  இப்பணியை இரண்டு வாரங்களுக்கு முன்பே துவங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

• குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறும். வேட்பு மனு தாக்கல் ஜுலை 4 ம் தேதி  தொடங்குகிறது.18 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் 790 பேர்  வாக்களித்து குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள்.

விளையாட்டு செய்திகள்:

• இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஏகான் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

• 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் ஜூலை 6 -9 வரை நடைபெறவுள்ளது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 1000க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

• சீன தைபே கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியர்களான சிரில் வர்மா, ஸ்ரீ கிருஷ்ண பிரியா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

• அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் தலைவராக பி.ஆர்.வெங்கட்ராம் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2017 – 2020 வரை தலைவராக இருப்பார். தில்லியைச் சேர்ந்த பரத்சிங் சௌஹான் கௌரவ செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

• புரோ கபடி லீக் போட்டியின் 5வது சீசன் ஜூலை 28ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இப்போட்டியின் இறுதிச்சுற்று சென்னையில் அக்டோபர் 28ம் தேதி நடைபெறவுள்ளது.

• விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3 முதல் 16 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே முதலிடம் பிடித்துள்ளார்.

• மகளிர் உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஜூன் 27 அன்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டது.

     வர்த்தக செய்திகள்:

• ஏர்இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க இண்டிகோ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

• புp.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிக்சர் அல்லது 666 என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2ஜிபி டேட்டா பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

• நடப்பு நிதியாண்டில் ஆடை ஏற்றுமதி 2000 கோடி டாலரை எட்டும் என இந்திய ஆடை தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராகுல் மேக்தா தெரிவித்துள்ளார்.

• சீனாவைச் சேர்ந்த எஸ்.ஏ.ஐ.சி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவில் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

• கோக கோலா நிறுவனம் விலை உயர உள்ளது. ‘கின்லே’ பிராண்டு தண்ணீர் விலை குறைக்கப்பட உள்ளது. ‘வேல்யு வாட்டர்ஷ என்ற பிரிவில் தண்ணீர் இதை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உ;ள்ளது.

• ரஷ்யா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ‘யெட்ரா வைரஸ்’ என்ற கணிகி நாசகர செயலியால் பாதிக்கப்பட்டன.

No comments:

Post a Comment