Wednesday, October 11, 2017

TNPSC Current Affairs 11.10.2017

** TNPSC Current Affairs 11.10.2017 **
உலக செய்திகள் :
வடகொரியாவிற்கு விதிக்கப்பட்ட தடைகளை மீறிய நான்கு கப்பல்கள் சர்வதேச துறைமுகங்களுக்கு செல்ல ஐ.நா. சபை தடை விதித்துள்ளது.
இந்தியர்களுக்கான சர்வதேச இந்திய அழகிப் போட்டி(26வது) நியூஜெர்சியில்(அமெரிக்கா) நடைபெற்றது. இதில் விர்ஜினியாவை (அமெரிக்கா) சேர்ந்த சட்ட கல்லூரி மாணவியும், பிரபல பாடகியுமான மது வள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் 18 நாடுகளை சேர்ந்த, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
மீள் குடியேற்ற திட்டத்தின் கீழ் ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளிலிருந்து 10000 அகதிகளை பிரான்ஸ் நாட்டுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு சிங்கப்பூர் ஆயுதப் படை $ 270,000 மதிப்பிலான பொருட்களை(மனிதாபிமான அடிப்படையில்) அனுப்பியுள்ளது.
ஸ்பெயினிலிருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டது என்ற பிரகடனத்தை கேட்டலோனியா அதிபர் கார்லஸ் பூஜ்டியமோன்;, பிராந்தியத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டனர். எனினும், இந்த விடுதலைப் பிரகடனம் செயல்படுத்துவதை சில வாரங்கள் நிறுத்திவைப்பதாக பூஜ்டியமோன் அறிவித்தார்.
சுனாமியைத் தொடர்ந்து ஜப்பானின் ‘புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டு அரசும், அந்த அணு உலை மூலம் மின்சார உற்பத்தி செய்து வந்த நிறுவனமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009ம் ஆண்டு பொருளாதாரத்திற்காக வழங்கப்பட்ட  நோபல் பரிசை “எலினோர் ஆஸ்ட்ரோம்” பெற்றார். இவர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் ஆவார்.
தேசிய செய்திகள் :
நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மிகப்பெரிய நிதித் தொகுப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக மத்திய நீர்வளங்கள், நதிநீர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
“இந்தியா தண்ணீர் வாரம் - 2017” டெல்லியில் நேற்று நடைபெற்றது.
மும்பை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தால் (ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்) புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணினித் தொழில்நுட்ப நிறுவனமான இன்டல் இந்தியாவின் தலைவர் நிவ்ருதி ராய் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதல் முறையாக இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சி) அக்டோபர் 13ம் தேதி தொடங்குகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் தொழிலாளர் நலவாரியங்களைச் சேர்ந்த 28 லட்சத்து 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.757 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.
தமிழக அஞ்சல் துறை முதன் முறையாக நடமாடும் அஞ்சலகத்தை, சென்னையில் நேற்று (அக்டோபர் 10)  தொடங்கியது
நேற்று (அக்டோபர் 10) அஞ்சல் துறை காப்பீட்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வழங்கப்பட்டது. இதனையொட்டி ‘சம்பூர்ணா டாக் ஜீவன் பீமா கிராம யோஜனா’ என்ற காப்பீட்டு திட்டம் புதிய மாற்றங்களுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது
விளையாட்டு செய்திகள் :
தெற்கு ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இதில் பழனியைச்(திண்டுக்கல்) சேர்ந்த மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தனர்.
யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில், ஈரான் அணிகள் 2வது சுற்றுக்கு முன்னேறியது.
ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் டாக்காவில் (வங்கதேசம்) இன்று(அக்டோபர் 11) தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதுகிறது.
3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட சிறிய நாடான ஐஸ்லாந்து உலகக் கோப்பை தொடரில் முதன் முறையாக விளையாட தகுதி பெற்றுள்ளது.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி (ஆடவர் ஒற்றையர் பிரிவில்) 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
17 வயதிற்குட்பட்டோருக்கான(யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டி, இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. இது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்பெயின் பெற்ற முதல் வெற்றியாகும்
வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை), 2018ம் ஆண்டு சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் பங்கேற்கப்போவதாக தெரிவித்துள்ளார். இவர் இந்தப் போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கேற்க உள்ளார்.
வர்த்தக செய்திகள் :
2017ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதமாக இருக்கும் என பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
வாராக் கடன் அதிகரிப்பு சௌத் இந்தியன் வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் 96.09 சதவீதம் வீழ்ந்தது
ஐபோன் தயாரிப்பு (ஆப்பிள்) நிறுவனம் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடாவின்; தொலைத்தொடர்பு சேவைப்பிரிவான ‘டாடா டெலி சர்வீசஸ்’ தொலை தொடர்பு சேவைத் துறையில் இருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறது.
காரைக்காலில் மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்குவதற்கு, புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகம் சார்பில் கடனுதவிகளை (ரூ.14,71,750) அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.
ஒன்பது பொதுத் துறை வங்கிகளின் புதிய செயல் இயக்குநர்கள் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவை
சென்டரல் பேங்க் ஆப் இந்தியா – பஜ்ரவ் சிங் ஷெகாவத்
பஞ்சாப் &  சிந்த் வங்கி – கோவிந்த் என். டோங்ரி
இந்தியன் ஓவர்சிஸ் வங்கி – அஜய் குமார் ஸ்ரீவாஸ்தவா
கனரா வங்கி – மடம் வெங்கட ராவ்
ஆந்திரா வங்கி – குல்பூஷண் ஜெயின்
தேனா வங்கி – ராஜேஷ் குமார் யதுவம்சி
பேங்க் ஆஃப் இந்தியா – சைதன்ய காயத்ரி சின்தப்பள்ளி
சிண்டிகேட் வங்கி – எஸ். கிருஷ்ணன்
பஞ்சாப் நேஷன் வங்கி – லிங்கம் வெங்கட் பிரபாகர்

Tuesday, October 10, 2017

TNPSC Current Affairs 10.10.2017

** TNPSC Current Affairs 10.10.2017 **
உலக செய்திகள்
போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய தளம் வாயிலாக இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ்(எஸ்.பி.எஸ்) நிலையம் துபாயில் செயல்பட்டு வருகிறது
2017 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ரிச்சர்ட் எச்.தாலருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிமோனியா நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் செயற்கை சுவாச கருவியை டாக்டர் “முகம்மது ஜோபெயர் சிஸ்டி” கண்டுபிடித்துள்ளார்.
இலங்கையில் நேற்று (அக்டோபர் 10) ஜனாதிபதியின் இணையமைப்பாளர் எம்.கே. ராகுலனால் மலையாளப் பள்ளி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.
டிராவிஸ் பாஸ்ட்ரானா(அமெரிக்க ஸ்டன்ட் வீரர்), லண்டன் தேம்ஸ் நதியின் இரண்டு தெப்பங்களுக்கு இடையே உள்ள “75 அடி” இடைவெளியை பைக்குடன் பாய்ந்து புதிய உலக சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்கா செல்லும் துருக்கியர்களுக்கு வழங்கப்படும் குடியேற்றம் இல்லாத விசா நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
டெல்லியில் மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று மெட்ரோ இரயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பெங்களுர் சர்வதேச விமான நிலையம் அடுத்த ஆண்டு முதல் முழுவதுமாக ஆதார் எண்ணின் அடிப்படையில் இயங்கும் என பெங்களுர் சர்வதேச விமானநிலைய லிமிடெட் தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக் குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்குவது தொடர்பான கருத்துக்களை அக்டோபர் 30ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் அனைத்து தன்னார்வ அமைப்புகளும் மத்தியக் கொள்கை குழுவின்(நிதி ஆயோக்) இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2030ம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில், இந்தியா உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடிக்கும் என்று மத்திய உள்துறைஅமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம், கர்னூலில் பழங்கள் பதனிடும் தொழிற்சாலையை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று(அக்டோபர் 09) தொடங்கி வைத்தார். இதில் உரையாற்றும் போது “விதை உற்பத்தியில் நாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது” என்று கூறினார்
நாடக கலைஞர்கள் (திருப்பதி) இணைந்து 4 மணி நேரம் 20 நிமிடங்கள் ‘அஹோ ஆந்திபோஜ‘ என்ற தலைப்பில் வரலாற்று நாட்டிய நாடகத்தை நடத்தி கின்னஸ் சாதனைப் படைத்தனர்.
முதல்வரின் மருத்தவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தினமும் 2000 ரூபாய் பெற்று கொள்ளலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
“காச நோய் இல்லாத சென்னை” தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், ‘ரீச்’ தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ‘யூ.எஸ்.ஏ.ஐ.டி. ஸ்டாப் டி.பி. பார்ட்னர்ஷிப்’ என்ற சர்வதேச நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
விளையாட்டு செய்திகள்
ரொசாரியோவில் (ஆர்ஜென்டீனா) நடைபெற்ற உலக ‘யூத்’ வில்வித்தைப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் “ஜெம்சன் நிங்தோஜம் - அங்கிதா பகத்” ஜோடி தங்கப்பதக்கம் வென்றனர்
1990ம் ஆண்டு உலக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற எகிப்து அணி, 27 ஆண்டுகளுக்கு பிறகு 2018ம் ஆண்டு ரஷியாவில் நடைபெறவுள்ள உலக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான 2வது “20 ஓவர் கிரிக்கெட்” போட்டி இன்று(அக்டோபர் 10) குவாஹாத்தில்(அஸ்ஸாம்) நடைபெறுகிறது.
யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்க அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் (10 ஆட்டம்) வெற்றி பெற்று ஜெர்மனி அணி சாதனைப் படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ரோஹித் சர்மா சிக்சர் அடித்தார். தொடர்ந்து 5 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் 30 சிக்சர்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய உலக சாதனையை பெற்றுள்ளார்.
வர்த்தக செய்திகள்
கரூர் வைஸ்யா வங்கியின் 750 ஆவது கிளை சென்னை சின்மா நகரில் திறக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக டாடா சன்ஸ் குழும தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குஜராத் மாநில அரசு 4 சதவீதம் குறைத்துள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த “எனர்ஜி எஃபீஷியன்ஸி சர்வீசஸ் நிறுவனத்துக்கு” (இஇஎஸ்எல்) 10000 மின்சார கார்களை தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
2020ம் ஆண்டுக்குள் சந்தைப் பங்களிப்பை இரண்டு மடங்கு அதிகரிக்க “சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம்” திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சடோஷி உசிதா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் துறைகளுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்து வந்த “டி.ஜி.எஸ் அண்டு டி துறை” 100 ஆண்டுகள் பணி முடைவடைவதை ஒட்டி மூடப்படுகிறது.

TNPSC Current Affairs 09.10.2017

** TNPSC Current Affairs 09.10.2017 **
உலக செய்திகள் :
19 நாடுகளைச் சேர்ந்த 24 மாற்றுதிறனாளி பெண்கள் கலந்து கொண்ட  முதல் “சக்கரநாற்காலி உலக அழகிப் போட்டி” வார்ஸாவில்(போலந்து) நடைபெற்றது இதில் பெலாரஸ் நாட்டு மாணவி அலெக்சாண்ட்ரா சிசிகோவா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பிரபல சோசலிஸ்ட் “சே குவேரா” கொல்லப்பட்ட 50வது ஆண்டு நினைவு தினம் நேற்று(அக்டோபர் 08) கியூபாவில் அனுசரிக்கப்பட்டது.
கம்யூட்டர், லேப்-டாப், ஸ்மார்ட் போன் அனைத்துக்கும் இதயத்தை ஸ்கேன் செய்து(பாஸ்வேர்ட்) அதன் மூலம் உள்ளே செல்லும் நவீன முறையை நியூயார்க்கின் (அமெரிக்கா) யு.பி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேர்மனி ஹம்பெர்க் நகரை சேவியர் புயல் தாக்கியது
அக்டோபர் 9ம் தேதியான இன்று 48வது “உலக அஞ்சல் தினம்”. உலகளவில் சீனாவின் தூதஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை முதலிடத்தில்(தொடர்ந்து 3 முறை) உள்ளது.
அமெரிக்காவில் விண்ணெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா அனுப்பிய “ஒடிசி” செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் நிலவான ‘போபோசின்’ முதல் படத்தை அனுப்பியுள்ளது.
பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த 1890ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தத்தை இந்தியா ஏற்று நடக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது
அமெரிக்கா நாடுகளின் அழுத்தங்களை சமாளிக்கும் பொருட்டு அச்சுறுத்தும் பிளேக், ஆந்த்ராக்ஸ் போன்ற உயிரியல் ஆயுதங்களை வடகொரிய ராணுவம் தயாரித்து வருகிறது.
தேசிய செய்திகள் :
நாடு முழுவதும் 5000 கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் “ஜிவாமிர்தம் திட்டத்தை” குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று(அக்டோபர் 09) தொடங்கியுள்ளார்.
இந்திய விமானப் படையின் (இந்தியன் ஏர்ஃபோர்ஸ்) 85வது ஆண்டு விழா இன்று(அக்டோபர் 09) கொண்டாடப்பட்டது. (பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட இது ராயல் இந்தியன் ஏர்ஃபோர்ஸ் என்று அழைக்கப்பட்டது)
தீபாவளிக்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு விற்க, வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. (உலகின் அதிக மாசு கொண்ட மிகப்பெரிய நகரம் - டெல்லி)
விவசாயத்துக்கான மானிய யூரியாவுடன் வேப்ப எண்ணெய் கலக்க மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். வேப்ப எண்ணெய் கலந்த யூரியா விவசாயத்திற்கு மட்டுமே பயன்படும் மேலும் கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த முடியாது
சென்னை பல்கலைக்கழக பதிவாளராக(29வது) ராம. சீனுவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சர்வதேச அறிவியல் மாநாடு அக்டோபர் 13ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது என மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
நிலத்தடி நீரை பயன்படுத்த டிசம்பர் 31ம் தேதிக்குள் தடையில்லா சான்று (என்ஓசி) பெற்றால்தான், குடிநீர் நிறுவனங்கள், உணவு பாதுகாப்பு துறையிடம் இருந்து உரிமம் பெற முடியும் என மத்திய பாதுகாப்புத் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மனநலப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் தேதி “உலக மன நல தினமாகக்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘பணி இடத்தில் மனநலம்’ என்பதாகும்
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மும்மொழி கொள்கையின் கீழ் பாடங்கள் கற்றுதரப்படுகின்றன. இதில் தாய்மொழி அல்லது இந்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் போன்ற ஏதாவது 3 மொழிகளில் பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் அடுத்த கல்வியாண்டில் இருந்து பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் 4வது மற்றும் 5வது மொழிகளாகத்தான் இருக்க வேண்டும் அவை மும்மொழி பாடத்திட்டத்தின் கீழ் வராது என அறிவிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள் :
ஜப்பான் பார்முலா 1 கார்பந்தயத்தில் 16வது சுற்றில் இங்கிலாந்து வீரர் ஹால்மில்டன் முதலிடம் பிடித்துள்ளார்.
‘டோர்னமென்ட் பிளையர்ஸ்’ கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அஜீதேஷ் சந்து சாம்பியன் பட்டம் வென்றார். சந்து இந்த கோப்பையை வென்ற 2வது இந்தியர் ஆவார்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவும் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
வங்காள தேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க கோஸ்டா ரிகா அணி தகுதி பெற்றுள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுமியர்களுக்கான கபடிப் போட்டியில் தருமபுரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
வர்த்தக செய்திகள் :
சரக்கு மற்றும் சேவை வரியில்(ஜிஎஸ்டி) தொகுப்பு முறை திட்டத்தை மறு ஆய்வு செய்ய அஸ்ஸாம் மாநில நிதியமைச்சர் ஹிமந்த் பிஸ்வ சர்மா தலைமையில் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
“இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச்” மற்றும் “ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா” நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் ரூ.12,300 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.
“கிளாடரிவேட் அனாலிட்டிக்ஸ்” என்ற நிறுவனம் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வெல்லக்கூடிய வாய்ப்புள்ள ஆறு பொருளாதார அறிஞர்களை பட்டியலிட்டுள்ளது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை இன்னும் இரு மாதங்களில் திருப்பி வழங்கப்படும் என மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் இந்த வருடத்திற்கான மிகச் சிறந்த தொழில் முனைவோர் என்ற விருது (2017 Sri Lanka of the Year) அபான்ஸ் குழுமத்தின் தலைவி திருமதி. “ஆபான் பெஸ்டோன் ஜி”க்கு வழங்கப்பட்டது.
2017ம் ஆண்டில் இணையதளம் மற்றும் தொழில்நுட்ப துறையில் இதுவரை 800 நிறுவனங்கள் மட்டுமே  தொடக்க நிலை நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்)

இன்றைய தமிழ்நாடு வேலைவாய்ப்பு தகவல்கள் 1,00,000 மேல் காலியிடங்கள்

இன்றைய தமிழ்நாடு வேலைவாய்ப்பு தகவல்கள் 1,00,000 மேல் காலியிடங்கள்
*இந்த பதிவை மற்ற பல நண்பர்களுக்கும் தகவல் பரிமாறி உதவலாம்.*
*‍♀ TNSPYB- 10500 பணியிடங்கள் நிரப்பப் படஉள்ளது.*
சம்பளம்: Rs.20200
அப்ளைலிங்க்: https://goo.gl/VAJei1
*15054 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.*
சம்பளம்: Rs.34,800/-
அப்ளைலிங்க்: https://goo.gl/Eeuukv
*ரயில்வே பாதுகாப்பு படையில் 20 ஆயிரம் கான்ஸ்டபிள் வேலை.*
சம்பளம்: Rs.20,200/-
அப்ளைலிங்க்: https://goo.gl/oLJDXU
*ரகசிய போலீஸ் நிறுவனத்தில் (IB) 1430 வேலை.*
சம்பளம்: Rs.34,800/-
அப்ளைலிங்க்: https://goo.gl/pgTKgh
*ஊழியர்கள் தேர்வு ஆணையத்தில் 605 வேலை வாய்ப்பு *
சம்பளம்: Rs.92,300/-
அப்ளைலிங்க்: https://goo.gl/CuJQnT
*குரூப்-V A பணியிடங்களுக்கு 26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு..*
சம்பளம்: Rs.20,200/-
அப்ளைலிங்க்: https://goo.gl/iQPAib
* 拏 தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..*
சம்பளம்: Rs.25.00/-
அப்ளைலிங்க்: https://goo.gl/jA1j3d
*ஏர் இந்தியா நிறுவனத்தில் 217 வேலை வாய்ப்பு.*
சம்பளம்: Rs.34,800/-
அப்ளைலிங்க்: https://goo.gl/Vuasrd
*மின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.*
சம்பளம்: Rs.35,500/-
அப்ளைலிங்க்: https://goo.gl/ek2ZMH
*கடற்படையில் என்ஜினீயர்கள், பட்டதாரிகள் சேர்ப்பு.*
சம்பளம்: Rs.39,100/-
அப்ளைலிங்க்: https://goo.gl/BGdAFn
*தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலை வாய்ப்பு.*
சம்பளம்: Rs.34,800/-
அப்ளைலிங்க்: https://goo.gl/BN6tDC
*வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும்  வங்கி தேர்வுக்கான 7875 விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.*
சம்பளம்: Rs.34,800/-
அப்ளைலிங்க்: https://goo.gl/ijXTp5
*‍ BSNL - JAO Recruitment பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெடில் JAO வேலை வாய்ப்பு.*
சம்பளம்: Rs.45.500/-
அப்ளைலிங்க்: https://goo.gl/DuVALN
*இந்த பதிவை மற்ற பலநண்பர்களுக்கும்தகவல் பரிமாறி உதவலாம்.*
*At least 1 or 2 Whatsapp Group- க்கும் Share- பண்ணுங்கள்

TNPSC Current Affairs 08.10.2017

** TNPSC Current Affairs 08.10.2017 **
தேசிய செய்திகள்
குஜராத் மாநிலத்தில் வளர்ப்பு பிராணிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக “கருணா அனிமல் எமர்ஜென்சி சர்வீஸ்” என்ற பெயரில்; ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை திட்டம்(தொலை பேசி எண் - 1962) துவங்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தொழிலகங்களுக்கு சிறப்பு நிதியுதவி செய்யப்படும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வர்த்தகர்களிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரித்தொகை 15 நாள்களுக்குள் அவர்களது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார்.
அரசு ரகசியங்களை பாதுகாக்க, கோப்புகள் திருடுபோகாமல் தடுக்க “ரேடியோ பிரிக்வன்சி ஐடெண்டிபிகேஷன் (ஆர்எப்ஐடி)” மற்றும் “பைல் டிரக்கிங் சிஸ்டம்” என்னும் நவீன தொழில்நுட்பத்தை கர்நாடக அரசு பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
தலித்களுக்கு எதிராக கொடுமைகள் அதிகம் நடப்பது பற்றிய ஆய்வு பட்டியலில் மத்திய பிரதேசம் முதல் இடத்திலும், குஜராத் 5ம் இடத்தையும் பிடித்துள்ளது.
கோவாவில் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக அரசு மற்றும் அரசு நிதியுதவியுடன் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்களை வைக்க கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர் உயிரிழக்க நேரிட்டால் அவரது குடும்பத்துக்கு மத்திய அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
உலகச் செய்திகள்
பிரெங்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் டிசம்பர் மாதம் புதுச்சேரி வர உள்ளதால் புதுச்சேரியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் 4 ஆண்டுகளில் பாரீஸ் போன்று புதுச்சேரி நவீன நகரமாக மாற்றப்படும் என்று முதல்வர் நாராயணசாமி; கூறியுள்ளார்.
ஐரோப்பிய வளிமண்டலத்திலிருந்து கடந்த மாதம் 29ம் தேதி முதல் ருத்தேனியம்-106 ஐசோடோப் கதிரியக்க துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..  இதே போல் கடந்த ஜனவரி மாதம் ஐயோடின்-131 கதிரியக்க துகள்கள் ஐரோப்பிய வளிமண்டலத்தில் இருந்ததை காற்று தர கட்டுப்பாட்டு மையங்கள் கண்டுபிடித்தன.
குயின்ஸ்லாந்தில் (ஆஸ்திரேலியா) மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்திற்கு (இந்திய நிறுவனமான அதானி) எதிராக “நயூ சவுத் வேல்ஸ்” (ஆஸ்திரேலியா) மாகாணத்திலுள்ள “போண்டி” கடற்கரையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய விமானப்படையின் 85வது ஆண்டுவிழா காஸியாபாத்தில் (உத்திரபிரதேசம்) ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்றது.  இதில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா ஏற்றுக் கொண்டார்.
‘யு.எஸ். சிட்டிசன்ஷிப் அண்ட் இமிகிரேஷன் சர்வீசஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 11 ஆண்டுகளில் அமெரிக்காவில் பணிபுரிய விருப்பம் தெரிவித்து, ‘எச் 1பி’ விசா பெற விண்ணப்பித்த இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கை 21 லட்சம் என்றும் அனைத்து நாடுகளையும் சேர்த்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 34 லட்சம் தான் என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கடற்படை தளபதியான “முஹமது ஸகாவுல்லா” பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய கடற்படை தளபதியாக, “ஜாபர் மெஹ்மூத் அப்பாஸி” நேற்று(07-10-2017) பதவியேற்றார்.
வர்த்தக செய்திகள்
இளவயது வாடிக்கையாளர்களுக்காக, எஸ்.பி.ஐ. ‘பிரைம்’ கார்டு அறிமுகப்படுத்தியது.
பெங்களுருவைச் சேர்ந்த இடெய்ல் நிறுவனமான “பிக் பாஸ்கட்” 25 கோடி முதல் 30 கோடி டாலர் (இ சிரீயஸ்) வரை நிதி திரட்டும் பணியின் இறுதி கட்டத்தில் இருக்கிறது.  உணவு ரீடெய்ல் பிரிவில் 15 கோடி டாலர் முதலீடு செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹரி மேனன் தெரிவித்துள்ளார்.
மியூச்சுவல் பண்டின் பல்வேறு விதமான திட்டங்களை ஒருங்கிணைக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான “செபி” முடிவு செய்துள்ளது.
நடப்பு 2017-18ம் நிதி ஆண்டில், இரண்டாம் கட்டமாக மத்திய அரசின் தங்க சேமிப்பு பத்திரம் நாளை வெளியிடப்படுகிறது.  இதில் குறிப்பிட்ட வங்கிகள், அஞ்சலகங்கள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் நிறுவனம், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் தங்கக் கடன் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.  இதில் குறைந்தபட்சம் 1 கிராம் - 500 கிராம் வரை ஒருவர் முதலீடு செய்யலாம்.
கோவாவில் ஆண்டுதோறும், “ஐ.பி.டபிள்யு.” எனப்படும் இந்திய பைக் திருவிழா நடத்தப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய பைக் திருவிழாவான இது, இந்த ஆண்டு நவம்பர் 24, 25ல் நடக்கிறது.
வோல்வோ ஆட்டோ இந்திய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சார்லஸ் பிரம்ப் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ‘டுவெண்டி-20’ போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் “கார்லோஸ் நூஸ்மானை” சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) “ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெறுவதற்காக வாக்குக்கு பணம் கொடுத்தது போன்ற ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டதால் சஸ்பெண்ட் செய்துள்ளது.
பஞ்சாப் அணியுடன் தர்மசாலாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் இமாச்சலப் பிரதேச வீரர் “பிரஷாந்த் சோப்ரா தனது 25 வது பிறந்தநாளான நேற்று முச்சதம் விளாசி அசத்தினார்.  முதல் தர கிரிக்கெட்டில் இந்த சாதனைணை நிகழ்த்தும் 3வது வீரர் என்ற பெருமை கிடைத்துள்ளது.
ரோமானியா வீராங்கனை சிமோனா ஹாலெப் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.  டபுள்யு.டி.ஏ தரவரிசை வரலாற்றில், முதல் இடத்தை பிடிக்கும் 25வது வீராங்கனை
சீன ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ரபேல் நடால் (ஸ்பெயின்) தகுதி பெற்றார்.
5-ஆவது சீசன் புரோ கபடி போட்டியின் 113-ஆவது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது.

TNPSC Current Affairs 07.10.2017

** TNPSC Current Affairs 07.10.2017 **
உலக செய்திகள் :
அணு ஆயுத ஒழிப்புக்காக சர்வதேச அளவில் பிரசாரம் மேற்கொள்ளும் ‘ஐகேன்’ தொண்டு நிறுவனத்துக்கு இந்த ஆண்டு(2017) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் 28 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் இடையேயான 14வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று (அக்டோபர் 06) நடைபெற்றது. இதில் பயங்கரவாதத்துக்கு எதிரான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் உறுதி அளித்துள்ளனர்.
நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்
ரியாத்தில்(சவுதி அரேபியா) நடைபெற்ற பிரம்மாண்ட சொகுசு கார் கண்காட்சியில் முதல் முறையாக பெண்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் சுரங்க ரயில் நடத்துனராக பணிபுரியும் முதல் இந்திய பெண் சுஜாதா கிட்லா.
போர்ச்சுகலின் ஓபிடோஸ் நகரில் ‘தி லிட்ரரி மேன் ஹோட்டல்’ உள்ளது. இதில் சுமார் 50000 புத்தக்கங்கள் வைக்கப்பட்டிருந்தது. இது உலகின் மிகச் சிறந்த விடுதி என்று புத்தகப் பிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள் :
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர விரும்பிய இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா இந்தியா வழங்கும் என்று வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக இரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக ஜோதி நிர்மலா சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன கடவுச்சீட்டைப் புதுப்பிக்க இணையதளம் மூலம் பெறப்பட்ட காணாமல் போனதற்கான ஆவணச் சான்றிதழ் (எல்டிஆர்) போதுமானது என்று மண்டல கடவுச்சீட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையை பராமரிக்கும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள் :
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று(அக்டோபர் 07) நடக்கிறது.
ஜுனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணி வெற்றிப் பெற்றது.
2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க ஜெர்மனி, இங்கிலாந்து அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.
இந்தியாவிற்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்(காயம் காரணமாக) விலகியுள்ளார்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா – ஷீய் பெங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹாஸ்டிங்ஸ் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வர்த்தக செய்திகள் :
ரூ.50 ஆயிரத்துக்கும் மேல், நகை வாங்க ‘பான் எண்’ சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது.
2018 ஏப்ரல் 1 முதல் ஏற்றுமதியாளர்களுக்கு “ஈ-வாலட்” சேவை வழங்கப்படும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
பல்வேறு நிறுவனங்கள் 13,140 வங்கி கணக்குகள் மூலம் ரூ.4574 கோடி கறுப்பு பணத்தை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லெனோவோ நிறுவனத்தின் புதிய “தின்க்பேட்” சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வியாபார ரீதியிலான புதிய லேப்டாப்கள் முதன்முதலாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் டீசராக வெளியிடப்பட்டது.

TNPSC Current Affairs 06.10.2017

** TNPSC Current Affairs 06.10.2017 **
உலக செய்திகள் :
2017 ஆம் ஆண்டிற்கான “இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு” பிரிட்டனை சேர்ந்த “கசுவோ இஷிகுரோவு” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா – எத்தியோப்பியா இடையே வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளின் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரான்ஸ் லாவஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெட்ரோல் எரிபொருளால் இயங்கும் கார் (புரோட்டோ டைப் கார்) ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். மிக இலகுவான எடைக் கொண்ட இந்த கார் லிட்டருக்கு 1.153 கி.மீ செல்லும் திறன் உடையது
ஐ.நா. அமைதிப் படையில் 128 நாடுகளைச் சேர்ந்த 1,04,184 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த படையில் தற்போது 8, 108 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐ.நா. அமைதிப் படைக்கு அதிக வீரர்களை அனுப்பிய நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் அமைதிப் படையில் சேர்ந்துள்ளனர். இந்திலையில் ஐ.நா. அமைதிப் படையில் இந்தியாவிற்கு கூடுதல் அதிகாரங்கள் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொழில்முறை சிப்பாய்களும், பிற ராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்ட மசோதா ஒன்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
தெற்காசியப் பகுதியில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கான சக்தியாக இந்தியா திகழ்கிறது என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
கோஸ்டா ரிகா, நிகரகுவா, ஹோண்டுராஸ் ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளில் ‘நேட்’ என்று பெயரிடப்பட்ட வெப்ப மண்டல புயல் தாக்கியுள்ளது.
வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கயா அகதிகளை (சுமார் 9 லட்சம் பேர்) தங்க வைக்கும் விதமாக புதிய முகாம்களை அந்நாட்டு ராணுவம் அமைத்து வருவதாக நிவாரணத் துறை அமைச்சர் முஃபஸஸ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
தேசிய செய்திகள் :
தமிழகத்தின் 29வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் இன்று (அக்டோபர் 06) பதவியேற்றார்
லண்டனைச் சேர்ந்த ரீச் ஆல் யுமன் இன் வார்(ரா இன் வார்) என்ற அமைப்பு வழங்கும் அண்ணா போலிட்கோவ்ஸ்கயா விருதுக்கு ரஷ்யாவில் துப்பாக்கி சூட்டில் இறந்த பத்திரிக்கையாளரான கௌரி லங்கேஷ் (இந்தியா) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேகலாய மாநிலத்தின் 17வது ஆளுநராக பாஜக மூத்த தலைவர் கங்கா பிரசாத் நேற்று(அக்டோபர் 05) பதவியேற்றார்.
அமெரிக்காவில் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்திய வம்சாவளி விஞ்ஞானியான நிஷா டிசில்வாவக்கு தேசிய பல் மற்றும் முக எலும்பு மருத்துவக் கல்வியகம் (என்ஐடிசிஆர்) சார்பில் கௌரவம் மிக்க சாதனை ஆய்வாளர் விருதும், ரூபாய் 52.7 கோடி உதவி தொகையும் வழங்கப்பட்டது.
டெல்லி ஜந்தர்மந்தரில் எந்த விதமான போராட்டங்களும் நடத்தக் கூடாது என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
உயர்க் கல்விக் கற்க மாற்றுத் திறனாளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அரசு மற்றும் அரசு நிதிப்பெறும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க ஒடிஸா அரசு திட்டமிட்டுள்ளது.
சமூக ஆர்வலர் டி.எஸ். சலீம் அகமதுக்கு இந்திய மனித உரிமை கவுன்சில் சார்பில் 2017ம் ஆண்டிற்கான ‘மனித சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அக்டோபர் இறுதிக்குள் இணையதள சேவை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள் :
24 அணிகள் இடையிலான ஜுனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் இன்று (அக்டோபர் 06) தொடங்குகிறது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் பற்றிய சுயசரிதை எழுத உள்ளார்.
உள்நாட்டு தொடரில் முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ரஞ்சிகோப்பை இன்று (அக்டோபர் 06) தொடங்குகிறது. இதில் சி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி, ஆந்திராவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இத்தாலியில் உள்ள இமோலாவில் பாஸ் ஜி.பி. கார் பந்தயம் நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்த மஹாவீர் ரகுநாதன் 7 போட்டிகளில் 263 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் மற்றும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்
2018ம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தூதராக, நியூசிலாந்து ஆல் ரவுண்டரான கோரே ஆண்டர்சனை ஐசிசி நியமித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான மிக்கி ஆர்தரின் பதவிக்காலத்தை, 2019ம் ஆண்டு உலகக் கோப்பை வரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீட்டித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி, இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா 6 சர்வதேச ஆட்டங்களில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
வர்த்தக செய்திகள் :
போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் 100 முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10 வருடம் முதலிடத்தில் உள்ளார்.
அமெரிக்காவைச்சேர்ந்த மாஸ்டர்கார்டு நிறுவனம் இந்தியாவில் 80 கோடி டாலர் முதலீடு செய்யபோவதாக அறிவித்திருக்கிறது.
தூத்துக்குடி – கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கூகுள் நிறுவனம் தற்போது புதிய லேட்டஸ்ட் டெக்னாலஜியில் அமைந்த ஹெட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெட்போன் 40 மொழிகளை மொழி பெயர்க்கும் திறன் கொண்டது.
ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டை 65 ஆயிரம் டாலருக்கு ஏலம் விடப்பட்டது.
இந்தியாவின் நடப்பு ஆண்டில் பொதுப்பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) வரலாறு காணாத அளவில் வளர்ச்சி அடையும் என எர்ன்ஸ்ட் யங் நிதி ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ரீஇன்சூரன்ஸ்(ஜிஐசி-ஆர்.இ.) நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.11,370 கோடி நிதி திரட்ட உள்ளது.

TNPSC Current Affairs 05.10.2017

** TNPSC Current Affairs 05.10.2017 **
உலக செய்திகள் :
இங்கிலாந்தின் ஹார்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ரோபோக்கள்(எந்திர மனிதன்) மூலம் பார்லி, விதைத்து அறுவடை செய்து சாதனைப் படைத்துள்ளனர்.
பிரான்ஸில் மாடல்களின் படங்களை தொழில்நுட்ப ரீதியாக மாற்றம்(Edit) செய்து போலி விளம்பரங்களை உருவாக்குவதை தடுக்க புதிய கட்டுபாட்டு விதிக்கப்பட்டுள்ளது. எடிட் செய்யப்பட்ட படங்கள் விளம்பரம் செய்யப்படும் போது “இந்த படம் எடிட்” செய்யப்பட்டுள்ளது என்று கீழே குறிப்பிட வேண்டும். இந்த விதியை மீறுபவர்களுக்கு 37500 யூரோக்கள் அல்லது விளம்பரம் எடுப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் தெற்குப் பகுதி நதிநீர் நிறைந்தும் வடக்கு பகுதி வறட்சியாகவும் காணப்படும். இந்த வறட்சியை போக்க தெற்கே உள்ள நதிநீரில் 10 பில்லியன் கனமீட்டர் தண்ணீரை வடபகுதிக்கு (பீஜிங் நகர்) திசை திருப்பி தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து சீனா சாதனைப் படைத்துள்ளது.
“கிரையோ – எலக்ட்ரான்” நுண்ணோக்கு முறையை உருவாக்கிய (ஜாக்குவஸ் டுபோஷே, ஜோசிம் ஃபிராங்க், ரிச்சர்ட் ஹெண்டர்ஸன்) மூன்று உயிரி வேதியியல் விஞ்ஞானிகளும் இந்த ஆண்டுக்கான(2017) வேதியியல் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
துபாயில் இந்திய டிரைவரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய பெண்ணுக்கு(ஜாவஹெர் சயீப் அல் குமைத்தி) அரபு அரசு தைரியப் பெண் என்ற விருதை வழங்கியுள்ளது.
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெச் - 1பி நுழைவு இசைவு (விசா) வழங்கும் நடைமுறையை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது.
ஜிபூட்டி நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் சிங் ஆவார். வெளிநாட்டு அலுவலக அளவில் தொடர்ச்சியாக கலந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்த ஜிபோடியுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது.
ஜப்பானில் கடந்த 2011ஆம் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபுகுஷிமா அணு உலைகளை மீண்டும் இயக்க, அந்த நாட்டின் அணுசக்தி அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்பெயினில் உள்ள தன்னாட்சிப் பிரதேசமான காடலோனியாவை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த நாட்டு மன்னர் பிலிப் நிராகரித்துள்ளார்.
தேசிய செய்திகள் :
பீகார் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சத்யபால் மாலிக் நேற்று(அக்டோபர் 4) பதவியேற்றார்.
2022ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மரபுசாரா எரிசக்தித் திறன் இரு மடங்கைவிட அதிகமாக இருக்கும் என்று சர்வதேச மரபுசாரா எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.
குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்துக்கு ஜனசங்கத் தலைவர்களின் ஒருவரான “தீனதயாள் உபத்யாவின்” பெயரை சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் போலாவரம் நீர்ப்பாசனத் திட்டம் வரும் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 9 மாதங்களில் 34 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தை தொடர்ந்து தமிழகம் 4வது இடத்தில் உள்ளது.
தமிழகம் முழுவதும் நான்கு லட்சம் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கும் சிறப்பு திட்டம் “தொடுவானம் திட்டம்” துவங்க உள்ளதாக கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள் :
ஆஸ்திரேலியாவில் முதன் முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் (கிளைர் போலாசாக்) அம்பயர் களம் இறங்குகிறார்.
யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிகபட்சமாக 16 முறை அமெரிக்கா மற்றும் பிரேசில் பங்கேற்றுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு 3 மாத ஊதியமாக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பிசிசிஐ வழங்கியுள்ளது.
ஏபிடி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண் - ஸ்காட் லிப்ஸ்கி இணை, ஆடவர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
டெல்லியில் நடைபெறும் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நிதின் குமார் சின்ஹா, பவா ஹத்தின் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்
ஆஸ்திரேலிய ஹாக்கி லீக் (ஏஹெச்எல்) போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய ‘ஏ’ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வர்த்தக செய்திகள் :
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவராக ரஜ்னீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரெப்போ விகிதத்தில் தற்போது உள்ள 6 சதவீதம் வட்டி விகிதமே தொடரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டிரஸ்ட் வைத்துள்ளவர்கள் மற்றும் அதிகப் பணம் வைத்துள்ள தனிநபர் மீது inheritance tax விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கோதுமை மீதான இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
தூத்துக்குடியிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரியாவிற்கு 32,500 டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ‘சிங்கிள் பிராண்டு’ சில்லறை விற்பனை துறையில், ஐந்து நிறுவனங்களின்(ஓப்போ மெபைல்ஸ் இந்தியா, லூயிஸ் உட்டன் மாலி – டையர், சும்பக் டிசைன், டேனியல் வெலிங்டன், அக்டோ – செர்பா ஆக்டிவ் வோல்சேல்) அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

TNPSC Current Affairs 02.10.2017

** TNPSC Current Affairs 02.10.2017 **
உலகச் செய்திகள்
ஸ்வீடனின் ஸ்டோக்ஹோம் நகரில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஜெப்ரி ஹால் (அமெரிக்கா), மிக்கேல் ராஸ்பாஷ் (அமெரிக்கா), மைக்கேல் யங் (மியாமி) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புகைப் பிடிக்கும் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்க “ஐந்தாண்டு வேலைத் திட்டம்” சுகாதார அமைச்சகத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. 2030ம் ஆண்டு எடுக்கப்படும் விகித கணக்கில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை 5 சதவீதம் குறைக்கும் விகித்தில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இந்த வேலைத்திட்டத்திற்கு 20 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்க பிரிட்டன் அரசு முன் வந்துள்ளது.
சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு பிரத்யேக ஓட்டுநர் பயிற்சி பள்ளியைத் தொடங்க உள்ளதாக “இளவரசி நூரா மகளிர் பல்கலைக்கழகம்” அறிவித்துள்ளது.
சீனா திபெத் மாகாண தலைநகர் லாசா மற்றும் நியின்சி ஆகிய 2 நகரங்களை இணைக்கும் வகையில் புதிய நெடுஞ்சாலை(409 கி.மீட்டர்) அமைத்துள்ளது.  இதற்கு ‘வரி இல்லா எக்ஸ்பிரஸ் வே’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஜப்பான், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளிலும், சோவியத் யூனியனில் இடம்பெற்றிருந்த நாடுகளிலும் ஒலிபரப்பு சேவையைத் தொடங்க அகில இந்திய வானொலி திட்டமிட்டு வருகிறது.
தேசிய செய்திகள்
ஓ.பி.சி உட்பிரிவை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவராக ரோகிணி (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐரின் என்று சுருக்கமாக அழைக்கப்படும் Indian Registry for Internet Names and Numbers என்ற அமைப்பின் இணையங்கள் மீது ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஷீரடியில் (மகாராஷ்டிரா) புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று(02-10-2017) திறந்து வைத்தார்.
‘சன்சத் ஆதர்ஷ் கிராம்’ திட்டத்தின் கீழ் திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காத பகுதியாக அம்பாலா கிராமம் (ஜிதேந்திர சிங் தத்தெடுத்த) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உத்திபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலில் உலகப் புகழ்வாய்ந்த தாஜ்மஹால் இடம் பெறவில்லை.
தூய்மையை வலியுறுத்தி, விஷ்ணு (கோவை கல்லூரி) தயாரித்த குறும்படம், தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றது.
விளையாட்டு செய்திகள்
“ஐல் ஆப் மேன்” செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2 வது இடத்தை பிடித்துள்ளார்.
பிரான்சில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றில் பிரிட்டன் வீரர் சாஸ் டேவிஸ் வெற்றி பெற்றார்.
ஊக்கமருந்து பயன்படுத்தியதால் ஒன்பது நாடுகளுக்கு (ரஷியா, சீனா, ஆர்மேனியா, அஜர்பைஜான், பெல்லாரஸ், மால்டோவா, கஜகஸ்தான், துருக்கி, உக்ரைன்) அடுத்த ஒரு வருடத்திற்கு சர்வதேச பளு தூக்குதல் போட்டியில் பங்கேற்க தடை விதித்துள்ளதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் (ஐடபிள்யுஎஃப்) தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
மலேசியாவில் நடைபெற்ற ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் 15-வது சுற்றில் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) முதலிடம் பிடித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காயத்ரி இந்திய அளவில் நடைபெற்ற மலையேறுதல் போட்டியில் 5,345 மீட்டர் (17,825 அடி) உயரமுள்ள் லடாக் சிகரத்தை (ஹிமாச்சலப் பிரதேசம்) ஏறி சாதனை படைத்துள்ளார்.
வர்த்தக செய்திகள்
ஜப்பானின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக (ஜப்பானில் வெளியான அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2017 வரை உற்பத்தி செய்யப்பட்ட) 1.2 மில்லியன் கார்களை திரும்ப பெறுகிறது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு (பிஎப் படிவம்) தகவல்களை தாக்கல் செய்யாத 700 பிஎப் டிரஸ்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக “வருங்கால வைப்பு நிதி ஆணையம்” அறிவித்துள்ளது.
முதல் காலாண்டில் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வருவாய் 25 சதவீதம் சரிந்துள்ளதாக இந்தியா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளருக்குத் தெரிவிக்காமல் சிம் கார்டை செயலிழக்க வைத்த பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு ஹைதராபாத் நுகர்வோர் நல வாரியம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவின் கோடீஸ்வரர்கள் முதல் 10 இடங்களில் டீமார்ட் நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் தமானி 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதிக வேகத்தில் செல்லக்கூடிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கிய “எலான் மஸ்க்” பூமியின் எந்த மூலையில் இருந்தும் ஒரு மணி நேரத்தில் பூமியைச் சுற்றிவிடும் பயணிகள் வாகனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
வணிக ரகசியங்கள், தகவல்ளைத் திருடியதற்காக முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.2,740 கோடி (42 கோடி டாலர்) அபராதம் அமெரிக்க நீதிமன்றம் விதித்;தது.

TNPSC Current Affairs 04.10.2017


** TNPSC Current Affairs 04.10.2017 **
உலக செய்திகள் :
ஜெனிவா நகரில்(சுவிட்சர்லாந்து) உள்ள உலக சுகாதார அமைப்பின் இணை தலைவராக டாக்டர் சவுமியா சுவாமிநாதன் (தமிழகத்தை சேர்ந்தவர்) நியமனம் செய்யப்பட்டார்.
மியான்மரிலிருந்து நேற்று (அக்டோபர் 03) 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கயா அகதிகள் வெளியேறி வங்கதேசத்திறகுள் நுழைந்தனர்
பிரான்ஸின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு  சட்டத்திற்கு (நீதித்துறையின் அனுமதியின்றி சுலபமாக வீடுகளில் சோதனையிடுவது மற்றும் தங்களுடைய நகரங்களில் தனி நபர்களை தடுப்பு காவலில் வைப்பது போன்ற பல நடவடிக்கைகள் இதில் அடங்கும்) அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று (அக்டோபர் 04) உலக விலங்கு தினம்
ஸ்காட்லாந்தில் உள்ள பீனிக்ஸ் பனிமலை முற்றிலும் உருகிவிட்டது. கடந்த 300 அண்டுகளில் இந்த மலை 7 முறை உருகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸில்(பிரான்ஸ்) உள்ள ஈபிள் டவர் உலக புகழ்பெற்ற நினைவு சின்னமாக கருதப்படுகிறது. இது 1889ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதுவரை 300 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்த நினைவுச் சின்னம் என்ற பெருமையை ஈபிள் டவர் பெற்றுள்ளது.
உலகில் எந்த ஒரு நாட்டில் பயங்கரவாத சம்பவம் நிகழ்ந்தாலும், அதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரிஸில் உள்ள ஈபிள் டவர் விளக்குகள் அணைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வளரும் நாடுகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான தொண்டு நிறுவனத்தை “Little Things”(தன் சொந்த செலவில்) உருவாக்கியதற்காக மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர் “ராதவன் குணரட்ணராஜா” என்பவர்க்கு பிரத்தானியாவின் 787வது Point of Light  விருது அந்நாட்டு பிரதமரால் வழங்கப்பட்டது.
அயர்லாந்தில் உள்ள Limerick பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்ணீர் மற்றும் உமிழ்நீரிலிருந்து மின்சாரத்தை(Piezoelectricity) உற்பத்தி செய்யும் வழிமுறையினைக் கண்டறிந்துள்ளனர்.
தேசிய செய்திகள் :
இந்தியாவைச் சேர்ந்த கல்வியாளர் “பிரஜாபதி திரிவேதி”,  அமெரிக்காவில்  நாபா எனப்படும்  கௌரவமிக்க அமைப்புகளில் ஒன்றான தேசிய பொது நிர்வாகத்தின் மைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மிகச் சிறப்பாக செயல்பட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு விருது வழங்கப்பட்டது.
இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரெயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த சேவை கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சேவை கட்டண விலக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது
மீரட்டில், பிரதமர் நரேந்திர மோடிக்கு 100 அடி சிலை நிறுவப்படும் என்று உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஜே.பி. சிங் தெரிவித்துள்ளார்
ஆந்திர மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை பெற தெலுங்கை கட்டாயமாக்க வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்  
தமிழகத்தில் 5.95 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 8 மற்றும் 22ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வைகை அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை, மத்திய அரசின் அனுமதி பெற்ற தனியார் நிறுவனத்திடம் தமிழக அரசு ஒப்படைத்தது
திபாவளி பண்டிகையை முன்னிட்ட சிவகாசியில் இந்த ஆண்டு ஆன் - லைன் பட்டாசு விற்பனை நடைபெறுகிறது.
விளையாட்டு செய்திகள் :
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி 6வது இடத்தில் உள்ளார்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விஜயவாடாவில் நடைபெற்றது இதில் இந்தியா ஏ அணி நியூசிலாந்து ஏ அணியை வீழ்த்தியது.
84வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6ம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 2ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
பிபா 17வது ஜுனியர் உலக கோப்பை (17 வயதிற்குட்பட்டோருக்கான) கால்பந்து போட்டி நாளை அக்டோபர் 5ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை டெல்லி, கொல்கத்தா, கொச்சி, மும்பை, கவுகாத்தி, கோவா ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது.
சீனாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் காரைக்குடி மாணவர் எம். பிரனேஷ் தங்கப்பதக்கம் பெற்றார்.
ஆஸ்திரேலிய ஹாக்கி போட்டியில் இந்திய மகளிரி ஏ அணி டாஸ்மோனியா அணியை வீழ்த்தியது. இந்திய ஆடவர் ஏ அணி, ஆஸ்திரேலிய பிராந்திய அணியை வீழ்த்தியது.
16வது உலக கோபுகான் அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ. விளையாட்டு அரங்கில் அக்டோபர் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடக்கிறது.
வர்த்தக செய்திகள் :
சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு ஹைதராபாத்தில் நவம்பர் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும்
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்து உள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் (எஸ்இஇசட்) ஏற்றுமதி ரூ.1.39 லட்சம் கோடியாக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் கீழ் தேசிய கொள்ளைலாபம் தடுப்பு ஆணையத்தை அமைப்பதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவைக் குழு இன்று (அக்டோபர் 4) வழங்க உள்ளது.
ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் செப்டம்பர் மாத வாகன விற்பனை 27.5 சதவீதம் அதிகரித்தது
சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற மாதத்தில்(செப்டம்பர்) 23 சதவீதம் அதிகரித்துள்ளது
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை செப்டம்பர் மாதத்தில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

TNPSC Current Affairs 03.10.2017

** TNPSC Current Affairs 03.10.2017 **
உலக செய்திகள்
ஜப்பானில் முதிவர்கள் தங்களது ஓட்டுநர் உரிமத்தை கைவிடும்படி அதிகாரிகள் ஊக்குவித்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் முதியவர்கள் வாகனம் ஓட்டாமலிருக்க ஊக்கப் பரிசுகளையும் வழங்கி வருகின்றனர்
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க வேண்டும் என்றும் அதன் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், டிரம்ப் அரசை கேட்டு கொண்டார்.
ரோஹிங்கயா இன மக்கள் விவகாரம் தொடர்பாக இந்தியா – வங்கதேச நாடுகளின் எல்லை பாதுகாப்புப் படைகள் இன்று (அக்டோபர் 03) பேச்சு வார்த்ததை நடத்த உள்ளனர்.
இலங்கையில் கல்வி பயிலும் 45 லட்சம் மாணவர்களுக்கு 5லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுரக்ஷா திட்டம் (இலவச காப்புறுதி திட்டம்) நேற்று (அக்டோபர் 02) நிறைவேற்றப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினின் வடக்கே உள்ள காட்டலோனியா பகுதி தன்னாட்சி பெறுவதற்கான பொது வாக்கெடுப்பில், 90 சதவீதம் பேர் தனி நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். காட்டலோனியாவை தனி நாடாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அந்த மாகாண தலைவர் “கார்லஸ் புயிக்டிமோன்ட்” தொடங்கி உள்ளார்.
குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியில் உள்ள வெளி நாட்டினர் ஈராக் ‘அரசின் நுழைவு இசைவு(விசா)’ இல்லாமல் அந்த நாட்டிலிருந்து வெளியே செல்லலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளளது.
வங்க தேசத்தில் தஞ்சடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் அரசு திட்டமிட்டுள்ளது.
ஜிகா, டெங்கு பாதிப்பைக் கண்டறியும் மலிவு விலை பரிசோதனை முறையை (ஒரு நீளப் பட்டையில் டெங்கு பாதிக்கப்ட்டவர்களின் இரத்தம் செலுத்தப்படும் டெங்கு பாதிப்பு இருப்பின் பட்டையின் நிறம் மாறும்)அமெரிகாவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்
தேசிய செய்திகள்
சீனாவுடனான எல்லைப் பகுதியில் நிலவி வரும் அசாதாரண சூழல்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழுவொன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை வகுத்துத் தருமாறு நீதி ஆயோக் அமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவிடத்தில் அவரது வெண்கலச் சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்.
தமிழகத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 05) டெங்கு ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
காற்று மாசு, உடல்நலக் கோளாறுகளை தவிர்க்க நெல் அரவை ஆலைகளுக்கு காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க உள்ளது. இதன் அடிப்படையில் விவசாய மின் இணைப்புக்கு, இணையத்தில் விண்ணப்பிக்கும் சேவையை தொடங்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்களில் படிக்கும் 90 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையால், விரைவில் மருத்துவ காப்பீடு வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
ஐசிசி தரவரிசையில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இரண்டு இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், ரோஹித் சர்மா 5வது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் நெஹரா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அஸ்வின் ராவீந்திர ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
வங்காள தேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் தொடர் நவம்பர் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை வியட்நாமில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் சார்பில் மேரி கோம் மற்றும் சரிதா தேவி கலந்து கொள்கின்றனர்.
29வது மாநில சப் - ஜுனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலையில் அக்டோபர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (நவம்பர்) மற்றும் டிசம்பர் மாத்தில் இந்தியாவிற்கு எதிராக 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர்போட்டி தொடரில் விளையாட உள்ளது
தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆடவர் பிரிவில் சென்னை கிறிஸ்;தவக் கல்லூரி அணியும். மகளிர் பிரிவில் சென்னை வைஷ்ணவ கல்லூரி அணியும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
வர்த்தக செய்திகள்
தற்போது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் அதே சமயம் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா - ஆண்டு இறுதி கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது. இதன் படி ரூ. 1299 உள்நாட்டு பயணத்துக்கும், ரூ. 2399 வெளிநாட்டு பயணத்தக்கும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது
இந்தியாவில் மின்சார வழித்தட வசதியை மேம்படுத்துதல், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார பயன்பாட்டை அதிகரித்தல் தொடர்பான திட்டத்திற்கு ரூ.655 கோடியை(100 மில்லியன் டாலர்கள்) கடனாக வழங்குவதற்கு ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி (ஏஐஐபி), ஆசிய வளர்ச்சி வங்கி(ஏடிபி) ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இணையதள சமவாய்ப்பு (நெட் நியூட்ரலிட்டி) தொடர்பான கொள்கைகள் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.9 சதவீதமாக குறைத்தது.
பிரிட்டணைச் சேர்ந்த முன்னணி விமான நிறுவனமான மோனார்க் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. மேலும் 3,00,000 முன்பதிவுகளையும் ரத்து செய்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கை மூடும் வாடிக்கையாளர்களிம் கட்டணமாக ரூ.500 ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலித்து வந்தது. இந்நிலையில் குறைந்த பட்சம் ஓராண்டுக்கு மேல் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டணத்தை ரத்து செய்துள்ளது.

