Monday, July 3, 2017

தமிழ்நாடு

தமிழ்நாடு

1. 1,330 திருக்குறள் ஒப்புவித்து 5 வயது மாணவி சாதனை
சிறுவங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கனிஷ்கா, திருக்குறளில் உள்ள, 1,330 குறள்களையும் ஒப்புவித்து, சாதனை படைத்து வருகிறார். மாவட்ட அளவில் சிறுவர்களுக்கான, திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில், 100க்கும் மேற்பட்ட சான்றுதழ்கள், பதக்கங்களையுள் பெற்றுள்ளார்.


இந்தியா

1. 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மத்திய அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை அவர்கள் பணியில் சேர்ந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு, 25 ஆண்டுகளுக்கு பிறகு என இருமுறை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் செயல்பாடுகளை மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறை சமீபத்தில் ஆய்வு செய்தது. 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


உலகம்

1. ஆஸ்திரேலியாவில் குடியேறிய வெளிநாட்டினர்: இந்தியர்கள் இரண்டாவது இடம்!
ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 2.44 கோடி ஆகும். இது, கடந்த 2011-இல் சுமார் 2.15 கோடியாக இருந்தது. தற்போதைய மக்கள்தொகையில் சுமார் 26 சதவீதம் பேர் தாய் மண்ணில் அல்லாது வெளிநாடுகளில் பிறந்தவர்கள் ஆவர்.
மொத்த மக்கள்தொகையில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தவகையில், ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டினரில் சுமார் 1.91 லட்சம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். அடுத்து சுமார் 1.63 லட்சம் பேருடன் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2011 முதல் இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் பேர் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2. பிரேஸில் அதிபர் மீது அட்டர்னி ஜெனரல் ஊழல் புகார்!
பிரேஸில் அதிபர் மிஷெல் டெமர் மீது அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் ஊழல் புகார் பதிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து, அதிபருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது ஊழல் வழக்கு தொடுப்பதற்குப் போதுமான ஆதாரம் இருப்பதாக வாக்களித்தால், அவர் இடை நீக்கம் செய்யப்படுவார். ஆறு மாதங்களுக்குள் அவர் மீதான கிரிமினல் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். அது வரையில் அவர் பதவியில் தொடர முடியாது.
அவருக்கு முன்பு அதிபராக இருந்த டில்மா ஊழல் குற்றச்சாட்டின்பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மிஷெல் டெமர், கடந்த ஆண்டு அதிபர் ஆனார். தற்போது அவர் மீதும் ஊழல் புகார் எழுப்பப்பட்டுள்ளது.
ஆனால், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை அதிபர் மிஷெல் டெமர் நிராகரித்தார்.


விளையாட்டு

1. இரட்டைப் பட்டங்களுக்கான போட்டி: சீன வீரரை எதிர்கொள்கிறார் விஜேந்தர் சிங்!
போட்டியைப் பொறுத்த வரையில் வெற்றி பெறும் நபர் தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதுடன், தோல்வியடைந்த நபரின் பட்டத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
இப்போட்டி மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள என்எஸ்சிஐ விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.
டபிள்யூபிஓ ஆசிய பசிபிக் மிடில்வெயிட் சாம்பியனான விஜேந்தர் சிங், இதுவரை மோதிய 8 போட்டிகளில் தோல்வியின்றி தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளார். அதில் 30 சுற்றுகளும், 7 நாக் அவுட் வெற்றிகளும் அடங்கும். டபிள்யூபிஓ ஒரியண்டல் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியனான ஸூல்பிகரும் 8 போட்டிகளில் தோல்வியின்றி வெற்றியை பதிவு செய்துள்ளார். அதில் 24 சுற்றுகளும், 5 நாக் அவுட் வெற்றிகளும் அடங்கும்.


விருதுகள்

1. மதுரை பாஸ்போர்ட் அதிகாரிக்கு விருது
டில்லியில் நடந்த விழாவில் சிறந்த சேவையாற்றியதற்காக, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணிஸ்வர ராஜாவிற்கு பாஸ்போர்ட் சேவா புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.


முக்கிய நியமனங்கள்

1. பிசிசிஐ சிறப்புக் கமிட்டி: கங்குலி உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக நியமனம்.
பிசிசிஐ மறுசீரமைப்புக்காக லோதா குழு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்புக் குழுவில் இந்திய அணி முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிசிசிஐ மூத்த அதிகாரியான ராஜீவ் சுக்லா தலைமையிலான இந்தக் குழுவில், டி.சி.மேத்தியூ (கேரள கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர்), நாபா பட்டாசார்ஜி (மேகாலய கிரிக்கெட் சங்கச் செயலர்), ஜெய் ஷா (குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவர் மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன்), பிசிசிஐ பொருளாளர் அனிருத் செளதரி, பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளதரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களில் பலர், கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்கெனவே பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். இதில் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ளார். பிசிசிஐ மூத்த அதிகாரியான ராஜீவ் சுக்லா ஐபிஎல் போட்டிக்கான தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. பக்கிங்ஹாம் அரண்மனை பாதுகாப்பு தலைவராக கனடா பெண் நியமனம்
பிரிட்டனின் பக்கிங்ஹாம் அரண்மனை பாதுகாப்பு படைக்கு, முதன்முறையாக, கனடாவைச் சேர்ந்த பெண், தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். கனடா நாட்டு ராணுவ பெண் கேப்டனான, மெகன் கவுட்டோ, 24, தலைமையிலான, படைப் பிரிவு தற்காலிகமாக அமைக்கப்பட்டது.


பொருளாதாரம்

1. கூகுளுக்கு ரூ.17,000 கோடி அபராதம் விதித்தது ஐரோப்பிய யூனியன்!
அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் நம்பிக்கைக்கு எதிரான வகையில் செயல்பட்டதற்காக அந்நிறுவனத்துக்கு, ஐரோப்பிய யூனியன் 240 கோடி யூரோவை ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,000 கோடி) அபராதமாக விதித்துள்ளது.
கூகுள்தான் உலகின் மிக பிரபலமான தேடுபொறியாக உள்ளது. ஆனால், அதில் தனது சொந்த ஷாப்பிங் சேவைகளை முன்னிலைப்படுத்துவதற்கே கூகுள் நிறுவனம் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. கூகுளின் இந்த எதேச்சாதிகாரப் போக்கு, ஐரோப்பிய யூனியனின் ஏகபோகத் தடுப்பு விதிமுறைகளின் கீழ் சட்டவிரோதமான செயலாகும்.
கூகுள் நிறுவன தேடுபொறியில் அதன் சொந்த ஆன்லைன் சேவை, கூகுள் ஷாப்பிங் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டதால், டிரிப்அட்வைஸர், எக்ஸ்பீடியா போன்ற நிறுவனங்கள் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளன.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் நம்பிக்கைக்கு மாறான வகையில் செயல்பட்டதற்காக அந்த நிறுவனத்துக்கு 240 கோடி யூரோ அபராதமாக விதிக்கப்படுகிறது.
முன்னதாக, ஐரோப்பிய சந்தையில் ஏகபோக தனியுரிமையை நிலைநாட்டும் வகையில் செயல்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த இன்டெல் நிறுவனத்துக்கு 106 கோடி டாலர் (சுமார் ரூ.7,500 கோடி) அபராதம் விதிக்கப்பட்டதே அதிகபட்ச அளவாகக் கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த வரலாற்று சாதனையை கூகுள் நிறுவனம் முறியடித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் சந்தையில் நியாயமான போட்டியை முடக்கும் விதமாக செயல்பட்டதற்காக, அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள், அமேஸான், மெக்டனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் ஆகியவற்றின் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment