Monday, July 3, 2017

நடப்பு நிகழ்வுகள்

தமிழ்நாடு

1. தமிழக உற்பத்தித் துறை வளர்ச்சி, பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
தமிழகத்தில் உற்பத்தித்துறையின் வளர்ச்சி விகிதம் 2016-17 ஆம் நிதியாண்டில் 1.65 சதவீதமாக குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.


இந்தியா

1. அதிக கடன் பட்டியலில் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்கள் முன்னிலை: ரிசர்வ் வங்கி தகவல்
அதிக கடன் பெற்றுள்ள மாநிலங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய கையேட்டினை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.

2. உதவியாளர் முறையை நீக்க ராணுவம் அதிரடி திட்டம்
ராணுவத்தில் உயர் அதிகாரிகளுக்கு, அவர்களது பணிகளை மேற்கொள்வதற்கு உதவும் வகையில், சகாயக் என்ற, உதவியாளர் பணிகளுக்கு, பயிற்சி ராணுவ வீரர்கள் நியமிக்கப்படுகின்றனர். சகாயக் என்ற, உதவியாளர் பணிகளை, ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கும் முறையை கைவிட, ராணுவம் திட்டமிட்டுள்ளது.


விளையாட்டு

1. சர்வதேச குத்துச்சண்டை: அங்குஷ் தாஹியாவுக்கு தங்கம்
உலன்பாதர் கோப்பைக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அங்குஷ் தாஹியா தங்கம் வென்றார்.
மங்கோலிய தலைநகர் உலன்பாதரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவில் அங்குஷ் தாஹியா, தென் கொரியாவின் மான் சோ சோலை தோற்கடித்தார்.
அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான தேவேந்திரோ சிங் (52 கிலோ) தனது இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் அல்டாம்ஸ் சுகுரோவிடம் தோல்வி கண்டார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. இந்தப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றது.

2. மும்பையில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது.

3. ஆஸ்திரேலிய ஓபன்: ஸ்ரீகாந்த் சாம்பியன்!
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இது, ஸ்ரீகாந்த் வென்ற 4-ஆவது சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.
45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கடும் போராட்டத்துக்குப் பிறகு 22-20 என்ற கணக்கில் கைப்பற்றிய ஸ்ரீகாந்த், அடுத்த செட்டை
21-16 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார். சென் லாங்கை முதல்முறையாக வீழ்த்தியிருக்கிறார் ஸ்ரீகாந்த். முன்னதாக அவருடன் 5 ஆட்டங்களில் மோதியிருந்த ஸ்ரீகாந்த், அவையனைத்திலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் ஆனதன் மூலம் தொடர்ச்சியாக 2 சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஸ்ரீகாந்த். கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேசிய ஓபனிலும் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றிருந்தார்.

4. ஹாலே ஓபன்: ரோஜர் ஃபெடரர் சாம்பியன்!

ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 9-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜெர்மனியின் ஹாலே நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஃபெடரர் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்தார். ஆரம்பம் முதலே ஃபெடரர் ஆதிக்கம் செலுத்தியதால், இந்த ஆட்டம் 53 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.


அறிவியல் தொழில்நுட்பம்

1. ஆண்டுக்கு 100 கோடி மரங்களை நடும் ஆளில்லா விமானம்!
ஆண்டுக்கு 100 கோடி மரங்களை நடும் ஆளில்லா விமானம்! ஆண்டுக்கு 100 கோடி மரங்களை நடும் ஆளில்லா விமானத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த பயோகார்பன் என்ஜினியரிங் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த விமானத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். 
மரங்கள் வளர்வதற்கு உரிய தேவையான நிலங்களை ஆளில்லா விமானம் கண்டறிந்து, விதைகளை தாமாகவே மண்ணுக்குள் செலுத்தும். செங்குத்தான மலைப் பகுதிகளை முன்பு அடைய முடியாத இருந்த நிலை மாறி தற்போது அதுபோன்ற இடங்களிலும் இந்த ஆளில்லா விமானத்தின் மூலம் மரங்களை நட முடியும் என்பது இதன் தனிச் சிறப்பு.
மரங்களை நடுவதற்கு மிகவும் பொருத்தமான இடங்களைக் கண்டறிந்து விதைகளைத் தூவ அந்த நிலங்களின் முப்பரிமாண மாடல் ஆளில்லா விமானங்களில் பயன்படுத்தப்பட்டது.
மேலும், புள்ளிவிவரங்களைப் பதிவிறக்கம் செய்து அதனை மேம்படுத்தி, மரம் நடுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம், மரங்களை எங்கு நடலாம் என்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழலை எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பது குறித்தும் துல்லியமான முடிவுகளையும் மேற்கொள்ள முடியும்.
உலகில் ஆண்டுதோறும் 1,500 கோடி மரங்கள் அழிக்கப்படுகின்றன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கரிலான காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்படுகின்றன.


முக்கிய நாட்கள் / வாரங்கள்

1. சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்: ஜூன் 26- 1987.
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகாளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஜூன் 26ம் நாளன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும்.


பொருளாதாரம்

1. ஜிஎஸ்டி முறை மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு: பொருளாதார வல்லுநர்கள் கருத்து
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின் வரி விதிப்பு, கணக்கியல் உள்ளிட்ட துறைகளில் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
"ஒரு நாடு ஒரு வரி" என்ற நோக்கத்தில், ஜிஎஸ்டி ஜூலை 1 -ஆம் தேதி அமல்படுத்தப்பட உள்ளது. தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வரப்படும் சரக்கு - சேவை வரியின் பயனாக, வரி ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) தெளிவாக இருக்கும்; நாட்டின் பொருளாதார விகிதம் உயரும். சில்லறை வணிகம் முதல் பெரிய அளவிலான வணிகம் வரை அனைத்தும் கணினிமயமாக்கப்படும்.
இதற்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்டி. மேலாண்மை மற்றும் மேம்பாட்டிற்காக ஆட்களை பணியில் அமர்த்த வேண்டியது அவசியம். எனவே, வரித் துறை, கணக்கு மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகிய துறைகளில் உடனடி வேலைவாய்ப்பு உருவாகும் என்று இந்திய பணியாளர் நியமன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முதல் காலாண்டில் ஒரு லட்சம் பேருக்கு உடனடி வேலைவாய்ப்பும், பின்னர், சிறிது காலத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வருவதால் ஆண்டுதோறும் 10 முதல் 13 சதவீதம் வரை வேலைவாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் இந்திய பணியாளர் நியமன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment