Tuesday, October 10, 2017

TNPSC Current Affairs 04.10.2017


** TNPSC Current Affairs 04.10.2017 **
உலக செய்திகள் :
ஜெனிவா நகரில்(சுவிட்சர்லாந்து) உள்ள உலக சுகாதார அமைப்பின் இணை தலைவராக டாக்டர் சவுமியா சுவாமிநாதன் (தமிழகத்தை சேர்ந்தவர்) நியமனம் செய்யப்பட்டார்.
மியான்மரிலிருந்து நேற்று (அக்டோபர் 03) 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கயா அகதிகள் வெளியேறி வங்கதேசத்திறகுள் நுழைந்தனர்
பிரான்ஸின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு  சட்டத்திற்கு (நீதித்துறையின் அனுமதியின்றி சுலபமாக வீடுகளில் சோதனையிடுவது மற்றும் தங்களுடைய நகரங்களில் தனி நபர்களை தடுப்பு காவலில் வைப்பது போன்ற பல நடவடிக்கைகள் இதில் அடங்கும்) அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று (அக்டோபர் 04) உலக விலங்கு தினம்
ஸ்காட்லாந்தில் உள்ள பீனிக்ஸ் பனிமலை முற்றிலும் உருகிவிட்டது. கடந்த 300 அண்டுகளில் இந்த மலை 7 முறை உருகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸில்(பிரான்ஸ்) உள்ள ஈபிள் டவர் உலக புகழ்பெற்ற நினைவு சின்னமாக கருதப்படுகிறது. இது 1889ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதுவரை 300 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்த நினைவுச் சின்னம் என்ற பெருமையை ஈபிள் டவர் பெற்றுள்ளது.
உலகில் எந்த ஒரு நாட்டில் பயங்கரவாத சம்பவம் நிகழ்ந்தாலும், அதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரிஸில் உள்ள ஈபிள் டவர் விளக்குகள் அணைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வளரும் நாடுகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான தொண்டு நிறுவனத்தை “Little Things”(தன் சொந்த செலவில்) உருவாக்கியதற்காக மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர் “ராதவன் குணரட்ணராஜா” என்பவர்க்கு பிரத்தானியாவின் 787வது Point of Light  விருது அந்நாட்டு பிரதமரால் வழங்கப்பட்டது.
அயர்லாந்தில் உள்ள Limerick பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்ணீர் மற்றும் உமிழ்நீரிலிருந்து மின்சாரத்தை(Piezoelectricity) உற்பத்தி செய்யும் வழிமுறையினைக் கண்டறிந்துள்ளனர்.
தேசிய செய்திகள் :
இந்தியாவைச் சேர்ந்த கல்வியாளர் “பிரஜாபதி திரிவேதி”,  அமெரிக்காவில்  நாபா எனப்படும்  கௌரவமிக்க அமைப்புகளில் ஒன்றான தேசிய பொது நிர்வாகத்தின் மைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மிகச் சிறப்பாக செயல்பட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு விருது வழங்கப்பட்டது.
இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரெயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த சேவை கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சேவை கட்டண விலக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது
மீரட்டில், பிரதமர் நரேந்திர மோடிக்கு 100 அடி சிலை நிறுவப்படும் என்று உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஜே.பி. சிங் தெரிவித்துள்ளார்
ஆந்திர மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை பெற தெலுங்கை கட்டாயமாக்க வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்  
தமிழகத்தில் 5.95 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 8 மற்றும் 22ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வைகை அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை, மத்திய அரசின் அனுமதி பெற்ற தனியார் நிறுவனத்திடம் தமிழக அரசு ஒப்படைத்தது
திபாவளி பண்டிகையை முன்னிட்ட சிவகாசியில் இந்த ஆண்டு ஆன் - லைன் பட்டாசு விற்பனை நடைபெறுகிறது.
விளையாட்டு செய்திகள் :
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி 6வது இடத்தில் உள்ளார்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விஜயவாடாவில் நடைபெற்றது இதில் இந்தியா ஏ அணி நியூசிலாந்து ஏ அணியை வீழ்த்தியது.
84வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6ம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 2ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
பிபா 17வது ஜுனியர் உலக கோப்பை (17 வயதிற்குட்பட்டோருக்கான) கால்பந்து போட்டி நாளை அக்டோபர் 5ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை டெல்லி, கொல்கத்தா, கொச்சி, மும்பை, கவுகாத்தி, கோவா ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது.
சீனாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் காரைக்குடி மாணவர் எம். பிரனேஷ் தங்கப்பதக்கம் பெற்றார்.
ஆஸ்திரேலிய ஹாக்கி போட்டியில் இந்திய மகளிரி ஏ அணி டாஸ்மோனியா அணியை வீழ்த்தியது. இந்திய ஆடவர் ஏ அணி, ஆஸ்திரேலிய பிராந்திய அணியை வீழ்த்தியது.
16வது உலக கோபுகான் அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ. விளையாட்டு அரங்கில் அக்டோபர் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடக்கிறது.
வர்த்தக செய்திகள் :
சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு ஹைதராபாத்தில் நவம்பர் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும்
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்து உள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் (எஸ்இஇசட்) ஏற்றுமதி ரூ.1.39 லட்சம் கோடியாக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் கீழ் தேசிய கொள்ளைலாபம் தடுப்பு ஆணையத்தை அமைப்பதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவைக் குழு இன்று (அக்டோபர் 4) வழங்க உள்ளது.
ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் செப்டம்பர் மாத வாகன விற்பனை 27.5 சதவீதம் அதிகரித்தது
சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற மாதத்தில்(செப்டம்பர்) 23 சதவீதம் அதிகரித்துள்ளது
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை செப்டம்பர் மாதத்தில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment