Wednesday, September 27, 2017

** TNPSC Current Affairs 27.09.2017 **

** TNPSC Current Affairs 27.09.2017 **
உலக செய்திகள் :
சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட முதன் முறையாக உரிமை வழங்கப்படவுள்ளது
அமெரிக்க அரசு 8 வடகொரிய வங்கிகள் மற்றும் 26 வங்கி அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது. வடகொரியாவுடனான பிரச்சனையை தீர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என அமெரிக்க நிதித்துறைச்செயலர் ஸ்டீவன் மினுசின் தெரிவித்துள்ளார்
சமூக வலை தளங்களான பேஸ்புக், டிவிட்டரைத் தொடர்ந்து, செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ் - அப்புக்கும் சீனாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றான பைன் தீவில் (அண்டார்டிகா) உள்ள பனிப்பாறையில் சுமார் 266 சதுர கிலோ மீட்டர் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்பாறை அண்டார்டிகாவில் மிகவும் வேகமாக உருகும் பனிப்பாறையாகும்
இந்தியாவிலிருந்து தக்காளி ஏற்றி செல்லும் கண்டெய்னர் லாரிகள் பாகிஸ்தான் எல்லையில் நுழைய அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. மேலும் உள்ளுர் சந்தையில் கடும் தட்டுப்பாடு இருந்த போதிலும் இந்தியாவிலிருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட மாட்டாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஐ.நா.வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க ஆதரவாக அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கோரிக்கைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுவோர் மீது ஐ.நா. கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பிலிப்பின்ஸ் நிறுவனங்களில் பணிப்புரியும் பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது
செப்டம்பர் 27ம் தேதி  -  கூகுள் நிறுவனத்தின் 19வது பிறந்த நாள்.
தேசிய செய்திகள் :
(செப்டம்பர் 26) - முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்  அவர்களின் (85வது) பிறந்த நாள்.
பாட்னாவை(பீகார்) சேர்ந்த ராஜ்குமார் (98 வயது) என்ற முதியவர் நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
ஆசிய அளவில் சிறப்பு வாய்ந்த முதல் 25 அருங்காட்சியகங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 அருங்காட்சியங்களும் இடம்பெற்றுள்ளன. அவை விக்டோரியா மெமோரியல் ஹால்(கொல்கத்தா), சிட்டி பேலஸ்(ஜெய்ப்பூர்), பகோர் கி ஹவேலி(உதய்பூர்), யோதஸ்தால்(போபால்), ஹால் ஆஃப் ஃபேம்(ஜம்மு காஷ்மீர்).
சர்வதேச தொழில்துறையில் சிறந்து விளங்கும் பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி, சந்தா கோச்சார், ஷிகா சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓஎன்ஜிசி) தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் சசி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 2020ம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களுக்கான 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் (செப்டம்பர் 26) நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மாநாட்டில் பங்குபெற்ற தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கத்தில் மாநில அரசு செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்குகிறது. அதற்கான வரைவு பட்டியலை அக்டோபர் 2ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிடுகிறது.
தமிழ்நாடு செரிமான நல அறக்கட்டளை சார்பில் ‘குடல் அழற்சி சர்வதேச மாநாடு’ சென்னை கிண்டியில் செப்டம்பர் 30ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவராக ஏ.எம். விக்கிரமராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள் :
கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை ஐசிசி அறிமுகபடுத்துகிறது. இந்த புதிய விதிமுறைகள் செப்டம்பர் 28க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவித்து உள்ளது. இந்த முறைப்படி கிரிக்கெட் களத்தில் மோசமாக நடந்து கொள்ளும் வீரர் கால்பந்து பாணியில் வெளியேற்றப்படுவார்.
17வது ஜுனியர் உலக கோப்பை கால்பந்துபோட்டி அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை கொல்கத்தா, கொச்சி, டெல்லி, மும்பை, கவுகாத்தி, கோவா அகிய 6 நகரங்களில் நடக்கிறது.
57வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா தங்கப்பதக்கம் வென்றார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை திரைப்படம் ஆக உருவாகிறது.
