Monday, July 3, 2017

தமிழ்நாடு

தமிழ்நாடு

1. நெய்வேலி புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி, நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள லிக்னைட் அரங்கில் (ஜூன் 30) தொடங்குகிறது. ஜூலை 9-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.

2. தென்னையிலிருந்து நீரா இறக்க உரிமம்: சட்ட மசோதா அறிமுகம்!
தென்னை மரங்களில் இருந்து நீரா அல்லது பதனியை இறக்குவதற்கு உரிமம் வழங்குவதற்கான சட்டத் திருத்த மசோதாவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பேரவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.
தென்னை மரங்களிலிருந்து நீராவை இறக்கி பக்குவப்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் நீராவைக் கொண்டு வெல்லம், தேன், பிஸ்கெட்டுகள், சர்க்கரை மற்றும் பிற பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் உரிமம் வழங்கப்பட உள்ளது. அதற்காக, 1937-ஆம் ஆண்டு மதுவிலக்குச் சட்டத்தைத் திருத்தம் செய்ய அரசு முடிவுசெய்துள்ளதாக மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

3. ரூ.2,350 கோடியில் சூரியசக்தி மின்னழுத்தப் பூங்கா!!!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் நரிப்பையூர் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களை உள்ளடக்கி 500 மெகாவாட் சூரியசக்தி மின்னழுத்தப் பூங்கா ரூ. 2,350 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் பொறியியல்-கொள்முதல்-கட்டுமானம் அடிப்படையில் அமைக்கப்பட்டு இயக்கப்படும்.


இந்தியா

1.  பணப்புழக்க தட்டுப்பாட்டை குறைக்கும் வகையிலும், சுலபமாக மாற்றும் வகையிலும், 200 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2. ரயில்களில் இயந்திரம் மூலம் உணவுப்பொருள் விநியோகம் முதல்கட்டமாக உதய் ரயிலில் அறிமுகமாகிறது.


உலகம்

1. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் ரூ.4,500 கோடியாக குறைந்தது 
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அங்கு இந்தியர்கள் போட்டு வைத்த பணம் கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில், இந்தியர்கள் பணம் ரூ.23 ஆயிரம் கோடி இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில், இந்தியர்கள் பணம் வெறும் ரூ.4 ஆயிரத்து 500 கோடியாக குறைந்துள்ளது. சுவிஸ் தேசிய வங்கி இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

2. நியூசிலாந்தின் கெர்மடேக் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

3. 1962 போரின் வரலாற்று படிப்பினைகளை இந்திய ராணுவ கற்க வேண்டும்: சீனா
எல்லைப் பகுதி ஊடுருவல் பிரச்சனை காரணமாக 1962-ம் ஆண்டு நடைபெற்ற போரின் வரலாற்று படிப்பினைகளை இந்திய ராணுவம் கற்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.


விளையாட்டு

1. இந்திய ஏ அணி கேப்டன்கள் கருண் நாயர், மணீஷ் பாண்டே
தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணியின் கேப்டன்களாக கருண் நாயர், மணீஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களுக்கான அணியின் கேப்டனாக கருண் நாயரும், ஒருநாள் ஆட்டங்களுக்கான அணியின் கேப்டனாக மணீஷ் பாண்டேவும் பொறுப்பு வகிக்க உள்ளனர்.


விருதுகள்

1. அரசு பள்ளிக்கு நிலம் தானம் : டிரைவருக்கு விருது
அரசு பள்ளிக்கு, இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய, வாடகை வேன் டிரைவரை பாராட்டி, ராஜஸ்தான் மாநில அரசு விருது வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசால், கல்வி துறைக்கு சேவையாற்றுவோருக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும், பாமாஷா விருது, இந்த ஆண்டு மேஜர் அலிக்கு வழங்கப்பட்டது.


முக்கிய நியமனங்கள்

1. "பாய்" பயிற்சியாளர் குழு: அரவிந்த், ஜுவாலா கட்டா உள்ளிட்டோர் நியமனம்!
மண்டல வாரியாக பயிற்சி அளிப்பதற்காக இந்திய பாட்மிண்டன் சங்கம் (பாய்) உருவாக்கியுள்ள பயிற்சியாளர்கள் குழுவில் முன்னாள் வீரர்களான அரவிந்த் பாட், ஜுவாலா கட்டா உள்ளிட்டோர் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய தலைமை பயிற்சியாளராக பி.கோபிசந்த் உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு மண்டலங்களில் உள்ள ஒற்றையர் பிரிவு வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் 19 பேர் கொண்ட பயிற்சியாளர் குழுவை பாய் நியமித்துள்ளது. இது தவிர, ஆடவர் இரட்டையர் வீரர்களுக்காக 12 பயிற்சியாளர்கள் குழுவும், மகளிர் இரட்டையர் வீராங்கனைகளுக்காக 4 பயிற்சியாளர்கள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆடவர் ஒற்றையருக்கான பயிற்சியாளர் குழுவில், ஜெர்மன் ஓபன் முன்னாள் சாம்பியன் அரவிந்த் பாட், 2008-ஆம் ஆண்டு ஒலிம்பிக் வீரர் அனுப் ஸ்ரீதர், 2006-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற சேத்தன் ஆனந்த், பார்சிலோனா மற்றும் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற தீபாங்கர் சாட்டர்ஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மகளிர் இரட்டையர் பயிற்சியாளர்கள் குழுவில், 2011-ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற ஜுவாலா கட்டா, 8 முறை தேசிய சாம்பியன் மதுமிதா பிஸ்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதனிடையே, ஆடவர் ஒற்றையர் ஜூனியர் வீரர்களுக்கு தேசிய பயிற்சியாளர் சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்ட 21 பயிற்சியாளர்கள் கொண்ட குழுவும், மகளிர் ஒற்றையர் ஜூனியர் வீராங்கனைகளுக்கு சீனியர் தேசிய சாம்பியனான சயாலி கோகலே உள்ளிட்ட 10 பயிற்சியாளர்கள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.


அறிவியல் தொழில்நுட்பம்

1. செடி, கொடிகளில் கிடைக்கும் வாசனைத் திரவியங்கள் புற்றுநோயைத் தடுக்கும்: புதுவைப் பல்கலை. பேராசிரியர் கண்டுபிடிப்பு!
செடி, கொடிகளில் கிடைக்கும் வாசனைத் திரவியங்களுக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக புதுவைப் பல்கலை. பேராசிரியர் பாஸ்கரன் தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளார்.


பொருளாதாரம்

1. செய்யது பீடி தயாரிப்பு குழுமம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்!
செய்யது பீடி குழும அலுவலகங்கள், உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் இரண்டாவது நாளாக நடைபெற்ற சோதனையில் செய்யது பீடி தயாரிப்பு குழுமம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment