Monday, July 3, 2017

தமிழ்நாடு

1. குடியரசுத் தலைவர் தேர்தல் எம்.பி.- க்கள், எம்எல்ஏ- க்களுக்கு வண்ண வாக்குச் சீட்டு!!!
குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை வண்ணத்திலும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஊதா நிறத்திலும் வாக்குச்சீட்டு தரப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

2. டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு!
தமிழகக் காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.
தமிழகக் காவல்துறையின் உளவுப்பிரிவு டி.ஜி.பி.யாக தே.க.ராஜேந்திரன் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது அவர், தமிழகக் காவல்துறையின் முக்கியப் பதவியான சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. பணியைக் கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பார் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், ராஜேந்திரன், ஜூன் மாதம் 30-ஆம் தேதியோடு ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால், ராஜேந்திரனுக்கு இரு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு மத்திய உள்துறையின் அனுமதியும், மத்திய தேர்வாணையத்தின் அனுமதியும் பெறுவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசின் உள்துறையும், மத்திய தேர்வாணையமும் ராஜேந்திரனுக்கு இரு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு அனுமதி வழங்கியது.
ஏற்கெனவே டி.ஜி.பி.யாக இருந்து ஓய்வு பெற்ற ராமானுஜம், அசோக்குமார் ஆகியோர் இதேபோல ஓய்வு பெறும் நாளில் இரு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு பெற்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இப்போது ராஜேந்திரன் மூன்றாவது டி.ஜி.பி.யாக இரு ஆண்டுகள் பதவி நீட்டிப்புப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பணிக்காலம் வரும் 2019- ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.


இந்தியா

1. அமலுக்கு வந்தது ஜிஎஸ்டி: 70 ஆண்டுகால வரிவிதிப்பு நடைமுறைக்கு முற்றுப்புள்ளி!!!
சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் சரக்கு சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி) நடைமுறை நாடு முழுவதும் ஜூலை 1 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த வரிவிதிப்புக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதிலும் ஒரே சீரான வரிவிதிப்பு முறை வழக்கத்துக்கு வந்துள்ளது.

2. அட்டர்னி ஜெனரலாகிறார் கே.கே. வேணுகோபால்!
அட்டர்னி ஜெனரலாக (மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர்) நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோ பால் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.
முன்னதாக, இப்பொறுப்பில் இருந்த முகுல் ரோத்தகி தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
86 வயதாகும் வேணுகோபால் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார். பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அண்மையில் அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் அத்வானி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் சார்பில் வேணுகோபால் ஆஜரானார்.

3. தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைத்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்துக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு
தொழில் தாவா வழக்குகளுக்கான தீர்ப்பாயம், கடன் வசூலிப்பு தீர்ப்பாயம் உள்பட மொத்தம் 27 தீர்ப்பாயங்கள் இருந்தன. இதில், 8 தீர்ப்பாயங்களை இழுத்து மூடிவிட்டு, அதை மீதமுள்ள 19 தீர்ப்பாயங்களுடன் இணைத்து மத்திய அரசு சட்டமசோதாவை தாக்கல் செய்தது. இதில் நிதி தொடர்பான தீர்ப்பாயங்களும் உள்ளன.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்துக்கும், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் இந்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்புக்கும் எதிராக உள்ளது. நிதி தொடர்பான சட்டமசோதாவுக்கு டெல்லி மேல்- சபையில் ஒப்புதல் பெறாமல், சட்டமாக்கப்பட்டுள்ளதால், இதற்கு தடைவிதிக்க வேண்டும். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.


உலகம்

1. நுண்ணறிவுத் திறன் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவன் சாதனை:
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் அர்னவ் சர்மா, மென்சா நுண்ணறிவு போட்டியில் (ஐக்யூ) 162 புள்ளிகளைப் பெற்று உலகிலேயே அதிக அறிவு திறன்மிக்க விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளினான். இதன்மூலம் உலகின் அதிக அறிவுக் கூர்மை பெற்ற முதல் சிறுவனாக விளங்குகிறான்.


