Monday, July 3, 2017

உலக செய்திகள்: 30.06.17

உலக செய்திகள்:
சிரியாவில் ரசாயனத் தாக்குதல் நிகழ்ந்ததாக கூறப்படும் காட்சிகள் போலியானது எனவும் அமெரிக்கா அதன் பின்னணியில் உள்ளதாகவும் ரஷிய வெளியுறவு துறை குற்றம் சாட்டியுள்ளது.

இராணுவ கனரக போக்குவரத்துக்கு பயன்படும்  சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் அவியன் காய்ச்சல் பரவி வருகிறது. இது அங்குள்ள பறவைகளால் பரவி இருக்கலாம் என்று அந்நாட்டு வேளாண்மை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆமெரிக்க வாழ் இந்தியரான கிருஷ்ணா ஆர்.அர்ஷ என்பவர்; அமெரிக்காவின் வெளிநாட்டு சேவை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முந்தைய வரலாற்றில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்று சீனா கூறியது.1962 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற போரில்  இந்தியா சீனாவிடம்  தோற்றது. இதனை நினைவுப்படுத்தும் விதமாகவே சீனா அவ்வாறு கூறியுள்ளது.

மின்னஞ்சல் மூலம் ஊடுருவி கணினிகளின் செயல்பாட்டை முடக்கும் “வான்னாகிரை” ரான்சம்வேர் என்ற இணைய வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் கணினிகளின் செயல்பாடு முடங்கும் என்று ஐரோப்பிய யூனியன் காவல் துறை (யூரோபோல்) அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தேசிய செய்திகள் :

சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் 140 பேர் ஆந்திரா மீனவர்களால் சிறைப்பிடிப்பு.

சூரிய எரிசக்தி மற்றும் காற்று எரிசக்தி போன்ற புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் எரிசக்தியை அரசின் மின்தொகுப்பில் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகளை  முன்வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கினால் தான்    பொய்புகார்களும் அவதூறான கருத்துக்கள் பரவுவதை தடுக்க முடியும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டின் கணக்கின் படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் ரூ.4500 கோடியாகும். இதுவரை சுவிஸ் வங்கியில் இருந்த இந்தியர்களின் மொத்தப்பணத்தில் இது மிகவும் குறைவானது என சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஐரோப்பிய விண்வெளி தளத்திலிருந்து ஏரியான் ராக்கெட் சுமந்து சென்ற ஜிசாட்-17 செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம். இவை 3477 கிலோ எடைக்கொண்டதாகும்.

விளையாட்டு செய்திகள்:

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றதற்காக ஆந்திர அரசின் வருவாய் துறை  அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார் பிவி சிந்து.

2017 ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டிகள் ஜுலை 5 ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் நடைபெற உள்ளன.

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பிரிஸ்டனில் நேற்று ஆஸ்திரேலியாவும் இலங்கை அணியும் மோதி கொண்டனர். இலங்கை வீராங்கனை சமாரி யட்டப்பட்டு 178 ரன்கள் குவித்து சாதனைபடைத்துள்ளார்.

இந்திய ஏ அணியின் கேப்டன்களாக கருண்நாயர் மற்றும் மணீஷ்பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்றாவது ஆட்டத்தில் 2 வது  வெற்றி பெறுமா இந்தியா? இன்று மேற்கிந்தியத் தீவு அணியுடன் மோதுகிறது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7வது ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி.

வர்த்தக செய்திகள் :

நால்கோ (நேஷனல் அலுமினியம் கம்பெனி) நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களுக்கு பிறகு பங்கு சந்தையில்  12 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

ஏர் இந்கியா நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்து இண்டிகோ நிறுவனம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 23 புள்ளிகள் உயர்வு.
[01/07, 5:50 PM] T We Shine: ** Today Current Affairs **
** We Shine Daily Quiz - 01.07.17 **
More Info - www.weshineacademy.com
Any Queries - weshineacademy@gmail.com

உலக செய்திகள்:
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு சிறந்த குடியேற்றவாசி விருது வழங்கப்பட உள்ளது. அடோப் தலைவர் சாந்தனு நாராயண், அமெரிக்க சர்ஜன் ஜென்ரல் விவேக் மூர்த்தி ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4 அன்று இந்த விருது வழங்கப்பட உள்ளது.

தெற்கு பிரிட்டனின் ரீடிங் டௌன் நகரைச் சேர்ந்தவர் அர்னவ் சர்மா இவர் அறிவுக் கூர்மையைக் கண்டறிய ‘மென்ஸா’ தேர்வை எழுதினார். இத்தேர்வில் வெளிப்படும் நுண்ணறிவு எண் (ஐ.கியூ) மூலம் ஒருவரின் அறிவுத் திறனை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இந்நிலையில் அர்னவ் சர்மாவின் ஐ.கியூ -162 என கண்டறியப்பட்டது. மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பிரபல இயற்பியல் மேதை ஸ்டீஃபன் ஹாக்கிங் ஐ.கியூ -160 என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் சரீன் விஷ வாயுவைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பது உண்;;;மை தான் என ரசாயன ஆயுதங்கள் தடை கண்காணிப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

தைவானுக்கு 1400 கோடி டாலர் மதிப்பிலான கப்பல் அழிப்பு ஏவுகணைகள், விமானக் கண்காணிப்பு ரேடார்கள் உள்ளிட்ட 7 வகை ராணுவ தளவாடங்கள் வழங்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கணினிகளின் செயல்பாட்டை முடக்கும் புதிய வகை ரான்சம்வேர் இணைய வைரஸ் உலகின் பல பாகங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகெங்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவதே புதிய ‘பெட்யா’ இணைய வைரஸைப் பரப்பியவர்களின் நோக்கம் என ஐரோப்பிய யூனியனின் இணைய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலிய ராணுவத்தில் இணையதள பிரிவு ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். உள்ளிட்ட அன்னிய பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதே இதன் நோக்கமாகும்.