57வது தேசிய ஓபன் தடகள போட்டியில் குண்டு எறிதலில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த  தேஜிந்தர் பால் சிங் தங்கம் வென்றார்.
57வது தேசிய ஓபன் தடகள போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் ரயில்வே அணியைச் சேர்ந்த சரிதா பி.சிங் தங்கம் வென்றார்.
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற பி மண்டல அளவிலான வாலிபால் தொடரில் எத்திராஜ் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் 57வது தேசிய தடகள போட்டியில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் கேரளாவைச் சேர்ந்த ஜினு மரியா மானுவேல் தங்கம் வென்றார்.
வர்த்தக செய்திகள் :
நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்ட 2வது (ஆகஸ்ட்) மாதம் ரூ.90,699 கோடி வரி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு செலவு இந்த ஆண்டு ரூ.14,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மற்றும் போர்ட்போலியோ மேனஜ்மெண்ட் நிறுவனங்கள் கமாடிட்டி பங்குகளில் வர்த்தகம் செய்ய செபி அனுமதி வழங்க உள்ளது.
ரிலையன்ஸ் கேபிடல், மருத்துவ காப்பீட்டுக்கென தனி நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது
ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் அணிந்த ‘பாக்சர் ஷார்ட்ஸ்கள்’ ரூ.3.5 லட்சத்திற்கு நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது.
மாருதி சுசுகி, வேகன் ஆர் காரின் மொத்த விற்பனை இந்தியாவில் 20 லட்சத்தை தாண்டி சாதனைப் படைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் டேட்ஸன் ‘ரெடி – கோ கோல்டு’ புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

** TNPSC Current Affairs 26.09.2017 **

** TNPSC Current Affairs 26.09.2017 **
உலக செய்திகள்
விவசாய உற்பத்தியை 70 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று ஐ.நா. அறிவித்தத்தை அடுத்து ஆப்பிரிக்காவில் பயிர் சாகுபடியை அதிகரிக்க  “ஆளில்லா விமானங்கள் உதவியுடன் நவீன விவசாயம்” மேற்கொள்ளப்பட உள்ளது.
விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் களைக் கொல்லியான glyphosate -ஐ 2022ம் ஆண்டில் தடை செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
Utah State  பல்கலைக்கழகம் மற்றும் Southern Federal  பல்கலைக்கழகம் இணைந்து குறைந்த எடை மற்றும் அதிக பளபளப்பு உடையதுமான அலுமினிய படிகத்தை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர்.
துபாயில் பறக்கும் டாக்ஸி சோதனை செய்யப்பட்டது. விரைவில் விண்ணில் பறக்கும் டாக்ஸி சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று துபாய் இளவரசர் ஹம்தன்பின் முகமது தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கடற்படையை விரிவாக்கும் முயற்சியில் சீனா, ரஷ்யாவுடன் சேர்ந்து கூட்டு கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வங்க தேசத்தில் தங்கியுள்ள ரோஹிங்கயா முஸ்லிம் அகதிகளுக்காக இந்திய அரசு(தேசிய வேளாண் வர்த்தக சம்மேளனம் - என்ஏஎஃப்இடி) 620 டன் எடை கொண்ட உணவுப் பொருள்களை அனுப்பியுள்ளது.
உலகில் சதுர வடிவில் கொடிகள் கொண்ட நாடுகள் - சுவிட்சர்லாந்து, வத்திக்கன்
உலகிலேயே மிகப் பருமனான பெண் இமான் அப்துல் அட்டி(37வயது, எகிப்து) நேற்று (செப்டம்பர் 25)காலமானார்
நார்வே, ஃபின்லாந்து, அலஸ்கா, ஐஸ்லாந்து, கனடா மற்றும் ஸ்வீடன் ஆகிய 6 நாடுகளில் இரவிலும் சூரியன் உதித்து கொண்டிருக்கும். ஃபின்லாந்து நாட்டில் ஆயிரம் ஏரிகள் உள்ளது. அதிக நாட்கள் ஐஸ்கட்டி உறைந்திருக்கும் நாடுகள் பட்டியலில் கனடா 2வது இடத்தில் உள்ளது.
தேசிய செய்திகள்
நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் “சவுபாக்கிய யோஜனா(Saubhagya yojana) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இரயில்வே நிலையத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் விலையைக் கட்டாயம் அச்சிட வேண்டும் என இரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
சிறார் மீட்புத் திட்டம் - (இரயில் பயணத்தின் போது தொலைந்து போகும் சிறார்களை மீட்கும் மையங்கள்) உதவி மையங்களை மேலும் 47 ரயில் நிலையங்களில் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசுக்கு செலுத்த வேண்டிய வாடகை, தொலைபேசி, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டண பாக்கி எதுவும் இல்லை என அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக இந்த மாதம்(செப்டம்பர்) முதல் மாதந்தோறும் ரூ.1200 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஏ.சி.எஸ். அறக்கட்டளை தொடக்க விழாவில் பங்கேற்ற புதிய நிதிக்கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர் உருவ (30 அடி உயரம்) வெண்கல சிலை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
மின்னுற்பத்தித் திட்டங்கள், மின்கட்டண விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய தகவல் கையேட்டை தமிழக மின் வாரியம்(டான்ஜெட்கோ) வெளியிட்டுள்ளது. 
தொலைந்த படிப்பு சான்றிதழ்களின் நகல்களை பெற, ஆதார் வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும் 2 நாட்களில் நகல் கிடைக்கும் என தமிழக உயர்க்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
57வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சர்வீசஸ் வீரர் லெட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றார். ரெயில்வே வீரர் அபிஷேக் பால் வெள்ளிப் பதக்கமும், சர்வீசஸ் வீரர் மான்சிங் வெண்கலப் பதக்கமும் வென்றனர்
57வது தேசிய ஓபன் தடகள போட்டியில் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ரெயில்வே வீராங்கனை எல். சூர்யா தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது ஒரு நாள் போட்டி பெங்களுரில் செப்டம்பர் 28ம் தேதி நடக்கிறது. 5வது ஒரு நாள் போட்டி அக்டோபர் 1ம் தேதி நாக்பூரில் நடக்கிறது.
புதுக்கோட்டையில் நடைபெற்ற - புதுவை கோப்பைக்கான மாநில ஆடவர் கூடைப்பந்து போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2017 -2018 சீசன் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் விளையாடவுள்ள புணே எப்.சி. அணியின் புதிய பயிற்சியாளராக செர்பியாவின் ராங்கோ போபோவிச் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சென்னை லயோலா – ஐசிஏஎம், செயின்ட் ஜோசப்ஸ் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது.
தென்னிந்திய அளவில் சிபிஎஸ்இ மண்டல அளவிலான நீச்சல் போட்டி (8 மாநிலங்கள்) - 50 மீட்டர் நீச்சல் போட்டியில் சென்னையை சேர்ந்த ஹர்ஷிதா தங்கப் பதக்கம் வென்றார்.
வர்த்தக செய்திகள்
போட்ஸ்வானாவின் தேசிய மொழியில் “நமது ஒளி” என்று அழைக்கப்பட்ட உலகில் மிகப் பெரிய வைரம் (எடை – 1109 காரட்) ஏலம் விடப்பட்டது இதனை இங்கிலாந்து கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் 53 மில்லியன் டாலருக்கு வாங்கியது என்று கனடா லூகரா வைர கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது
பாரத் ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதந்தோறும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச சராசரி இருப்பை ரூ. 5000 லிருந்து ரூ.3000 ஆக குறைத்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்கி அதற்கு தலைவராக பிபேக் டெப்ரோயை நியமித்துள்ளார்.
ஆட்டோமொபைல் துறையினர் எதிர்பார்க்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் வளாகத்தில் 2018ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
உலகின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனம் - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(ஆர்ஐஎல்) 3வது இடத்தில் உள்ளது. இந்தியன் ஆயில் 7வது இடத்தில் உள்ளது என குளோபல் எனர்ஜி தரகுறியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) ரூ.27,460 கோடியில் சுத்திகரிப்பு ஆலை அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (ஐஓசி) இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.