விளையாட்டு

1. சிறுவயது தோழியை கரம்பிடித்த நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி
பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தனது சிறுவயது தோழி அண்டோனல்லா ரோகுசோவை நேற்று திருமணம் செய்து கொண்டார்


முக்கிய நியமனங்கள்

1. இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நீடிப்பார்: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!!!
இந்திய "ஏ" மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் 2015-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிய இருந்த நிலையில் அவர் மேலும் 2 ஆண்டுகள் இந்த பதவியில் நீடிப்பார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.


அறிவியல் தொழில்நுட்பம்

1. புதிய இணைய வைரஸ்: பொருளாதார அழிவை ஏற்படுத்துவதே நோக்கம்
கணினிகளின் செயல்பாட்டை முடக்கும் புதிய வகை ரான்சம்வேர் இணைய வைரஸ் உலகின் பல பாகங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கணினிகளையும் முக்கிய அமைப்புகளின் மின்னணு சேமிப்பகங்களையும் ஊடுருவித் தாக்குவதன் மூலம், அதிகபட்ச பாதிப்பையும் பொருளாதார அழிவையும் ஏற்படுத்துவதே உண்மையான நோக்கம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் அமைந்துள்ள சர்வதேச சரக்குப் போக்குவரத்துக் கப்பல் நிறுவனம் மேர்ஸ்க், மருந்து நிறுவனம் மெர்க், பிரபல கூரியர் நிறுவனமான ஃபெடரல் எக்ஸ்பிரஸ் இணைய வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. ரஷியா, ஜெர்மனியில் பல நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. மின் கட்டமைப்புகள் முடங்கின. உக்ரைனில் ஏ.டி.எம்.கள், விமானப் போக்குவரத்து சேவை உள்ளிட்டவை இணைய வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகின.
உக்ரைனில் வங்கிகளின் கணினி சேமிப்பகங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. வங்கி சேவைகளை விரைந்து வழங்க முடியவில்லை.


முக்கிய நாட்கள் / வாரங்கள்

1. இன்று தேசிய டாக்டர்கள் தினம்
சமூகத்திற்காக நேரம், காலம் பார்க்காமல் மருத்துவ சேவையாற்றுபவர்கள் டாக்டர்கள். உயிரை காப்பாற்றும் உன்னத பணியை செய்வதால், கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகின்றனர். இவர்களது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜூலை 1ல், தேசிய டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2. கல்பனா சாவ்லா பிறந்த தினம்: ஜூலை 1- 1961.
இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபி குடும்பத்தில் 1961-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் "கற்பனை" என்று பொருள்.
கல்பனா மார்ச் 1995-ல், நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 1996-ம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19-ம் நாள், 1997-ம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984-ல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியா பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.4 மில்லியன் மயில்கள் கடந்து பூமியைச் சுற்றி சிதறி இருக்கும் 252 கோளப்பாதைகளை வலம் வந்துள்ளார்.
1991-1992-ல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாய் அமைந்தது.
STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியது. அதில் கல்பனா சாவ்லா உயிர் இழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் பொருட்டு நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.


பொருளாதாரம்

1. புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
இந்தியாவின் தேசிய ஆவண காப்பகத்தின் 125-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக 10 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளது. இந்த புதிய நாணயத்தின் மத்தியில் அசோகா தூணில் சிங்க முகமும், அதற்கு கீழ் சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் இடப்பக்கம் பாரத் என்று தேவநாகரியிலும், வலது பக்கம் இந்தியா என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். சிங்கமுகத்தின் கீழ் பகுதியில் ரூபாயை குறிக்கும் குறியீடும், மதிப்பிலக்கம் 10 என்பது எண்ணிலும், நாணயத்தின் மறுபக்கம் தேசிய ஆவண காப்பக கட்டிடத்தின் உருவப்படம் மத்தியிலும், உருவப்படத்தின் கீழே 125 என்று ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.


நடப்பு நிகழ்வுகள் – 01 ஜூலை 2017

தமிழகம்

1.தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் உபயோகிப்பாளர்களுக்கு எளிதில் கிடைத்திட ஏதுவாக ‘தமிழ்நாடு மணல் இணைய சேவை’ http://www.tnsand.in இணையதளத்தையும், tnsand என்ற
செல்லிடப்பேசி செயலியையும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

இந்தியா

1.54வது மிஸ் பெமினா இந்தியா ( 2017) போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த மனுஷி சாலார் பட்டம் வென்றுள்ளார்.ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த சனா துவா 2வது இடமும், பீகாரின் பிரியங்கா குமாரி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.மிஸ் ஆக்டிவ் கிரீடம் விருது வினைல் பட்நாகர் பெற்றுள்ளார்.உடல் அழகிய சிறப்பு விருது வெமிகா நித்தி பெற்றுள்ளார்.

உலகம்

1.கூகுள் நிறுவனம், தனது தேடல் வசதி மூலம் (search engine) கிடைக்கும் தேடல் முடிவுகளில், தனது சந்தை ஒப்பிட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது 2.42 பில்லியன் யூரோ அபராதத்தை, ஐரோப்பிய ஆணையம் விதித்துள்ளது.

2.அமெரிக்காவின் பயோகார்பன் இஞ்சினியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த சூசன் கிரஹாம் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் ஆண்டுக்கு 100 கோடி மரங்களை நடும் ஆளில்லா விமானத்தை உருவாகியுள்ளனர்.

விளையாட்டு

1.லோதா கமிட்டியின் பரிந்துரைகளை ஆராய BCCI சார்பில் , ராஜிவ் சுக்லா (IPL தலைவர்) தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

2.வெனிஸ் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான உலக கட்டழகி பட்டத்தை, இந்தியாவின் பூமிகா சர்மா வென்றுள்ளார்.உலக கட்டழகி போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை, பூமிகா சர்மா அடைந்துள்ளார்.

இன்றைய தினம்

1.1843 – மதராஸ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

2.1874 – முதலாவது வர்த்தகரீதியிலான தட்டச்சுக் கருவி விற்பனைக்கு வந்தது.

3.1890 – கனடாவும் பெர்முடாவும் தந்திச் சேவையில் இணைந்தன.

4.1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

5.1931 – யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது.

6.1932 – ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.

7.1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.


உலக செய்திகள் :
அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்து சென்று அந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த பிற நாட்டவர்களுக்கு  அந்த நாட்டின் சுதந்திர தினத்தன்று “மாபெரும் இடம் பெயர்ந்தோர் விருது” வழங்கி சிறப்பிக்கஉள்ளனர். மொத்தம் 39 தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இதில் இரண்டு பேர் இந்திய வம்சாவழியினர் ஆவார்கள்.

தெற்கு அமெரிக்கா நாடான சிலியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே ஆப்ரேஷன் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாயின. இக்காட்சி அங்குள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கியை கைக்கொள்ளலாம். இதனால் கல்லூரி வளாகத்தில் ஏற்படும் துப்பாக்கி சூட்டை தடுக்கலாம் என்று அமெரிக்காவின் சிகாகோ மாநில அரசு தெரிவித்துள்ளது.


உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி அணு ஆயுதம் தயாரித்து சோதனை மேற்கொள்ளும் வட கொரியா மீது காட்டிய பொறுமையை அமெரிக்கா இழந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்தால் தமிழக படகு உரிமையாளர்க்கு ரூ.20 இலட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என்று இலங்கை மீன்வளத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.


ஐ.நா அமைதி மேம்பாட்டு நிதியத்துக்கு இந்தியா மேலும் 5 இலட்சம் டாலர்(சுமார் 32 கோடி) நிதி வழங்கியுள்ளது.இத்தகைய பங்களிப்பு உலக  நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிக்கிம் மாநில எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்திய இராணுவத்தை திரும்ப பெறப்பட்ட பிறகே அந்நாட்டுடன் பேச்சவார்த்தை என்று சீனா அரசு தெரிவித்துள்ளது.


தேசிய செய்திகள் :

ஆதார் பான் எண் (நிரந்தர கணக்கு எண்) ஆகியவற்றை இணைப்பதற்கு ஒருபக்க பாரத்தை பூர்த்தி செய்து அனுப்பும் புதிய நடைமுறையை வருமான வரித்துறை அறிமுகப்படித்தியுன்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் மண்டியா மாவட்டத்தில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சரக்கு சேவை மற்றும் ஜி.எஸ்டி வரி விதிப்பு முறையால் இந்தியாவின் பொருளாதாரத்தி;ல் முன்னேற்றம் ஏற்படும் என்று உத்தரகண்ட்   மாநில பா.ஜ.க. முன்னாள் எம்.பி தருண் விஜய் தெரிவித்துள்ளர்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்குவது 45 சதவீதம் குறைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சரக்கு சேவை வரி நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் சில குறிப்பிட்ட உதிரி பாகங்களுக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும்படி பிரிவினைவாதிகள் தூண்டிவிடுவதாக அஜ்மீர் தர்கா தலைமை மதகுரு ஜெய்னுல் அபேதின் அலிகான் குற்றஞ்சாட்டுகிறார்.

இந்திய பெற்றோர்கள் தங்கள்  குழந்தைககளின் படிப்பிற்கு (தொடக்கக்கல்வி முதல் இளங்களை பாடம் வரைக்கும்)  ரூ.12.22 லட்சம் செலவு செய்கிறார்கள் என எச்.எஸ்.பி.சி நடத்திய கல்வி மதிப்பு என்ற ஆய்வில் தெரியவருகிறது.

2022 ஆம் ஆண்டு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாடு தன்னிறைவு பெற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

விளையாட்டு செய்திகள்:

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3–வது ஒருநாள் போட்டியில் தோனியின் அரைசதத்தினாலும் ஸ்பின்னர்களினாலும் இந்திய அணி 251 ரன்கள் இலக்கே வெற்றியாக மாறியது என்று தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா ஏ அணியின்  பயிற்சியாளரான ராகுல் ராவிட் ஊதியம் ரூ.2.5 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்ந்துள்ளது.

புவனேஷ்வரில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டியில் 95 பேர் கொண்ட  இந்திய அணி கலந்து கொள்ள போவதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

மெக்சிகோவின் பலவீனமான துடுப்பு உத்தியை சரியாக பயன்படுத்திய  ஜெர்மணி கான்பெடரேஷன் கோப்பை அரையிறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியில் சிலி அணியை சந்திக்க உள்ளது.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்மிரிதி மந்தனா அதிரடி சதத்தால் மேற்கிந்திய தீவுகளை வீழத்தி வெற்றி பெற்றது இந்திய அணி.


இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் இன்று(02—7-2017) மோதி கொள்கின்றன.

வர்த்தக செய்திகள்:


உணவு தானியங்கள் பால் தயிர் முட்டை இதர பால் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலைகள் குறைக்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் சில குறிப்பிட்ட உதிரிபாகங்களுக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள மின்சாரம் உரம் சிமென்ட் கச்சா எண்ணெய் நிலக்கரி உள்ளிட்ட 8 துறைகளின் உற்பத்தி  வளர்ச்சியில் 3.6 சதவீதம் சரிவு ஏற்ப்படுள்ளது.

மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவீதமாக குறைத்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸ{கியின் இந்தியாவின் கார் விற்பனை சென்ற ஜுன் மாதத்தில் 7.6 சதவீதம் அதிகரித்தது.

சி.எஸ்.எஸ் நிறுவனத்தின்  முதல் நாள்; வர்த்தகம் நேற்று தொடங்கியது. முதல் நாள் வர்த்தகத்திலே 75 சதவீதம்  வih உயர்வடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லாபம் இல்லாமல் ஏர் இந்தியாவை வாங்க மாட்டோம் என்று பணியாளர்களுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சிஇஒ ஆதித்யா கோஷ் வாக்குறுதி அளித்துள்ளார்.

