Tuesday, October 10, 2017

TNPSC Current Affairs 06.10.2017

** TNPSC Current Affairs 06.10.2017 **
உலக செய்திகள் :
2017 ஆம் ஆண்டிற்கான “இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு” பிரிட்டனை சேர்ந்த “கசுவோ இஷிகுரோவு” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா – எத்தியோப்பியா இடையே வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளின் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரான்ஸ் லாவஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெட்ரோல் எரிபொருளால் இயங்கும் கார் (புரோட்டோ டைப் கார்) ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். மிக இலகுவான எடைக் கொண்ட இந்த கார் லிட்டருக்கு 1.153 கி.மீ செல்லும் திறன் உடையது
ஐ.நா. அமைதிப் படையில் 128 நாடுகளைச் சேர்ந்த 1,04,184 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த படையில் தற்போது 8, 108 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐ.நா. அமைதிப் படைக்கு அதிக வீரர்களை அனுப்பிய நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் அமைதிப் படையில் சேர்ந்துள்ளனர். இந்திலையில் ஐ.நா. அமைதிப் படையில் இந்தியாவிற்கு கூடுதல் அதிகாரங்கள் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொழில்முறை சிப்பாய்களும், பிற ராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்ட மசோதா ஒன்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
தெற்காசியப் பகுதியில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கான சக்தியாக இந்தியா திகழ்கிறது என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
கோஸ்டா ரிகா, நிகரகுவா, ஹோண்டுராஸ் ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளில் ‘நேட்’ என்று பெயரிடப்பட்ட வெப்ப மண்டல புயல் தாக்கியுள்ளது.
வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கயா அகதிகளை (சுமார் 9 லட்சம் பேர்) தங்க வைக்கும் விதமாக புதிய முகாம்களை அந்நாட்டு ராணுவம் அமைத்து வருவதாக நிவாரணத் துறை அமைச்சர் முஃபஸஸ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
தேசிய செய்திகள் :
தமிழகத்தின் 29வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் இன்று (அக்டோபர் 06) பதவியேற்றார்
லண்டனைச் சேர்ந்த ரீச் ஆல் யுமன் இன் வார்(ரா இன் வார்) என்ற அமைப்பு வழங்கும் அண்ணா போலிட்கோவ்ஸ்கயா விருதுக்கு ரஷ்யாவில் துப்பாக்கி சூட்டில் இறந்த பத்திரிக்கையாளரான கௌரி லங்கேஷ் (இந்தியா) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேகலாய மாநிலத்தின் 17வது ஆளுநராக பாஜக மூத்த தலைவர் கங்கா பிரசாத் நேற்று(அக்டோபர் 05) பதவியேற்றார்.
அமெரிக்காவில் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்திய வம்சாவளி விஞ்ஞானியான நிஷா டிசில்வாவக்கு தேசிய பல் மற்றும் முக எலும்பு மருத்துவக் கல்வியகம் (என்ஐடிசிஆர்) சார்பில் கௌரவம் மிக்க சாதனை ஆய்வாளர் விருதும், ரூபாய் 52.7 கோடி உதவி தொகையும் வழங்கப்பட்டது.
டெல்லி ஜந்தர்மந்தரில் எந்த விதமான போராட்டங்களும் நடத்தக் கூடாது என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
உயர்க் கல்விக் கற்க மாற்றுத் திறனாளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அரசு மற்றும் அரசு நிதிப்பெறும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க ஒடிஸா அரசு திட்டமிட்டுள்ளது.
சமூக ஆர்வலர் டி.எஸ். சலீம் அகமதுக்கு இந்திய மனித உரிமை கவுன்சில் சார்பில் 2017ம் ஆண்டிற்கான ‘மனித சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அக்டோபர் இறுதிக்குள் இணையதள சேவை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள் :
24 அணிகள் இடையிலான ஜுனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் இன்று (அக்டோபர் 06) தொடங்குகிறது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் பற்றிய சுயசரிதை எழுத உள்ளார்.
உள்நாட்டு தொடரில் முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ரஞ்சிகோப்பை இன்று (அக்டோபர் 06) தொடங்குகிறது. இதில் சி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி, ஆந்திராவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இத்தாலியில் உள்ள இமோலாவில் பாஸ் ஜி.பி. கார் பந்தயம் நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்த மஹாவீர் ரகுநாதன் 7 போட்டிகளில் 263 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் மற்றும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்
2018ம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தூதராக, நியூசிலாந்து ஆல் ரவுண்டரான கோரே ஆண்டர்சனை ஐசிசி நியமித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான மிக்கி ஆர்தரின் பதவிக்காலத்தை, 2019ம் ஆண்டு உலகக் கோப்பை வரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீட்டித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி, இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா 6 சர்வதேச ஆட்டங்களில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
வர்த்தக செய்திகள் :
போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் 100 முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10 வருடம் முதலிடத்தில் உள்ளார்.
அமெரிக்காவைச்சேர்ந்த மாஸ்டர்கார்டு நிறுவனம் இந்தியாவில் 80 கோடி டாலர் முதலீடு செய்யபோவதாக அறிவித்திருக்கிறது.
தூத்துக்குடி – கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கூகுள் நிறுவனம் தற்போது புதிய லேட்டஸ்ட் டெக்னாலஜியில் அமைந்த ஹெட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெட்போன் 40 மொழிகளை மொழி பெயர்க்கும் திறன் கொண்டது.
ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டை 65 ஆயிரம் டாலருக்கு ஏலம் விடப்பட்டது.
இந்தியாவின் நடப்பு ஆண்டில் பொதுப்பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) வரலாறு காணாத அளவில் வளர்ச்சி அடையும் என எர்ன்ஸ்ட் யங் நிதி ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ரீஇன்சூரன்ஸ்(ஜிஐசி-ஆர்.இ.) நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.11,370 கோடி நிதி திரட்ட உள்ளது.

No comments:

Post a Comment