Saturday, August 18, 2018

தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள்

தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு.
கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000

நியாண்டெர்தல்
மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

Friday, August 17, 2018

தமிழக மாவட்டங்கள் - தமிழ்நாட்டுத் தகவல்கள்

அரசியல் அமைப்பினைச் சார்ந்து தமிழகம் தற்போது சுமார் 30 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மக்கட் தொகை நிலவரம் 2001 ல் கணக்கெடுக்கப்பட்டது. 









Thursday, August 16, 2018

இலக்கணங்கள் (Grammar's)

ஒரு மொழிக்குச் சிறப்பையும், அழகையும் கொடுப்பது இலக்கணம் ஆகும். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும். 

தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. நம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. 

இலக்கண நூல்கள் 
  • தொல்காப்பியம் (Tolkappiyam)

வைணவ இலக்கியங்கள் (Vaishnava Literature)

வைணவ மதத்தினைப் பரப்பவும், வைணவ மத முதற்கடவுளான திருமாலின் புகழ் பாடவும் பல்வேறு இலக்கியங்கள் தமிழில் எழுந்தன. இந்த இலக்கியங்கள் வைணவத்தினைப் பரப்புவது மட்டுமல்லாமல் தமிழின் மணி மகுடங்களாக அமைந்தன. 









வைணவ இலக்கியங்கள் 

சைவ இலக்கியங்கள் (Shaiva Literatures)

சைவ மதத்தினைப் பரப்பவும், சைவ மத முதற்கடவுளான சிவபெருமானின் புகழ் பாடவும் பல்வேறு இலக்கியங்கள் தமிழில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுகளிலிருந்து எழுந்தன. இந்த இலக்கியங்கள் சைவத்தினைப் பரப்புவது மட்டுமல்லாமல் தமிழின் மைல் கற்களாகவும் அமைந்தன. இவற்றில் சில இலக்கியங்கள் சைவத்தின் நுண்ணிய கருத்தினையும், சித்தாந்த நெறிகளையும் வெளிப்படுத்தின. 





சைவ இலக்கியங்கள் 

சங்க இலக்கியங்கள் (Sangam Literatures)

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. இவற்றில் சங்க இலக்கியங்கள் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட தொன்மையான இலக்கியங்கள் ஆகும். இச் சங்க இலக்கியங்கள் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன. 

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத அய்யர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்களை எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுத்தடக்கப்பட்டுள்ளன 

எட்டுத்தொகை நூல்கள் 

பத்துப்பாட்டு நூல்கள் 


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்