🔵  *#அறிவிப்பு*

*குரூப் 4 -  இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி*

*தட்டச்சர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 முதல் 30ம் தேதி வரை நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி*

*சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-6 வரை கலந்தாய்வு நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி*

*கலந்தாய்வுக்கான விவரங்களை  http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்*

நடப்பு நிகழ்வுகள் – 03 ஜூலை 2017

இந்தியா

1.ஐ.நா. வரி நிதியத்திற்கு (U.N. Tax Fund) உலகிலேயே முதல் நாடாக இந்தியா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது.

2.தெலுங்கானா மாநிலம், ராச்சகொண்டா பகுதியில் பணியாற்றும் மகேஷ் முரளி பகவத் IPS அவர்களின் சிறப்பான செயல்பாடுகளுக்காக அமெரிக்காவின் ஹீரோ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

3.நாட்டில் முதல்முறையாக ஒடிஷா மாநிலத்தில் கால்நடைகளுக்கான ரத்த வங்கி தொடங்கப்பட இருக்கிறது.

உலகம்

1.லண்டனில் நடைபெற்ற ஏழாவது ஆசியன் விருதுகளில், ஹைதராபாத்தை சேர்ந்த Intellecap என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிஷா தத் “சிறந்த சமூக தொழில் முனைவர் விருது – 2017” (Social Entrepreneur of the Year) பெற்றுள்ளார்.

2.2019-ம் ஆண்டுக்கான யுனெஸ்கோ உலக புத்தக தலைநகரமாக ஷார்ஜா (ஐக்கிய அரபு எமிரேட்) அறிவிக்கப்பட்டுள்ளது.2018-ம் ஆண்டுக்கான யுனெஸ்கோ உலக புத்தக தலைநகரமாக ஏதென்ஸ் அறிவிக்கப்பட்டிருந்தது.2017-ம் ஆண்டுக்கான யுனெஸ்கோ உலக புத்தக தலைநகரமாக கோனகிரே அறிவிக்கப்பட்டிருந்தது.

3.உலகப் புகழ் பெற்ற, அமெரிக்காவின் Massachusetts Institute of Technology (MIT)யின் டீனாக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஆனந்த சந்திரசேகர் (தமிழர்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4.உலகிலேயே மதம் தொடர்புடைய முதல் பொழுதுபோக்கு பூங்கா அர்ஜென்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் நகரில் டியரா சான்டா (Tierra Santa) என்ற பெயரில் உருவாக்க்ப்பட்டு உள்ளது.

5.முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 10 ஆயிரம் டன் எடை கொண்ட போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய அதிநவீன போர் கப்பலை (Type 055) தனது நாட்டு கடற்படைக்கு சீனா அர்ப்பணித்துள்ளது.

 தமிழ்நாடு

1. பின்னலாடை தொழிலின் பெருமை கூறும் வகையில், திருப்பூர் மாணவர்கள் வரைந்த, டூடுல் ஓவியம், லிம்கா சாதனைக்கு தேர்வாகியுள்ளது.

2. அப்துல் கலாமின் இணையதளம் நாட்டுக்கு மறுஅர்ப்பணிப்பு!!!
அப்துல் கலாமின் இணையதளம் சாதாரண குடிமக்களால் நாட்டுக்கு மறுபடியும் அர்ப்பணிக்கப்பட்டது.
சாதனை இந்தியர்களை அறிந்துகொள்வதற்காக www.billionbeats.in (நூறு கோடிதுடிப்புகள்) என்ற இணையதளத்தை குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் 2007-ஆம் ஆண்டில் தொடங்கி நடத்திவந்தார். இதில், புதியன செய்து சமூக வளர்ச்சிக்கு பங்காற்றிய சாதனையாளர்கள் அறிமுகம், தனது பேச்சுகள், சிந்தனைகள், கேள்வி மற்றும் பதில்களையும் அப்துல் கலாம் வெளியிட்டு வந்தார். இந்த இணையதளம் சில காரணங்களால் செயல்படாமல் முடங்கி கிடந்தது.
இந்த நிலையில், அப்துல் கலாமின் மறைவுக்கு பின்னர் அவரது பேத்தியும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞருமான நாகூர் ரோஜா இணையதளத்தை மீண்டும் செயல்படுத்தியிருக்கிறார்.
சாதாரணகுடிமக்களான ராணி (வீட்டுப் பணியாளர்), ராஜேஸ்வரி (அடுக்குமாடி உதவியாளர்), செந்தில்(கட்டடத் தொழிலாளர்), பெஞ்சில்யன் (அலுவலக உதவிபையன்), சரோஜா (பள்ளி ஆயாம்மா) ஆகிய சாதாரணமானவர்களே இணையதளத்தை அர்ப்பணித்தனர்.
இணையதளத்தில் 34 ஆண்டுகளில் 140 முறை ரத்த தானம் வழங்கிய காஷ்மீரை சேர்ந்த ஷபிர் உசேன்கான், மதுரை ரயில் நிலைய சுமையாளர் சுந்தர், மைசூரைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற மஞ்சுநாதா உள்ளிட்டோரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. எனது கனவின் இந்தியா என்ற தலைப்பிலான பகுதி பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

3. ஆன்-லைன் மணல் விற்பனைக்கு வரவேற்பு: 2 நாட்களில் 18 ஆயிரம் பேர் முன்பதிவு
தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் மணல் பெறும் வகையிலும், மணலுக்காக லாரிகள் காத்திருப்பதை தடுக்கவும் குவாரிகளில் மணல் அள்ள ‘ஆன்-லைன்’ மூலம் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்காக தமிழ்நாடு மணல் இணையதள சேவை ( www.tnsa-nd.in ) என்ற புதிய இணையதளம், மொபைல் ‘ஆப்’-பை கடந்த மாதம் 28-ந்தேதி அவர் தொடங்கி வைத்தார்.

4. கிராம மக்கள் - ஆசிரியர்கள் கூட்டு முயற்சி: வேகமாக வளர்ந்து வரும் விளக்குடி அரசு தொடக்கப் பள்ளி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ஒன்றியம் விளக்குடி கிராமத் தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்த ஆண்டு திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திலேயே புதிய மாணவர்கள் சேர்க்கை அதிகமாக நடைபெற்ற தொடக்கப் பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தப் பள்ளியில் மொத்தம் 207 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 52 பேர் இந்த ஆண்டு புதிதாகச் சேர்ந்தவர்கள். பிற அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை என்பது கடும் சவாலாக மாறியுள்ள சூழலில், விளக்குடி பள்ளியில் அதிக மாணவர்கள் சேருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ்வழி வகுப்புகள் மட்டுமே நடை பெறுகின்றன. ஒவ்வொரு பாடத்தின் மைய நோக்கத்தையும் மாணவர்களுக்கு புரிய வைத்திட வேண்டும் என்பதில் இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மிகத் தீவிரம் காட்டுகின்றனர். அதற்காக எளிதாக கற்பிக்க உதவும் ஏராள மான துணைக் கருவிகளை பயன் படுத்துகின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் துணைக் கருவிகள் வழங்கப்படுகின்றன. அது தவிர இந்தப் பள்ளி ஆசிரியர்களே சொந்த முயற்சியில் பல துணைக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிகளுக்கு ஆசிரியர் பயிற்றுநர் ந.காளிதாஸ் உறுதுணையாக உள்ளார். புதிய புதிய கற்பித்தல் உத்திகளைக் கூறும்போது, நம்மால் முடியாது என்று தட்டிக்கழிக்காமல், வகுப்பறையில் செய்து பார்க்கலாமே என்பதில் இந்தப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆசிரியர்களின் இந்த ஆர்வமும், முனைப்பும்தான் இந்தப் பள்ளியை இன்று முன்மாதிரிப் பள்ளியாக மாற்றியுள்ளது. இவ்வாறு காளிதாஸ் கூறினார்.


இந்தியா

1. இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா கடற்படைகள் கூட்டுபயிற்சி!!!
இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜூலை 10ஆம் தேதி இருந்து கடற்படையின் கூட்டுப் போர்ப்பயிற்சி நடைபெறும் என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் 10 நாட்களுக்கு இந்தக் கூட்டுப் போர்ப்பயிற்சி நடைபெறும் எனவும் இதில், கலந்து கொள்வதற்காக இந்திய போர்க்கப்பல்கள் கடற்படைக்கு வர உள்ளன என தெரிய வந்துள்ளது.

2. மருந்து பொருட்களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை ஜி.எஸ்.டி வரி விலக்கு
அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மருந்து கடை விற்பனையாளர்கள் வாங்கி வைத்துள்ள அத்தியாவசிய மருந்துகளை பழைய விலையிலேயே விற்கலாம் என்றும் வாங்கி வைத்த சரக்குகள் விற்று தீர்ந்த உடன், வாங்கும் புதிய சரக்குகளை ஜிஎஸ்டி., வரியுடன் விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3. விரைவில் 3 ஆயிரம் ரெயில் நிலையங்களில் வை-பை வசதி செய்யப்படும்: மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு
கோவை: கோவை ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே திட்டங்களின் தொடக்க விழா நடந்தது. மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தலைமை தாங்கி பேசியதாவது:- தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்காக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த தொகை அதிகமாகும். சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டங்களை நிறைவேற்றும்போது தமிழ்நாட்டுக்கு மேலும் கூடுதல் பலன் கிடைக்கும். சென்னை-பெங்களூரு இடையே அதிவேக ரெயில்களை இயக்கும் திட்டம் நிறைவுபெறும்போது, தென்இந்தியாவுக்கு கூடுதல் நன்மையை அளிக்கும்.

4. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேஸ்ட்ரோ கார்டுகளுக்கு தடை - புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ள அறிவிப்பு
31-ந்தேதி முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேஸ்ட்ரோ கார்டுகளுக்கு தடை விதித்து உள்ளதாகவும் புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5. ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கலுக்கு எளிமையான படிவம் அறிமுகம்
ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் செய்ய எளிமையான படிவம் ஒன்றை ஜி.எஸ்.டி. நெட்வொர்க் அறிமுகம் செய்துள்ளது. இதை ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விவரங்களை பூர்த்தி செய்து, ஒவ்வொரு மாதமும் 10-ந் தேதிக்கு முன்பு, அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

6. பெண்களின் பாதுகாப்புக்காக தில்லி காவல்துறை அறிமுகப்படுத்திய "ஹிம்மத் செயலி" மேம்படுத்தப்பட்ட வடிவில் விரைவில் மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.


உலகம்

1. சுவிஸ் வங்கியில் அதிக பணம் வைத்திருப்போர் பட்டியல்: 88-ஆவது இடத்துக்குச் சென்றது இந்தியா!!!
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் அதிக பணம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 88-ஆவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் பிரிட்டன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
சுவிஸ் வங்கிகளில் அதிகாரப்பூர்வமாக பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் மொத்தப் பணத்தில் இந்தியர்களின் பணம் 0.04 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதன்படி சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.4,500 கோடி உள்ளது.
சுவிஸ் வங்கிகளில் அதிக பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் பட்டியலில் 2014-ஆம் ஆண்டு இந்தியா 61-ஆவது இடத்திலும், 2015-ஆம் ஆண்டு 75-ஆவது இடத்திலும் இருந்தது. 2007 முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முதல் 50 இடங்களில் இந்தியா இருந்தது. அதிகபட்சமாக 2004-ஆம் ஆண்டில் 37-ஆவது இடத்தில் இருந்தது.

2. அமெரிக்கா வரும் அபுதாபி விமானங்களில் லேப்டாப் தடை நீக்கம்
அபுதாபியில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் விமானங்களில் லேப்டாப் எடுத்து வர விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

3. சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறைக்கு தடை: இலங்கை முடிவு!!!
கடலில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி, மீன்பிடிக்கும் முறைக்கு தடை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை முறையற்ற வகையிலும், சட்டவிரோதமான முறையிலும் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருப்பதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டி வருகிறது. இலங்கையில் இருந்து மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பு தடையும் விதித்திருந்தது. இந்தத் தடையை கடந்த ஆண்டுதான் ஐரோப்பிய யூனியன் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

4. குழந்தைகளின் இளங்கலை பட்டப்படிப்பு வரை: ரூ.12 லட்சம் செலவிடும் இந்திய பெற்றோர்கள்
தொடக்க கல்வி முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சராசரியாக ரூ.12.22 லட்சம் வரை செலவு செய்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே சமயம் உலக சராசரியை விட இந்த தொகை மிகவும் குறைவு என கூறப்பட்டுள்ளது. ஹெச்எஸ்பிசி வங்கி சார்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஹாங்காங், இந்தோனேஷியா, மெக்சிகோ, சிங்கப்பூர், தைவான், பிரிட்டன், அமெரிக்கா உட்பட 15 நாடுகளில் உள்ள 8,481 பெற்றோர்களிடம் கல்வியின் மதிப்பு என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் கல்விக்காக அதிகம் செலவழிக்கும் நாடுகள் எது என்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் வரிசைப்படுத்தப்பட்ட முதல் 15 இடங்களில் இந்தியாவுக்கு 13-வது இடம் கிடைத்துள்ளது. தொடக்க கல்வி முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை இந்திய பெற்றோர்கள் சராசரியாக ரூ.12.22 லட்சம் செலவு செய்கின்றனர்.


விளையாட்டு

1. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான அம்பயர்கள் அறிவிப்பு
2017 - 2018-ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான எலைட் பிரிவு அம்பயர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து சுந்தரம் ரவி மட்டும் இடம்பெற்றுள்ளார்.அலீம் தர், குமார் தர்மசேனா, மரைஸ் எராஸ்மஸ், கிரிஸ் கபானே, இயான் குல்ட், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சார்ட் கெட்டில்பொரோ, நிகெல் லாங், புரூஸ் ஓக்சென்போர்ட், பால் ரீபில், ராட் டக்கர் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


அறிவியல் தொழில்நுட்பம்

1. சந்திராயன்-2 செயற்கைக்கோள் 2018- ம் ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்படும்!!!
சந்திராயன்-2 செயற்கைக்கோள் 2018- ம் ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண்குமார் கூறியுள்ளார்.
தனியார் நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) செயற்கைக்கோள் தயாரிக்கும் பணியில் ஈடுபடும்.
விண்வெளியில் செயலிழந்த செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விடாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

2. வியாழன் கோளில் மேகக் கூட்டம்:
சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் கோளின் (ஜூபிடர்) வளிமண்டலத்தில் ஒளி மற்றும் இருள் மேகங்கள் சூழ்ந்து இருக்கும் அரிய புகைப்படத்தை நாசாவின் ஜெமினி தொலைநோக்கி எடுத்துள்ளது. இதுவரை வெளியான படங்களில் வியாழனில் பெரிய அளவிலான சிவப்பு நிறப் (வெப்பம் அதிகமாக உள்ள) பகுதிகள் நிறைந்த படங்களே அதிகமாக இருந்தன. சூரிய மண்டலத்தில் 5-வது கோளாக உள்ள வியாழன் மற்ற கோள்களை விட மிகவும் பெரியது. இது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது ஆகும். இந்தக் கோளை ஆய்வு செய்வதற்காக நாசாவால் அனுப் பப்பட்டுள்ள ஜூனோ விண்கலம் அரிய புகைப்படங்களை எடுத்து தொடர்ந்து அனுப்பி வருகிறது.

No comments:

Post a Comment