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் அங்கு ஆட்சியில் இருந்த அரசு கவிழ்ந்தது.

ஜெர்மனியில் அடுத்த வாரம் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை முதல் முறையாக சந்தித்துப் பேசவுள்ளார்.

தேசிய செய்திகள்:

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் சரக்கு –சேவை வரிவிதிப்பு நடைமுறை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்;;;;;த வரிவிதிப்பு கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வந்ததால் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். இவர் 15வது தலைமை வழக்கறிஞர் ஆவார். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது.

வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்கும் படி, 3768 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பசி மற்றும் ஊட்டச்சத்து இன்மைக்கு எதிராகப் போராடி வரும் அங்கித் கவத்ரா (25) எனும் இந்திய இளைஞருக்கு இங்கிலாந்து ராணி இளம் தலைவர்கள் விருது வழங்கி கௌரவித்துள்ளார். இந்தியாவில் அங்கித் ‘ஃபீடிங் இந்தியா’ என்னும் அமைப்பைத் தொடங்கியுள்ளார். 2014ல் 5 பேரோடு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இன்று இந்தியா முழுக்க 43 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து ராணி இளம் தலைவர் விருதுக்காக உலகம் முழுவதுமுள்ள 60 தலைசிறந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களின் வயது 18 முதல் 29க்குள் இருக்க வேண்டும்.

மும்பையின் முக்கிய ரயில் நிலையமான சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தின் பெயர் ‘சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் முனையம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரில் கடல்மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் 500க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர்.

விளையாட்டுச் செய்திகள்:
மண்டல வாரியாக பயிற்சி அளிப்பதற்காக இந்திய பாட்மிண்டன் சங்கம் உருவாக்கியுள்ள பயிற்சியாளர்கள் குழுவில் முன்னாள் வீரர்களான அரவிந்த் பாட், ஜூவாலா கட்டா உள்ளிட்டோர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி கண்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய தடகள போட்டிகள் ஒடிஸா மாநிலம் புவனேஷ்வரில்  6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. இது 22வது ஆசிய தடகள போட்டி ஆகும். இந்த தொடரில் இந்தியா சார்பில் 95 பேர் அடங்கிய அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளரான அஸ்வின் ஒரு நாள் போட்டியில் விரைவாக 150 விக்கெட்டுகள் எடுத்த சுழல் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் 2வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய ‘ஏ’ மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிய உள்ள நிலையில் மேலும் 2 ஆண்டுகள் இந்த பதவியில் நீடிப்பார் என இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகார பூர்வமாக அறிவித்தது. இவர் 2015ம் ஆண்டு முதல் இப்பதவியில் இருந்து வருகிறார்.

2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் பிவிசிந்து வெள்ளி பதக்கம் வென்றதற்காக பிவி சிந்து ஆந்திர அரசின் வருவாய் துறை அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார். சிந்துவை நேரடியாக நியமிப்பதற்கான அரசு ஆணை கடந்த மாதம் ஆந்திர சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வர்த்தக செய்திகள்:
நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள மின்சாரம், உருக்கு, சிமென்ட், உரம், சுத்திகரிப்பு பொருள்கள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், நிலக்கரி ஆகிய எட்டு துறைகளின் உற்பத்தி சென்ற மே மாதத்தில் 3.6சதவீதம் சரிந்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பஸ்லர் ‘என்எஸ்160’ என்ற புதிய மாடல் பைக்கை புது தில்லியில் அறிமுகப்படுத்தியது.

சரக்கு மற்றும் சேவை வரி இன்று முதல் அமலுக்கு வரவுள்ளதால் புதிய குடியிருப்புகளின் விலை உயரும் என கட்டுமான மேம்பாட்டாளர் அமைப்பான கிரெடாய் தெரிவித்துள்ளது.

எல் அண்டு டி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக எஸ்.என்.சுப்ரமணியன் இன்று பதவி ஏற்கிறார்.

பி.எம்.டபிள்யு (பவேரியன் மோட்டார் ஒர்க்ஸ்) கார்நிறுவனம் மும்பையில் நேற்று முன்தினம் புதிய 5 சீரிஸ் கார்களை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை 49.90 லட்சம் ரூபாய் ஆகும்.

மாருதி சுசுகி இந்தியா தனது கார் விலைகளை 3மூ வரை குறைத்து சரக்கு மற்றும் சேவை வரிதிட்டத்தின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.

No comments:

Post a Comment