Tuesday, October 10, 2017

TNPSC Current Affairs 03.10.2017

** TNPSC Current Affairs 03.10.2017 **
உலக செய்திகள்
ஜப்பானில் முதிவர்கள் தங்களது ஓட்டுநர் உரிமத்தை கைவிடும்படி அதிகாரிகள் ஊக்குவித்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் முதியவர்கள் வாகனம் ஓட்டாமலிருக்க ஊக்கப் பரிசுகளையும் வழங்கி வருகின்றனர்
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க வேண்டும் என்றும் அதன் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், டிரம்ப் அரசை கேட்டு கொண்டார்.
ரோஹிங்கயா இன மக்கள் விவகாரம் தொடர்பாக இந்தியா – வங்கதேச நாடுகளின் எல்லை பாதுகாப்புப் படைகள் இன்று (அக்டோபர் 03) பேச்சு வார்த்ததை நடத்த உள்ளனர்.
இலங்கையில் கல்வி பயிலும் 45 லட்சம் மாணவர்களுக்கு 5லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுரக்ஷா திட்டம் (இலவச காப்புறுதி திட்டம்) நேற்று (அக்டோபர் 02) நிறைவேற்றப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினின் வடக்கே உள்ள காட்டலோனியா பகுதி தன்னாட்சி பெறுவதற்கான பொது வாக்கெடுப்பில், 90 சதவீதம் பேர் தனி நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். காட்டலோனியாவை தனி நாடாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அந்த மாகாண தலைவர் “கார்லஸ் புயிக்டிமோன்ட்” தொடங்கி உள்ளார்.
குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியில் உள்ள வெளி நாட்டினர் ஈராக் ‘அரசின் நுழைவு இசைவு(விசா)’ இல்லாமல் அந்த நாட்டிலிருந்து வெளியே செல்லலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளளது.
வங்க தேசத்தில் தஞ்சடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் அரசு திட்டமிட்டுள்ளது.
ஜிகா, டெங்கு பாதிப்பைக் கண்டறியும் மலிவு விலை பரிசோதனை முறையை (ஒரு நீளப் பட்டையில் டெங்கு பாதிக்கப்ட்டவர்களின் இரத்தம் செலுத்தப்படும் டெங்கு பாதிப்பு இருப்பின் பட்டையின் நிறம் மாறும்)அமெரிகாவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்
தேசிய செய்திகள்
சீனாவுடனான எல்லைப் பகுதியில் நிலவி வரும் அசாதாரண சூழல்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழுவொன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை வகுத்துத் தருமாறு நீதி ஆயோக் அமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவிடத்தில் அவரது வெண்கலச் சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்.
தமிழகத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 05) டெங்கு ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
காற்று மாசு, உடல்நலக் கோளாறுகளை தவிர்க்க நெல் அரவை ஆலைகளுக்கு காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க உள்ளது. இதன் அடிப்படையில் விவசாய மின் இணைப்புக்கு, இணையத்தில் விண்ணப்பிக்கும் சேவையை தொடங்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்களில் படிக்கும் 90 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையால், விரைவில் மருத்துவ காப்பீடு வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
ஐசிசி தரவரிசையில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இரண்டு இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், ரோஹித் சர்மா 5வது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் நெஹரா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அஸ்வின் ராவீந்திர ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
வங்காள தேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் தொடர் நவம்பர் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை வியட்நாமில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் சார்பில் மேரி கோம் மற்றும் சரிதா தேவி கலந்து கொள்கின்றனர்.
29வது மாநில சப் - ஜுனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலையில் அக்டோபர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (நவம்பர்) மற்றும் டிசம்பர் மாத்தில் இந்தியாவிற்கு எதிராக 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர்போட்டி தொடரில் விளையாட உள்ளது
தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆடவர் பிரிவில் சென்னை கிறிஸ்;தவக் கல்லூரி அணியும். மகளிர் பிரிவில் சென்னை வைஷ்ணவ கல்லூரி அணியும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
வர்த்தக செய்திகள்
தற்போது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் அதே சமயம் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா - ஆண்டு இறுதி கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது. இதன் படி ரூ. 1299 உள்நாட்டு பயணத்துக்கும், ரூ. 2399 வெளிநாட்டு பயணத்தக்கும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது
இந்தியாவில் மின்சார வழித்தட வசதியை மேம்படுத்துதல், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார பயன்பாட்டை அதிகரித்தல் தொடர்பான திட்டத்திற்கு ரூ.655 கோடியை(100 மில்லியன் டாலர்கள்) கடனாக வழங்குவதற்கு ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி (ஏஐஐபி), ஆசிய வளர்ச்சி வங்கி(ஏடிபி) ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இணையதள சமவாய்ப்பு (நெட் நியூட்ரலிட்டி) தொடர்பான கொள்கைகள் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.9 சதவீதமாக குறைத்தது.
பிரிட்டணைச் சேர்ந்த முன்னணி விமான நிறுவனமான மோனார்க் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. மேலும் 3,00,000 முன்பதிவுகளையும் ரத்து செய்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கை மூடும் வாடிக்கையாளர்களிம் கட்டணமாக ரூ.500 ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலித்து வந்தது. இந்நிலையில் குறைந்த பட்சம் ஓராண்டுக்கு மேல் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டணத்தை ரத்து செய்துள்ளது.

No comments:

Post a Comment