Friday, March 9, 2018

1824-ல் ஜோசப் அஸ்பிடின் என்ற ஆங்கிலேய கட்டடத் தொழிலாளி (கொத்தனார்) முதன் முதலில் சிமெண்டைக் கண்டுபிடித்தார்.

காவலர் தேர்வு : 2018 - பொது அறிவு

வேதியியல் - அன்றாட வாழ்வில் வேதியியல்

➤ 1824-ல் ஜோசப் அஸ்பிடின் என்ற ஆங்கிலேய கட்டடத் தொழிலாளி (கொத்தனார்) முதன் முதலில் சிமெண்டைக் கண்டுபிடித்தார்.

➤ போர்ட்லேண்ட் நாட்டிலுள்ள சுண்ணாம்புக் கல்லினை இப்பொருள் ஒத்திருந்ததால் அவர் கண்டுபிடித்த சிமெண்டைப் போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று அழைத்தனர்.

➤ சிமெண்ட் என்பது சுண்ணாம்புக்கல், களிமண், ஜிப்சம் போன்ற பொருள்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, வெப்பப்படுத்தி, குளிரவைத்து, பொடியாக்கிக் கிடைக்கும் ஒரு வேதிக் கலவையாகும். இது சாம்பல் நிற மாவு போன்றது.

➤ சிமெண்டுடன் நீரைச் சேர்க்கும் பொழுது சில மணி நேரத்தில் அது கெட்டித் தன்மை அடைகிறது என்று அறிகிறோம். இதற்குச் சிமெண்டின் கெட்டிப்படும் தன்மை என்று பெயர்.

சிமெண்டின் பயன்கள் :

➤ காரை, கற்காரை, வலுவூட்டப்பட்ட காரை போன்ற பல விதங்களில் சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது.

காரை :
➤ காரை என்பது சிமெண்ட்டும், மணலும் நீருடன் கலந்த கலவை ஆகும். வீடுகளில் சுவர்கள் கட்டுவதற்கும், அவற்றின் மேலே பூசுவதற்கும் தரை போடுவதற்கும் காரை பயன்படுகிறது.

கற்காரை (கான்கிரீட்) :
➤ சிமெண்ட், மணல், ஜல்லிக் கற்கள், நீர் சேர்ந்த கலவையே கற்காரை ஆகும்.

➤ கட்டடங்கள், பாலங்கள், அணைக்கட்டுகள் கட்டுவதற்கு இது பயன்படுகிறது.

வலுவூட்டப்பட்ட காரை
➤ இரும்புக் கம்பிகள் அல்லது எஃகு வலைகளைக் கற்காரையோடு சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரையாகும்.

➤ இந்தக் காரை மிகவும் வலுவானதாகவும் உறுதியானதாகவும் இருக்கும்.

➤ இது அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல்தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்குப் பயன்படுகிறது.

நெகிழிகள் (Plastic):

➤ நெகிழி என்பது (பிளாஸ்டிக்) ஆகும்.

➤ குழாய்கள், பொம்மைகள், பாத்திரங்கள், எழுதுபொருள்கள், மருத்துவச் சாதனங்கள் என நெகிழியின் பயன்பாடுகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. நெகிழி தண்ணீர்ப் புட்டிகள் இன்று இயல்பான பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இந்த நெகிழிப் பொருள்களும் ஒருவகை வேதிப் பொருள்களே.

PET என்றால் பாலி எத்திலீன் டெரிதாலேட் ஆகும்.

➤ PET புட்டிகள் போன்றவை வெப்பத்தால் இளகி விடுகின்றன. இவற்றைக் குளிர வைத்தால் மீண்டும் உறுதியாகின்றன. இவ்வகை நெகிழிகள் வெப்ப இளகும் நெகிழிகள் (Thermo plastic) என்று அழைக்கப்படுகின்றன. பாலிதீன் பைகள், பி.வி.சி (பாலிவினைல் குளோரைடு) குழாய்கள், வாளி, சீப்பு, விளையாட்டுப் பொம்மைகள் போன்றவை வெப்ப இளகும் நெகிழிகளால் ஆனவை.

➤ சமையலுக்குப் பயன்படும் பாத்திரங்களில் உள்ள நெகிழிக் கைப்பிடிகள் வெப்பப்படுத்தினால் இளகாது. ஏனெனில் இவை வெப்ப இறுகும் நெகிழி (Thermosetting plastic) வகையைச் சேர்ந்தவை ஆகும்.

➤ பேக்கலைட் மின்சாரத்தையும், வெப்பத்தையும் கடத்தாப் பொருளாகும். இது மின்காப்புப் பொருள்கள், மின் பொத்தான்கள், சமையல் கலன்களின் கைப்பிடிகள் போன்றவற்றைச் செய்யப் பயன்படுகிறது.

➤ மெலமைன் தீப்பிடிக்காத ஒரு பொருளாகும். மேலும் இது அதிக வெப்பத்தையும் தாங்கக்கூடியது. எனவே வீட்டிற்குத் தரையிட உதவும் டைல்ஸ், சமையல் பாத்திரங்கள், தீப்பிடிக்கா உடைகள் போன்றவற்றைத் தயாரிக்க மெலமைன் பயன்படுகிறது.

காவலர் தேர்வினை (2018) எதிர்கொள்ள சில ட்ரிக்ஸ் - பகுதி-1

காவலர் தேர்வினை (2018) எதிர்கொள்ள சில ட்ரிக்ஸ் - பகுதி-1

👍 அறிவித்துள்ள இரண்டாம் நிலை (ஆண்ஃபெண்) காவலா;களுக்கான 6,140 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மாh;ச் 11-ல் எழுத்து தோ;வு நடக்கிறது. பொது அறிவு 50, உளவியல் 30 என மொத்தம் 80 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை.

👍 முதன்முறையாக தோ;வு எழுதுபவா;கள், 1 மணி நேரம் 20 நிமிடத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு 'முழு மாதிhp தோ;வு" எழுதி படித்தால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம். தோ;வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது.

பொது அறிவு

👍 அறிவியல் பகுதியில் 15 முதல் 17 வினாக்கள் கேட்கப்படுகிறது. அவற்றில் இயற்பியல் பகுதியில் 4 முதல் 5 வினாக்கள் கேட்கப்படுகிறது. இயற்பியலில் அலகுகள், விதிகள், அறிவியல் அறிஞா;களின் கண்டுபிடிப்புகள், அளவிடும் கருவிகள் கேட்கப்படுகிறது.

👍 வேதியியல் பகுதியில் 4 முதல் 5 வினாக்கள் கேட்கப்படுகிறது. தனிமத்தின் குறியீடு, தனிம வாpசை அட்டவணை, மூலக்கூறு வாய்ப்பாடு, அமிலங்கள், காரங்கள் போன்ற பகுதிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

👍 உயிhpயல் பகுதியில் 4 முதல் 6 வினாக்கள் கேட்கப்படுகிறது. நோய்கள் மற்றும் நோய் அறிகுறிகள், பாக்டீhpயாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள், புரதச்சத்துகள், வைட்டமின்கள் போன்ற பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

👍 மனித உடலியியல் மற்றும் அவற்றில் இதயம், இரத்த சுழற்சி பகுதியில் வினாக்கள் கேட்கப்படுகின்றன.

👍 புவியியல் பகுதியில் 5 முதல் 7 வினாக்கள் கேட்கப்படுகின்றன. இந்திய புவியியலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. 10ம் வகுப்பு பாட புவியியல் பகுதியை தௌpவாக படிக்கவும். மாநில தலைநகரங்கள், முக்கிய மலைகளின் அமைவிடம், காடுகளின் சிறப்பு, விலங்குகளின் சரணாலயங்கள், முக்கிய ஆறுகள் மற்றும் அணைகளை வாpசைபடுத்தி படிக்கவும். போக்குவரத்து, தொழிற்துறை, உணவு பயிறு வகைகளில் முதன்மை வகிக்கும் மாநிலங்கள், மாவட்டங்கள், தாதுக்கள் காணப்படும் இடங்கள்.

👍 வரலாறு பாடத்தில் 5 முதல் 7 வினாக்கள் கேட்கப்படுகிறது. பண்டைக்கால இந்தியா, இடைக்கால இந்தியா பகுதிகளில் கலை, கட்டடக்கலை, இதிலிருந்து கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

👍 நவீன இந்தியாவில் இந்திய தேசிய இயக்கம் முக்கியத்துவம் பெறுகின்றது. கால வாpசை, முக்கிய ஆண்டுகள் வாpசைப்படுத்தி தௌpவாக படிக்கவும்.

👍 இந்திய அரசியல் அறிவியலில், அரசியலமைப்பு சட்டத்தின் வளா;ச்சி, அட்டவணை, முக்கிய ஷரத்துகள், சமீபத்திய சட்டத்திருத்தங்கள், ஜனாதிபதி, பிரதமா; முக்கிய பதவிகளை பற்றிய சிறப்பு அம்சங்கள், சமீபத்திய அரசியல் மற்றும் தோ;தல் கமிஷன்.

நோபல் பரிசு பெற்ற முதற்பெண்மணி யார்?


காவலர் தேர்வு - 2018 : பொதுத்தமிழ்

துணைப்பாடம் - சாதனைப் பெண்மணி மேரி கியு+ரி

1. கியூரி அம்மையார் பிறந்த ஆண்டு - 1867

2. அறிவியல் மேதை என்று அழைக்கப்படுபவர் யார்? - ஏ.எச்.பெக்காரல்

3. பொலோனியம் என்னும் தனிமத்தை கண்டுபிடித்தவர்கள் யார்? - பியரி கியூரி மற்றும் மேரி கியூரி

4. நோபல் பரிசு பெற்ற முதற்பெண்மணி யார்? - மேரி கியூரி

5. கியூரி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - போலந்து

6. மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும் புற்றுநோய் மற்றும் பலவகைத் தோல்நோய்களைக் குணமாக்கப் பயன்படும் தனிமம் எது? - ரேடியம்

7. மேரி கியூரி கண்டுபிடித்த ரேடியத்தை தனியார் நிறுவனம் ஒன்று ................. விலைக்கு வாங்க முன்வந்தது. - 50 இலட்சம் டாலர்களுக்கு

8. ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்தவர் யார்? - மேரி கியூரி

9. கியூரி அம்மையார் இறந்த ஆண்டு - 1934

10. ஐரின் மற்றும் ஜோலியட் கியூரி செயற்கைக் கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக, எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றனர். - 1935

11. கியு+ரி அம்மையார் குடும்பம் எத்தனை நோபல் பரிசு பெற்றது? - மூன்று

12. ரேடியம் என்னும் தனிமத்தை கண்டுபிடித்தவர்கள் யார்? - பியரி கியூரி மற்றும் மேரி கியூரி

13. பியரி கியூரியும், மேரி கியூரியும் எந்த அறிஞருடன் சேர்ந்து, இயற்பியலில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். - ஏ.எச்.பெக்காரல்

14. மேரி கியூரி எந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்? - 1903

15. கியு+ரி அம்மையார் தம் கணவருடன் சேர்ந்து முதலில் கண்டுபிடித்த பொருளின் பெயர் என்ன? - பொலோனியம்

16. எந்த கண்டுபிடிப்பிற்காக மேரி கியூரிக்கு 1911ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது? - ரேடியத்தின் அணு எடை

செயலிக் குறிப்பு :

  டீயஉம பட்டனை Pசநளள செய்து பாடங்கள் → பொதுத்தமிழ் → பயிற்சி → தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பகுதிக்குச் சென்று, தேர்விற்கு பயனுள்ள பல வினா விடைகளை பயிற்சி செய்து பயன்பெறுங்கள்....!