Tuesday, October 10, 2017

TNPSC Current Affairs 08.10.2017

** TNPSC Current Affairs 08.10.2017 **
தேசிய செய்திகள்
குஜராத் மாநிலத்தில் வளர்ப்பு பிராணிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக “கருணா அனிமல் எமர்ஜென்சி சர்வீஸ்” என்ற பெயரில்; ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை திட்டம்(தொலை பேசி எண் - 1962) துவங்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தொழிலகங்களுக்கு சிறப்பு நிதியுதவி செய்யப்படும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வர்த்தகர்களிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரித்தொகை 15 நாள்களுக்குள் அவர்களது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார்.
அரசு ரகசியங்களை பாதுகாக்க, கோப்புகள் திருடுபோகாமல் தடுக்க “ரேடியோ பிரிக்வன்சி ஐடெண்டிபிகேஷன் (ஆர்எப்ஐடி)” மற்றும் “பைல் டிரக்கிங் சிஸ்டம்” என்னும் நவீன தொழில்நுட்பத்தை கர்நாடக அரசு பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
தலித்களுக்கு எதிராக கொடுமைகள் அதிகம் நடப்பது பற்றிய ஆய்வு பட்டியலில் மத்திய பிரதேசம் முதல் இடத்திலும், குஜராத் 5ம் இடத்தையும் பிடித்துள்ளது.
கோவாவில் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக அரசு மற்றும் அரசு நிதியுதவியுடன் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்களை வைக்க கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர் உயிரிழக்க நேரிட்டால் அவரது குடும்பத்துக்கு மத்திய அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
உலகச் செய்திகள்
பிரெங்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் டிசம்பர் மாதம் புதுச்சேரி வர உள்ளதால் புதுச்சேரியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் 4 ஆண்டுகளில் பாரீஸ் போன்று புதுச்சேரி நவீன நகரமாக மாற்றப்படும் என்று முதல்வர் நாராயணசாமி; கூறியுள்ளார்.
ஐரோப்பிய வளிமண்டலத்திலிருந்து கடந்த மாதம் 29ம் தேதி முதல் ருத்தேனியம்-106 ஐசோடோப் கதிரியக்க துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..  இதே போல் கடந்த ஜனவரி மாதம் ஐயோடின்-131 கதிரியக்க துகள்கள் ஐரோப்பிய வளிமண்டலத்தில் இருந்ததை காற்று தர கட்டுப்பாட்டு மையங்கள் கண்டுபிடித்தன.
குயின்ஸ்லாந்தில் (ஆஸ்திரேலியா) மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்திற்கு (இந்திய நிறுவனமான அதானி) எதிராக “நயூ சவுத் வேல்ஸ்” (ஆஸ்திரேலியா) மாகாணத்திலுள்ள “போண்டி” கடற்கரையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய விமானப்படையின் 85வது ஆண்டுவிழா காஸியாபாத்தில் (உத்திரபிரதேசம்) ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்றது.  இதில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா ஏற்றுக் கொண்டார்.
‘யு.எஸ். சிட்டிசன்ஷிப் அண்ட் இமிகிரேஷன் சர்வீசஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 11 ஆண்டுகளில் அமெரிக்காவில் பணிபுரிய விருப்பம் தெரிவித்து, ‘எச் 1பி’ விசா பெற விண்ணப்பித்த இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கை 21 லட்சம் என்றும் அனைத்து நாடுகளையும் சேர்த்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 34 லட்சம் தான் என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கடற்படை தளபதியான “முஹமது ஸகாவுல்லா” பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய கடற்படை தளபதியாக, “ஜாபர் மெஹ்மூத் அப்பாஸி” நேற்று(07-10-2017) பதவியேற்றார்.
வர்த்தக செய்திகள்
இளவயது வாடிக்கையாளர்களுக்காக, எஸ்.பி.ஐ. ‘பிரைம்’ கார்டு அறிமுகப்படுத்தியது.
பெங்களுருவைச் சேர்ந்த இடெய்ல் நிறுவனமான “பிக் பாஸ்கட்” 25 கோடி முதல் 30 கோடி டாலர் (இ சிரீயஸ்) வரை நிதி திரட்டும் பணியின் இறுதி கட்டத்தில் இருக்கிறது.  உணவு ரீடெய்ல் பிரிவில் 15 கோடி டாலர் முதலீடு செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹரி மேனன் தெரிவித்துள்ளார்.
மியூச்சுவல் பண்டின் பல்வேறு விதமான திட்டங்களை ஒருங்கிணைக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான “செபி” முடிவு செய்துள்ளது.
நடப்பு 2017-18ம் நிதி ஆண்டில், இரண்டாம் கட்டமாக மத்திய அரசின் தங்க சேமிப்பு பத்திரம் நாளை வெளியிடப்படுகிறது.  இதில் குறிப்பிட்ட வங்கிகள், அஞ்சலகங்கள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் நிறுவனம், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் தங்கக் கடன் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.  இதில் குறைந்தபட்சம் 1 கிராம் - 500 கிராம் வரை ஒருவர் முதலீடு செய்யலாம்.
கோவாவில் ஆண்டுதோறும், “ஐ.பி.டபிள்யு.” எனப்படும் இந்திய பைக் திருவிழா நடத்தப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய பைக் திருவிழாவான இது, இந்த ஆண்டு நவம்பர் 24, 25ல் நடக்கிறது.
வோல்வோ ஆட்டோ இந்திய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சார்லஸ் பிரம்ப் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ‘டுவெண்டி-20’ போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் “கார்லோஸ் நூஸ்மானை” சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) “ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெறுவதற்காக வாக்குக்கு பணம் கொடுத்தது போன்ற ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டதால் சஸ்பெண்ட் செய்துள்ளது.
பஞ்சாப் அணியுடன் தர்மசாலாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் இமாச்சலப் பிரதேச வீரர் “பிரஷாந்த் சோப்ரா தனது 25 வது பிறந்தநாளான நேற்று முச்சதம் விளாசி அசத்தினார்.  முதல் தர கிரிக்கெட்டில் இந்த சாதனைணை நிகழ்த்தும் 3வது வீரர் என்ற பெருமை கிடைத்துள்ளது.
ரோமானியா வீராங்கனை சிமோனா ஹாலெப் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.  டபுள்யு.டி.ஏ தரவரிசை வரலாற்றில், முதல் இடத்தை பிடிக்கும் 25வது வீராங்கனை
சீன ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ரபேல் நடால் (ஸ்பெயின்) தகுதி பெற்றார்.
5-ஆவது சீசன் புரோ கபடி போட்டியின் 113-ஆவது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது.

No comments:

Post a Comment