Tuesday, October 10, 2017

TNPSC Current Affairs 02.10.2017

** TNPSC Current Affairs 02.10.2017 **
உலகச் செய்திகள்
ஸ்வீடனின் ஸ்டோக்ஹோம் நகரில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஜெப்ரி ஹால் (அமெரிக்கா), மிக்கேல் ராஸ்பாஷ் (அமெரிக்கா), மைக்கேல் யங் (மியாமி) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புகைப் பிடிக்கும் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்க “ஐந்தாண்டு வேலைத் திட்டம்” சுகாதார அமைச்சகத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. 2030ம் ஆண்டு எடுக்கப்படும் விகித கணக்கில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை 5 சதவீதம் குறைக்கும் விகித்தில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இந்த வேலைத்திட்டத்திற்கு 20 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்க பிரிட்டன் அரசு முன் வந்துள்ளது.
சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு பிரத்யேக ஓட்டுநர் பயிற்சி பள்ளியைத் தொடங்க உள்ளதாக “இளவரசி நூரா மகளிர் பல்கலைக்கழகம்” அறிவித்துள்ளது.
சீனா திபெத் மாகாண தலைநகர் லாசா மற்றும் நியின்சி ஆகிய 2 நகரங்களை இணைக்கும் வகையில் புதிய நெடுஞ்சாலை(409 கி.மீட்டர்) அமைத்துள்ளது.  இதற்கு ‘வரி இல்லா எக்ஸ்பிரஸ் வே’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஜப்பான், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளிலும், சோவியத் யூனியனில் இடம்பெற்றிருந்த நாடுகளிலும் ஒலிபரப்பு சேவையைத் தொடங்க அகில இந்திய வானொலி திட்டமிட்டு வருகிறது.
தேசிய செய்திகள்
ஓ.பி.சி உட்பிரிவை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவராக ரோகிணி (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐரின் என்று சுருக்கமாக அழைக்கப்படும் Indian Registry for Internet Names and Numbers என்ற அமைப்பின் இணையங்கள் மீது ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஷீரடியில் (மகாராஷ்டிரா) புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று(02-10-2017) திறந்து வைத்தார்.
‘சன்சத் ஆதர்ஷ் கிராம்’ திட்டத்தின் கீழ் திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காத பகுதியாக அம்பாலா கிராமம் (ஜிதேந்திர சிங் தத்தெடுத்த) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உத்திபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலில் உலகப் புகழ்வாய்ந்த தாஜ்மஹால் இடம் பெறவில்லை.
தூய்மையை வலியுறுத்தி, விஷ்ணு (கோவை கல்லூரி) தயாரித்த குறும்படம், தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றது.
விளையாட்டு செய்திகள்
“ஐல் ஆப் மேன்” செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2 வது இடத்தை பிடித்துள்ளார்.
பிரான்சில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றில் பிரிட்டன் வீரர் சாஸ் டேவிஸ் வெற்றி பெற்றார்.
ஊக்கமருந்து பயன்படுத்தியதால் ஒன்பது நாடுகளுக்கு (ரஷியா, சீனா, ஆர்மேனியா, அஜர்பைஜான், பெல்லாரஸ், மால்டோவா, கஜகஸ்தான், துருக்கி, உக்ரைன்) அடுத்த ஒரு வருடத்திற்கு சர்வதேச பளு தூக்குதல் போட்டியில் பங்கேற்க தடை விதித்துள்ளதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் (ஐடபிள்யுஎஃப்) தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
மலேசியாவில் நடைபெற்ற ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் 15-வது சுற்றில் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) முதலிடம் பிடித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காயத்ரி இந்திய அளவில் நடைபெற்ற மலையேறுதல் போட்டியில் 5,345 மீட்டர் (17,825 அடி) உயரமுள்ள் லடாக் சிகரத்தை (ஹிமாச்சலப் பிரதேசம்) ஏறி சாதனை படைத்துள்ளார்.
வர்த்தக செய்திகள்
ஜப்பானின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக (ஜப்பானில் வெளியான அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2017 வரை உற்பத்தி செய்யப்பட்ட) 1.2 மில்லியன் கார்களை திரும்ப பெறுகிறது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு (பிஎப் படிவம்) தகவல்களை தாக்கல் செய்யாத 700 பிஎப் டிரஸ்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக “வருங்கால வைப்பு நிதி ஆணையம்” அறிவித்துள்ளது.
முதல் காலாண்டில் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வருவாய் 25 சதவீதம் சரிந்துள்ளதாக இந்தியா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளருக்குத் தெரிவிக்காமல் சிம் கார்டை செயலிழக்க வைத்த பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு ஹைதராபாத் நுகர்வோர் நல வாரியம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவின் கோடீஸ்வரர்கள் முதல் 10 இடங்களில் டீமார்ட் நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் தமானி 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதிக வேகத்தில் செல்லக்கூடிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கிய “எலான் மஸ்க்” பூமியின் எந்த மூலையில் இருந்தும் ஒரு மணி நேரத்தில் பூமியைச் சுற்றிவிடும் பயணிகள் வாகனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
வணிக ரகசியங்கள், தகவல்ளைத் திருடியதற்காக முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.2,740 கோடி (42 கோடி டாலர்) அபராதம் அமெரிக்க நீதிமன்றம் விதித்;தது.

No comments:

Post a Comment