TNPSC Current Affairs 30.09.2017

** TNPSC Current Affairs 30.09.2017 **
உலக செய்திகள் :
40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது
ஈராக் அரசை எதிர்த்து : தனி நாடு கோரி குர்திஸ்தான் மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தினர். இதன் காரணமாக அப்பகுதிக்கு செல்ல வேண்டிய மற்றும் அங்கிருந்து வெளியேற வேண்டிய சர்வதேச விமானங்களை ஈராக் ரத்து செய்தது.
இலங்கையில் முதலாவது மும்மொழி தேசிய பள்ளிக்கூட பணிகளை அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (செப்டம்பர் 29) தொடங்கி வைத்தார்.
சவுதி அரேபிய அரசுக்கான பிரதான ஆலோசனைக் குழு “ஃபத்வா” என்ற சமய தீர்ப்பை பெண்கள் வழங்குவதற்கு முதன் முறையாக உரிமை வழங்கியுள்ளது.
இந்தோனிஷியாவின் பாலித் தீவில் உள்ள ‘ஆகங்’ என்ற எரிமலை 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது.
நிதி சேவைகள் நிறுவனமான Allianz 2016ம் ஆண்டிற்கான உலகின் பணக்கார நாடு பட்டியலை வெளியிட்டது. இதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
“ரெண்ட் கேப்” ஆன்லைன் இணையதள நிறுவனம் (அதிக பணம் பெற்று கொண்டு குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும்) மோசமான நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இஸ்தான்புல்(துருக்கி) முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சூரியனை ஆராய “Parker Solar Probe” என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
Oxford, Munster  மற்றும் Exeter பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையைப் போல செயற்படக் கூடிய மைக்ரோ சிப் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
வெள்ளைநிற ஒட்டகச்சிவிங்கி (கென்யா) வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது. “லியூசிசிம்” எனும் நிறமி காரணமாக விலங்குகளில் சில இவ்வாறு முழுவதும் வெள்ளை நிறத்தை பெறுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரெக்ஸிற் தேர்தலுக்குப் பின் அயர்லாந்தின் இரட்டைக்குடியுரிமையை பெற்றுக் கொள்ள முனையும் பிரத்தானிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
தேசிய செய்திகள் :
தமிழகத்தின் புதிய மற்றும் முழு நேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்கோ(உத்தர பிரதேசம்) - சாலைகளில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு ரூபாய் 50000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாக அதிகாரி உதயராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
இரயில் விபத்துக்களைத் தடுக்க இஸ்ரோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியைக் கண்டுபிடிக்க புதிய நடைமுறையை (மாவட்ட அலுவலங்களில் இருந்து ஊழியர்களின் சான்றிதழ்களின் நகல் தேர்வு துறைக்கு அனுப்பப்படும் தேர்வுத் துறை அதிகாரிகள் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து சான்றிதழ் வழங்குவர்) தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் ஹிந்தி எதிர்பால் துவக்க முடியாமல் முடங்கி கிடந்த நவோதயா பள்ளிகள் 30 ஆண்டுகளுக்கு பின் தொடங்கப்பட உள்ளது. இதற்கான தடையில்லா சான்றிதழை நவம்பர் 20க்குள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
திருமண பதிவுக்கு மணமக்கள், பெற்றோர், சாட்சிகளின் ஆதார் அட்டையையும் ஆவணமாக்க தமிழக அரசு அதிகாரபூர்வ உத்தரவை  பிறப்பித்துள்ளது.
நடிகர், இயக்குநர் மற்றும் எழுத்தாளரும் பத்ம ஸ்ரீ விருது வென்றவருமான “டாம்அல்டொ” (வயது 67) இன்று(செப்டம்பர் 30) இன்று காலமானார்
விளையாட்டு செய்திகள் :
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆடையில் உள்ள ஸ்டார்கள் இதுவரை இந்திய அணி 3 முறை உலக கோப்பையை (1983, 2007 (டி20), 2011 (50 ஓவர்) )வென்றுள்ளது என்பதை குறிக்கிறது
இந்தியாவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ்சுக்கு எதிரான 5வது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஐல் ஆப் மேன் செஸ் தொடரின் 6வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், விதித் சந்தோஷ், சுவப்னில் ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் ஆசிஸ் தொடர் மிகவும் பிரபலமானதாகும். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடர் நவம்பர் 23ம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 7ம் தேதி வரை நடக்கிறது.
சென்னையில் புரோ கபடி போட்டி இன்று (செப்டம்பர் 30) தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.
வர்த்தக செய்திகள் :
ICICI  வங்கி வீட்டுக் கடன் வசதியில் கேஷ் பேக் (உதாரணமாக : 30 லட்சம் ரூபாய் கடனை 30 மாதத்தில் திருப்பிச் செலுத்தும் நபருக்கு மாதம் தலா 1 சதவீதம் மொத்த காலத்தில் ரூ 801 சேமிக்கப்படுகிறது) சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது
ஜிஎஸ்டி தொடர்பான மறு ஆய்விற்காகவும் புதிய வரி விதிப்பின் செயல் பாடுகள் குறித்தும் ஏற்றுமதி வர்த்தகர்களை மத்திய நிதி அமைச்சர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்தார்.
முதலாம் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி சரிவு, சில்லரை பணவீக்கம் உயர்வது உள்ளிட்ட காரணங்களால் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்காது என இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீர்மின் உற்பத்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ள பொதுத் துறையைச் சேர்ந்த என்ஹெச்பிசி நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்ட அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
ஆர்ஜியோ நிறுவனம் 1500 ரூபாய் டெபாசிட்டில் ஆர்ஜியோ பியூச்சர் போன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பின் இந்த போனை ஒப்படைத்து டெபாசிட்டை திரும்பப் பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

TNPSC Current Affairs 29.09.2017

** TNPSC Current Affairs Daily News - 29.09.2017 **
உலகச் செய்திகள்
வடகொரிய நாட்டவர்கள் ஸ்ரீலங்காவிற்குள் நுழைவதற்கான  கட்டுபாடுகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் அதிகரித்துள்ளது..
ஜெர்மனி நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் ஏஞ்சலா மெர்க்கலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் “ஹ_க் ஹெப்னர்” (91 வயதில்) வயோதிகம் காரணமாக நேற்று முன்தினம்(28-09-2017) காலமானார்.
செப்டம்பர் 29 உலகம் முழுவதும் இதய தினமாகக் அனுசரிக்கப்படுகிறது.
சீனாவில் செயல்படும் வடகொரிய நிறுவனங்கள் 120 நாட்களுக்குள் மூடப்பட வேண்டும் என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதி ஜோசப் டன்ஃபோர்ட்  மேலும் இரண்டு ஆண்டுகள் தொடர்வதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது.
அமெரிக்காவில் வருமான வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளில் அதிரடியான சீர்திருத்தங்களை (இனி தனிநபர் வருமான வரி விகிதங்கள் 10, 25, 35 சதவீதம்) அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
தேசிய செய்திகள்
ஆந்திராவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்ககூடாது என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
கிராமப்புற மக்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு அளிக்கும் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு” உறுதியளிப்பு திட்டத்துக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி ஏற்று கொண்ட ராம்நாத் கோவிந்த் முதல் வெளிநாட்டு பயணமாக வரும் அக்டோபர் 4-ம் தேதி எத்தியோப்பியா (ஆப்பிரிக்கா) செல்கிறார்.
நியுயார்க்கில் நடைபெற்ற என்ஜிஓ மாநாட்டில் சிறார்களுக்கு (பிரதாம் அமைப்பு) கல்வி அளிப்பதற்காக ரூ.26.21 கோடி நிதி கிடைத்துள்ளது.
மகாராஷ்ராவிலுள்ள அம்தேலி (காட்சிரோல் என்ற மாவட்டம்) என்ற குக்கிராமத்திற்கு 70 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் மற்றும் பஸ் வசதி கிடைத்துள்ளது.
‘துப்புரவு மேற்பார்வையாளர்’ பணி தொடர்பாக சிறுபான்மையின இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க நாடு முழுவதும் 100 மையங்கள் “கரீப் நவாஸ்” அமைக்கப்படும் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
57-வது தேசிய ஓபன் தடகள போட்டியில் ரெயில்வே அணி 16 தங்கப்பதக்கத்தை வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
லக்னோவில் இந்தியா ரெட் - இந்தியா ப்ளு அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி இறுதிப் போட்டியில் 163 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ரெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சர்வதேச பாட்மிட்டன் தரவரிசையில் இந்திய வீரர்கள் 5 பேர்(ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத், அஜய் ஜெயராம், சமீர் வர்மா) முதல் 20 இடங்களில் உள்ளனர்.
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 98-ஆவது ஆட்டத்தில் யு-மும்பா அணி பெங்களுரு புல்ஸ் அணியைத் தோற்கடித்தது.
சான் பிரான்சிஸ்கோ ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
57-ஆவது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் லட்சுமணன் (10 ஆயிரம் மீ. ஓட்டத்தில் தமிழக வீரர்) தங்கப் பதக்கம் வென்றார்.
வர்த்தக செய்திகள்
பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் (எரிவாயு, மண்ணெண்ணெய், ரேஷன் மற்றும் உணவு) வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.58,000 கோடி மீதமாகி இருக்கிறது என மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டாடா கேபிடல் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜிவ் சபர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாத்திலிருந்து இவர் பொறுப்புக்கு வருவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹெச்பிசிஎல் நிறுவனத்தை கையகப்படுத்த தேவையான நிதியை திரட்ட கெயில், ஐஓசி ஆகிய நிறுவனங்களில் கொண்டுள்ள பங்குகளை விற்பனை செய்ய ஓஎன்ஜிசி பரிசீலித்து வருகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க வணிகர்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2017 செப்டம்பர் 18 வரை ரூ.3.7 லட்சம் கோடி “நேரடி வரி வருவாய்” மூலம்  வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Monday, October 2, 2017

A to Z English words meaning in tamil

*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.
*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.
*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.
*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
*G - Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.
*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.
*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.
*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.
*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.
*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.
*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.
*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.
*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.
*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.
*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.
*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.
*Z - Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்......படித்ததில் பிடித்தது.....

Wednesday, September 27, 2017

** TNPSC Current Affairs 27.09.2017 **

** TNPSC Current Affairs 27.09.2017 **
உலக செய்திகள் :
சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட முதன் முறையாக உரிமை வழங்கப்படவுள்ளது
அமெரிக்க அரசு 8 வடகொரிய வங்கிகள் மற்றும் 26 வங்கி அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது. வடகொரியாவுடனான பிரச்சனையை தீர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என அமெரிக்க நிதித்துறைச்செயலர் ஸ்டீவன் மினுசின் தெரிவித்துள்ளார்
சமூக வலை தளங்களான பேஸ்புக், டிவிட்டரைத் தொடர்ந்து, செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ் - அப்புக்கும் சீனாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றான பைன் தீவில் (அண்டார்டிகா) உள்ள பனிப்பாறையில் சுமார் 266 சதுர கிலோ மீட்டர் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்பாறை அண்டார்டிகாவில் மிகவும் வேகமாக உருகும் பனிப்பாறையாகும்
இந்தியாவிலிருந்து தக்காளி ஏற்றி செல்லும் கண்டெய்னர் லாரிகள் பாகிஸ்தான் எல்லையில் நுழைய அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. மேலும் உள்ளுர் சந்தையில் கடும் தட்டுப்பாடு இருந்த போதிலும் இந்தியாவிலிருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட மாட்டாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஐ.நா.வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க ஆதரவாக அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கோரிக்கைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுவோர் மீது ஐ.நா. கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பிலிப்பின்ஸ் நிறுவனங்களில் பணிப்புரியும் பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது
செப்டம்பர் 27ம் தேதி  -  கூகுள் நிறுவனத்தின் 19வது பிறந்த நாள்.
தேசிய செய்திகள் :
(செப்டம்பர் 26) - முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்  அவர்களின் (85வது) பிறந்த நாள்.
பாட்னாவை(பீகார்) சேர்ந்த ராஜ்குமார் (98 வயது) என்ற முதியவர் நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
ஆசிய அளவில் சிறப்பு வாய்ந்த முதல் 25 அருங்காட்சியகங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 அருங்காட்சியங்களும் இடம்பெற்றுள்ளன. அவை விக்டோரியா மெமோரியல் ஹால்(கொல்கத்தா), சிட்டி பேலஸ்(ஜெய்ப்பூர்), பகோர் கி ஹவேலி(உதய்பூர்), யோதஸ்தால்(போபால்), ஹால் ஆஃப் ஃபேம்(ஜம்மு காஷ்மீர்).
சர்வதேச தொழில்துறையில் சிறந்து விளங்கும் பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி, சந்தா கோச்சார், ஷிகா சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓஎன்ஜிசி) தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் சசி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 2020ம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களுக்கான 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் (செப்டம்பர் 26) நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மாநாட்டில் பங்குபெற்ற தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கத்தில் மாநில அரசு செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்குகிறது. அதற்கான வரைவு பட்டியலை அக்டோபர் 2ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிடுகிறது.
தமிழ்நாடு செரிமான நல அறக்கட்டளை சார்பில் ‘குடல் அழற்சி சர்வதேச மாநாடு’ சென்னை கிண்டியில் செப்டம்பர் 30ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவராக ஏ.எம். விக்கிரமராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள் :
கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை ஐசிசி அறிமுகபடுத்துகிறது. இந்த புதிய விதிமுறைகள் செப்டம்பர் 28க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவித்து உள்ளது. இந்த முறைப்படி கிரிக்கெட் களத்தில் மோசமாக நடந்து கொள்ளும் வீரர் கால்பந்து பாணியில் வெளியேற்றப்படுவார்.
17வது ஜுனியர் உலக கோப்பை கால்பந்துபோட்டி அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை கொல்கத்தா, கொச்சி, டெல்லி, மும்பை, கவுகாத்தி, கோவா அகிய 6 நகரங்களில் நடக்கிறது.
57வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா தங்கப்பதக்கம் வென்றார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை திரைப்படம் ஆக உருவாகிறது.
57வது தேசிய ஓபன் தடகள போட்டியில் குண்டு எறிதலில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த  தேஜிந்தர் பால் சிங் தங்கம் வென்றார்.
57வது தேசிய ஓபன் தடகள போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் ரயில்வே அணியைச் சேர்ந்த சரிதா பி.சிங் தங்கம் வென்றார்.
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற பி மண்டல அளவிலான வாலிபால் தொடரில் எத்திராஜ் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் 57வது தேசிய தடகள போட்டியில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் கேரளாவைச் சேர்ந்த ஜினு மரியா மானுவேல் தங்கம் வென்றார்.
வர்த்தக செய்திகள் :
நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்ட 2வது (ஆகஸ்ட்) மாதம் ரூ.90,699 கோடி வரி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு செலவு இந்த ஆண்டு ரூ.14,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மற்றும் போர்ட்போலியோ மேனஜ்மெண்ட் நிறுவனங்கள் கமாடிட்டி பங்குகளில் வர்த்தகம் செய்ய செபி அனுமதி வழங்க உள்ளது.
ரிலையன்ஸ் கேபிடல், மருத்துவ காப்பீட்டுக்கென தனி நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது
ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் அணிந்த ‘பாக்சர் ஷார்ட்ஸ்கள்’ ரூ.3.5 லட்சத்திற்கு நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது.
மாருதி சுசுகி, வேகன் ஆர் காரின் மொத்த விற்பனை இந்தியாவில் 20 லட்சத்தை தாண்டி சாதனைப் படைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் டேட்ஸன் ‘ரெடி – கோ கோல்டு’ புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

** TNPSC Current Affairs 26.09.2017 **

** TNPSC Current Affairs 26.09.2017 **
உலக செய்திகள்
விவசாய உற்பத்தியை 70 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று ஐ.நா. அறிவித்தத்தை அடுத்து ஆப்பிரிக்காவில் பயிர் சாகுபடியை அதிகரிக்க  “ஆளில்லா விமானங்கள் உதவியுடன் நவீன விவசாயம்” மேற்கொள்ளப்பட உள்ளது.
விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் களைக் கொல்லியான glyphosate -ஐ 2022ம் ஆண்டில் தடை செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
Utah State  பல்கலைக்கழகம் மற்றும் Southern Federal  பல்கலைக்கழகம் இணைந்து குறைந்த எடை மற்றும் அதிக பளபளப்பு உடையதுமான அலுமினிய படிகத்தை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர்.
துபாயில் பறக்கும் டாக்ஸி சோதனை செய்யப்பட்டது. விரைவில் விண்ணில் பறக்கும் டாக்ஸி சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று துபாய் இளவரசர் ஹம்தன்பின் முகமது தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கடற்படையை விரிவாக்கும் முயற்சியில் சீனா, ரஷ்யாவுடன் சேர்ந்து கூட்டு கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வங்க தேசத்தில் தங்கியுள்ள ரோஹிங்கயா முஸ்லிம் அகதிகளுக்காக இந்திய அரசு(தேசிய வேளாண் வர்த்தக சம்மேளனம் - என்ஏஎஃப்இடி) 620 டன் எடை கொண்ட உணவுப் பொருள்களை அனுப்பியுள்ளது.
உலகில் சதுர வடிவில் கொடிகள் கொண்ட நாடுகள் - சுவிட்சர்லாந்து, வத்திக்கன்
உலகிலேயே மிகப் பருமனான பெண் இமான் அப்துல் அட்டி(37வயது, எகிப்து) நேற்று (செப்டம்பர் 25)காலமானார்
நார்வே, ஃபின்லாந்து, அலஸ்கா, ஐஸ்லாந்து, கனடா மற்றும் ஸ்வீடன் ஆகிய 6 நாடுகளில் இரவிலும் சூரியன் உதித்து கொண்டிருக்கும். ஃபின்லாந்து நாட்டில் ஆயிரம் ஏரிகள் உள்ளது. அதிக நாட்கள் ஐஸ்கட்டி உறைந்திருக்கும் நாடுகள் பட்டியலில் கனடா 2வது இடத்தில் உள்ளது.
தேசிய செய்திகள்
நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் “சவுபாக்கிய யோஜனா(Saubhagya yojana) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இரயில்வே நிலையத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் விலையைக் கட்டாயம் அச்சிட வேண்டும் என இரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
சிறார் மீட்புத் திட்டம் - (இரயில் பயணத்தின் போது தொலைந்து போகும் சிறார்களை மீட்கும் மையங்கள்) உதவி மையங்களை மேலும் 47 ரயில் நிலையங்களில் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசுக்கு செலுத்த வேண்டிய வாடகை, தொலைபேசி, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டண பாக்கி எதுவும் இல்லை என அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக இந்த மாதம்(செப்டம்பர்) முதல் மாதந்தோறும் ரூ.1200 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஏ.சி.எஸ். அறக்கட்டளை தொடக்க விழாவில் பங்கேற்ற புதிய நிதிக்கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர் உருவ (30 அடி உயரம்) வெண்கல சிலை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
மின்னுற்பத்தித் திட்டங்கள், மின்கட்டண விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய தகவல் கையேட்டை தமிழக மின் வாரியம்(டான்ஜெட்கோ) வெளியிட்டுள்ளது. 
தொலைந்த படிப்பு சான்றிதழ்களின் நகல்களை பெற, ஆதார் வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும் 2 நாட்களில் நகல் கிடைக்கும் என தமிழக உயர்க்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
57வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சர்வீசஸ் வீரர் லெட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றார். ரெயில்வே வீரர் அபிஷேக் பால் வெள்ளிப் பதக்கமும், சர்வீசஸ் வீரர் மான்சிங் வெண்கலப் பதக்கமும் வென்றனர்
57வது தேசிய ஓபன் தடகள போட்டியில் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ரெயில்வே வீராங்கனை எல். சூர்யா தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது ஒரு நாள் போட்டி பெங்களுரில் செப்டம்பர் 28ம் தேதி நடக்கிறது. 5வது ஒரு நாள் போட்டி அக்டோபர் 1ம் தேதி நாக்பூரில் நடக்கிறது.
புதுக்கோட்டையில் நடைபெற்ற - புதுவை கோப்பைக்கான மாநில ஆடவர் கூடைப்பந்து போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2017 -2018 சீசன் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் விளையாடவுள்ள புணே எப்.சி. அணியின் புதிய பயிற்சியாளராக செர்பியாவின் ராங்கோ போபோவிச் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சென்னை லயோலா – ஐசிஏஎம், செயின்ட் ஜோசப்ஸ் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது.
தென்னிந்திய அளவில் சிபிஎஸ்இ மண்டல அளவிலான நீச்சல் போட்டி (8 மாநிலங்கள்) - 50 மீட்டர் நீச்சல் போட்டியில் சென்னையை சேர்ந்த ஹர்ஷிதா தங்கப் பதக்கம் வென்றார்.
வர்த்தக செய்திகள்
போட்ஸ்வானாவின் தேசிய மொழியில் “நமது ஒளி” என்று அழைக்கப்பட்ட உலகில் மிகப் பெரிய வைரம் (எடை – 1109 காரட்) ஏலம் விடப்பட்டது இதனை இங்கிலாந்து கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் 53 மில்லியன் டாலருக்கு வாங்கியது என்று கனடா லூகரா வைர கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது
பாரத் ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதந்தோறும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச சராசரி இருப்பை ரூ. 5000 லிருந்து ரூ.3000 ஆக குறைத்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்கி அதற்கு தலைவராக பிபேக் டெப்ரோயை நியமித்துள்ளார்.
ஆட்டோமொபைல் துறையினர் எதிர்பார்க்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் வளாகத்தில் 2018ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
உலகின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனம் - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(ஆர்ஐஎல்) 3வது இடத்தில் உள்ளது. இந்தியன் ஆயில் 7வது இடத்தில் உள்ளது என குளோபல் எனர்ஜி தரகுறியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) ரூ.27,460 கோடியில் சுத்திகரிப்பு ஆலை அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (ஐஓசி) இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


Friday, August 11, 2017

பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு

பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு


புரட்சிக் கவிஞர், பாவேந்தர், தமிழ்நாட்டின் இரசு+ல் கம்சதேவ் என்று சிறப்பு பெயர் கொண்ட பாரதிதாசன் புதுவையில் கனகசபை - இலக்குமியம்மாள் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.

நு}ல்கள்:

📖 குடும்ப விளக்கு - மணிமேகலை வெண்பா

📖 பாண்டியன் பரிசு - காதல் நினைவுகள்

📖 சேரதாண்டவம் - கழைக்கூத்தின் காதல்

📖 இருண்ட வீடு - அமைதி

📖 தமிழச்சின் கத்தி - சௌமியன்

📖 பிசிராந்தையார் - நல்ல தீர்ப்பு

📖 குறிஞ்சித்திட்டு - தமிழ் இயக்கம்

📖 அழகின் சிரிப்பு - காதலா? கடமையா?

📖 தமிழியக்கம் - சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

📖 இசையமுது - இரண்யன் அல்லது இணையற்ற வீரன்

📖 இளைஞர் இலக்கியம் - எதிர்பாராத முத்தம்

📖 திருக்குறள் உரை - கண்ணகி புரட்சிக் காவியம்

🌷 பாரதியார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் எனப்பெயர் மாற்றிக் கொண்டார்.

🌷 இவர் வாழ்ந்த காலம் - 29.04.1891 முதல் 21.04.1964 வரை

🌷 தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.

🌷 இவர் குயில் என்னும் இதழை நடத்தினார்.

🌷 தமிழ்நாட்டின் இரசு+ல் கம்சதேவ் என்று அழைக்கப்படுகிறார்.

🌷 (இரசு+ல் கம்சதேவ் உருசிய நாட்டின் மாக்கவிஞர்)

🌷 தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்.

🌷 பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே இவர்காலத்தில் உருவானது.

🌷 16 வயதில் இவர் புதுவை அரசின் கல்லு}ரியில் பேராசிரியராக பணியாற்றினார்.

🌷 18 வயதில் அரசு இவருக்கு அரசுக் கல்லு}ரியில் தமிழாசிரியார் பொறுப்பை வழங்கியது.

எ.கா: வாணிதாசன், கம்பதாசன், சுப்புரத்தினம்(சுரதா) என்று தம்மை அழைத்துக் கொண்டனர்.

➢ பிற்காலத்தில் சிறகடித்த வானம்பாடிகளுக்கு இவரே முதலெழுத்தும் தலையெழுத்தும் ஆவார்.

➢ 1920 ஆம் ஆண்டு பழநியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

➢ தமிழக அரசினால் ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது.

➢ திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்பு செய்யப்பட்டுள்ளது.

➢ சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - பொதுவுடைமை பற்றியது

➢ அழகின் சிரிப்பு - இயற்கையை வர்ணிப்பது

➢ குடும்பவிளக்கு - கற்ற பெண்களின் சிறப்பு பற்றியது

➢ இருண்ட வீடு - கல்லாத பெண்களைப் பற்றியது

** TNPSC Current Affairs **(((*10.08.17*)))

** TNPSC Current Affairs **(((*10.08.17*)))
உலக செய்திகள் :
இந்தியா உள்பட 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் விசா இல்லாமல் கர்த்தாருக்கு பயணம் செய்யலாம் என்று கத்தார் சுற்றுலாத்துறை சேர்மன் ஹாசன் அல் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
திசு நானோ மாற்றியமைத்தல்; “டி.என்.டி” என அழைக்கப்படும், மனித உடலில் சேதமடைந்த உறுப்பை குணமாக்கி மீண்டும் செயல்;பட செய்யும் புதிய தொழில் நுட்பத்தை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கென்யா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மனித கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரித்து வருகிறது. இந்த எரிபொருள்கள் சமையல் செய்யவும், வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
லண்டனில் தபால் மற்றும் பார்சல்களை கொண்டு செல்லும் இரயில் சேவை 14 ஆண்டுகளுக்கு பிறகு மேம்படுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாண அரசு முன்னாள் ஜனாதிபதியான ஒபாமாவின் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
கனடா நாட்டின் தூதரக அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரானா சர்க்கார்  நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் ஈடுபடும் வடகொரியா, அமெரிக்காவின் பிராந்தியம் அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
தேசிய செய்திகள் :
‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ தொடங்கப்பட்டு 75வது ஆண்டு தினத்தையொட்டி, வலிமையான, மதச்சார்பற்ற, தன்னிறைவு பெற்ற, ஜனநாயக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மாநிலங்கள் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மாவட்ட ஆட்சியர்கள் அனைவரிடமும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊரையும் நேரில் சென்று பார்வையிட்டு குறைபாடுகளை தீர்க்க வேண்டும் என்றும் 2022ம் ஆண்டிற்குள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்க்கான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களுக்கு தடை விதித்தும் மாநில தேர்வு வாரியத்திறகு ஐகோர்டு உத்தரவிட்டுள்ளது
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகள் தங்களுக்கு தேவையான என்.சி.இ.ஆர்.;டி புத்தகங்களை வாங்குவதற்கு புதிய இணைய தளத்தை வெளியிட்டுள்ளது.
கொசுக்களை ஒழிக்க ‘ஆயில் உருண்டை’ வீசும் திட்டத்தை தமிழகத்தில் வேலூர் மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக அஞ்சல் தினத்தை(அக்டோபர்; 09) முன்னிட்டு மாநிலம் முழுவதும் அஞ்சலக வளாகங்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு அஞ்சல் துறை  நிர்ணயித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் கிராமங்களில் “தண்ணீர் சிக்கன விழிப்புணர்வு” ஏற்படுத்தி வரும் நடுப்படுகையை(கிராமம்) சேர்ந்த மாரியம்மாளுக்கு நபார்டு வங்கி தண்ணீர் தூதர் விருது வழங்கியுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் பரிசலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்:
சினாவில் நடந்து வரும் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதி போட்டிக்கு இந்தியாவின் வர்தன் மற்றும் ஸ்ரீராம் முன்னேறியுள்ளனர்.
உலக தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் வான் நீகெர்க் தங்கப் பதக்கம் வென்றார்
உலக பாட்மிண்ட்ன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் 2வது சுற்றுக்கு நேரடி தகுதி பெற்றனர்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்; ஆடவர் 800 மீட்டர் ஓட்டத்தில் பிரான்ஸ் வீரர்; அம்ப்ராய்ஸ் பாஸீ தங்கப்பதக்கம் வென்றார்.
முத்தரப்பு ஒரு நாள் போட்டித்தொடரின் பைனலில் தென் ஆப்பிரிக்கா அணியை, இந்தியா ஏ அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது
பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய தலைவராக நஜம் சேதி நியமிக்கப்பட்டுள்ளார்;.
5வது சீசன் புரோ கபடி போட்டியில் 20வது லீக் ஆட்டத்தில் பெங்களுர் புல்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது
வர்த்தக செய்திகள் :
தனியார் துறை வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் ஜுன் காலாண்டு நிகர லாபம் 13.6 சதவீதம் அதிகரித்து ரூ.140.32 கோடியாக உள்ளது.
லாரி ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில் ஈசி டிரக் (நயளலவசரஉம) என்ற பெயரில் புதிய  செயலியை (ஆப்) ஈசிவே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் சரக்குகள் ஏற்றுமதி மற்றும் சேவை வரி உள்ளிட்டவற்றை அறியலாம்
தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க வேண்டும் எனில் ஏர் இந்தியாவின் சில கடன்களை தள்ளுபடி செய்யலாம் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார்
லெனோவா கே8 நோட் ஸ்மார்ட் போன் ஆகஸ்ட் 18ம் தேதி முதன் முதலாக இந்தியாவின் ஆன்லைன் வணிக தளமான அமேசானில் விற்பனை செய்யவுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் இனி மெசேஜ் அனுப்புவதைப் போல பணத்தையும் இன்ஸ்டன்ட் முறையில் அனுப்பும் புதிய சேவையை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த உணவகமான மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் சீனாவில் 2000 புதிய விடுதிகளை திறக்க உள்ளது.

Thursday, August 10, 2017

மிளகின் நன்மைகள்

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு.
மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.
வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு நல்ல நிவாரனி...

நம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!!

நம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!!
1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாஸங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாஸங்கள்(3)
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம் முதலில்
1.தமிழ் வருடங்கள்:-
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை
1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
2.அயணங்கள்:-
அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
3.ருதுக்கள்:-
ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது(ஆனி,ஆடி)
3.வர்ஷருது(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது(மார்கழி,தை)
6.சிசிரருது(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
4.மாஸங்கள்:-
தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)2.வைகாசி(ரிஷபம்)3.ஆனி(மிதுனம்)4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)8.கார்த்திகை(விருச்சிகம்)9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)11.மாசி(கும்பம்)12.பங்குனி(மீனம்)
5.பக்ஷங்கள்:-
பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்
6.திதிக்கள்:-
திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை 2.துதியை 3.திருதியை 4.சதுர்த்தி 5.பஞ்சமி 6.ஷஷ்டி7.சப்தமி 8.அஷ்டமி 9.நவமி 10.தசமி 11.ஏகாதசி 12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
7.வாஸரங்கள்:-
வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
8.நட்சத்திரங்கள்:-
நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
9.கிரகங்கள்:-
கிரகங்கள் ஒன்பது ஆகும்
1.சூரியன்(SUN)2.சந்திரன்(MOON)3.அங்காரகன்(MARS)4.புதன்(MERCURY)5.குரு(JUPITER)6.சுக்ரன்(VENUS)7.சனி(SATURN)8.இராகு(ASCENDING NODE)9.கேது(DESCENDING NODE)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:-
இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும்,நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
11.நவரத்தினங்கள்:-
1.கோமேதகம் 2.நீலம் 3.பவளம் 4.புஷ்பராகம் 5.மரகதம் 6.மாணிக்கம் 7.முத்து 8.வைடூரியம் 9.வைரம்.
12.பூதங்கள்:-
பூதங்கள் ஐந்து வகைப்படும்
              பூதங்கள்
  தன்மாத்திரைகள்
   நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
13.மஹா பாதகங்கள்:-
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை 2.பொய் 3.களவு 4.கள் அருந்துதல் 5.குரு நிந்தை.
14.பேறுகள்
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ் 2.கல்வி 3.வலிமை 4.வெற்றி 5.நன்மக்கள் 6.பொன் 7.நெல் 8.நல்ஊழ் 9.நுகர்ச்சி 10.அறிவு 11.அழகு 12.பொறுமை 13.இளமை 14.துனிவு 15.நோயின்மை 16.வாழ்நாள்.
15.புராணங்கள்:-
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம் 2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம் 5.விஷ்ணு புராணம் 6.கருட புராணம் 7.அக்னி புராணம் 8.மத்ஸ்ய புராணம் 9.நாரத புராணம் 10.வராக புராணம் 11.வாமன புராணம் 12.கூர்ம புராணம் 13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம் 15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.
16.இதிகாஸங்கள்:-
இதிகாஸங்கள் மூண்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.
இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது ஆகும்.